Latest Updates
-
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
சாணக்கிய நீதி படி இந்த ஒரு குணம் இருப்பவர்கள் அதிர்ஷ்டமே இல்லனாலும் வெற்றிபடிக்கட்டுல வேகமா ஏறிடுவாங்களாம்...!
சாணக்கியரின் கொள்கைகள் இன்றளவும் பிரபலமாக இருப்பதற்கு காரணம் அது எக்காலத்திற்கும் பொருந்துவதாக இருப்பதால்தான். சாணக்கியரின் அறிவுரைகளை ஒருவர் பின்பற்றினால் தாமதமானாலும் நிச்சயமான மற்றும் நிலையான வெற்றியைப் பெறலாம்.
சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி ஒருவர் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு அடிப்படை தகுதிகளில் ஒன்று தைரியம். தைரியம் இல்லாமல், ஒரு நபர் வாழ்க்கையில் எந்த கனவையும் நனவாக்குவது கடினம்.

உண்மையில், உங்கள் துக்கத்தையோ, வலியையோ அல்லது பயத்தையோ நீக்குவதற்கான உறுதி அல்லது தைரியம் உங்களிடம் இருந்தால், அந்தத் தருணத்தை கடப்பது என்பது எளிதாகிவிடும். வாழ்க்கையின் எந்தத் துறையிலும் உங்கள் வெற்றி அல்லது தோல்வி உங்கள் சிந்தனையைப் பொறுத்தது. தோல்வியை நீங்கள் தைரியமாக ஒப்புக்கொண்டால் அந்த தருணமே வெற்றிதான்.
உங்களுக்குள் தைரியம் இருக்கும் வரை யாரும் உங்களை வாழ்க்கையில் தோற்கடிக்க முடியாது. சவால் அல்லது பயம் உங்களுக்கு முன்னால் இருக்கும் போது அதனை எதிர்கொள்ள தைரியம் மிகவும் அவசியம். அத்தகைய நேரத்தில், அந்த விஷயங்களை எதிர்கொள்ள உதவும் வலிமை தைரியம் என்று அழைக்கப்படுவதில்லை, இது வலிமை இல்லாத நிலையில் முன்னேறுவதற்கு உதவும் தைரியமாகும்.
தைரியம் இல்லாததற்குக் காரணம், ஒரு விஷயத்தை உங்களுக்கு செய்வதற்கு கடினம் என்பதல்ல, மாறாக, நீங்கள் அதை செய்வதற்கு துணியவில்லை என்பதுதான். யாரோ ஒருவர் உங்கள் மீது செலுத்தும் ஆழமான அன்பு உங்கள் பலமாக மாறும், ஆனால் நீங்கள் ஒருவரை ஆழமாக நேசிக்கும்போது, அது உங்களுக்கு தைரியத்தை அளிக்கிறது.
ஒரு மனிதனுக்குள் காணப்படும் அனைத்து குணங்களுக்கிடையில் தைரியம் மிக முக்கியமான குணமமாகும், ஏனெனில் அது இல்லாமல், நாம் எந்த குணத்தையும் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள முடியாது. ஒரு தைரியமான நபர் அதிர்ஷ்டத்தை குறைவாகவும், திறமையை அதிகமாகவும் நம்புகிறார். துரதிர்ஷ்டமும் அதிர்ஷ்டமும் அவரது இடது மற்றும் வலது கைகளைப் போன்றது, அதை அவர் தனது முன்னேற்றத்திற்கு மிகவும் தைரியமாக பயன்படுத்துகிறார்கள்.
உங்கள் வாழ்க்கையில் வரும் ஒரு நபர் அல்லது அனுபவம் அனைத்துமே தைரியத்திற்கு ஒரு சிறந்த காரணமாகிறது, இது உங்களை அச்சமற்றதாக ஆக்குகிறது. இவை அனைத்தும் ஒரு நபருக்குள் தைரியத்தை அதிகரிக்கச் செய்கின்றன. இந்த தைரியம் அதிகரிக்கும் போது ஒருவர் அதிர்ஷ்டத்தின் உதவி இல்லாமலே வெற்றியையும், முன்னேற்றத்தையும் அடையலாம்.



Click it and Unblock the Notifications
