Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை பின்பற்றுபவர்கள் வாழ்க்கையில் பெரிய ஆளா வருவாங்களாம்...!
Chanakya Niti: அறிவுரை என்பது அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு விஷயமாகும். ஆனால் சில அறிவுரைகள் நம் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் மூலம் அதுவரை வாழ்க்கை மீதிருந்த பார்வைகள் மாறும், வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்கத் தொடங்குவோம். இத்தகைய அறிவுரை சில சமயங்களில் அனுபவம், சூழ்நிலை, புத்தகம் அல்லது மற்றவர்களின் வாழ்க்கையிலிருந்து நமக்கு கிடைக்கிறது.
நம் வாழ்க்கையை மாற்றும் பல அறிவுரைகளை கூறிய ஒரு சிறந்த ஞானி சாணக்கியர் ஆவார். சாணக்கியரின் அறிவுரைகள் கடந்த காலம் மட்டுமின்றி எக்காலத்திற்கும் பொருத்தமானவை. வாழ்க்கையில் எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ள சாணக்கியரிடம் பதில் இருந்தது. சாணக்கியரின் அனுபவங்கள் அனைத்தும் சாணக்கிய நீதி என்ற நூலில் தொகுக்கப்பட்டது. வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்ற சாணக்கியர் கூறும் அறிவுரைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கல்வியே முக்கியம்
வாழ்க்கையில் எதை சேர்த்தாலும், சம்பாதித்தாலும் அது கல்விக்கு ஈடாகாது என்கிறார் சாணக்கியர். செல்வமும், அழகும், உறவுகளும் எந்நேரமும் அழிந்து போகலாம். ஆனால் நாம் பெற்ற கல்வியும், அறிவும் சாகும் வரை நம்முடன் இருக்கும். எந்த நெருக்கடியிலும் இந்த இரண்டுமே நமக்கு இரண்டுமே பயனுள்ளதாக இருக்கும்.
இரகசியங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது
இரகசியங்கள் எப்போதும் ரகசியங்களாகவே இருக்க வேண்டும் அவற்றை பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். நம்முடைய பலவீனங்கள், ரகசியங்கள், திறமைகள் அல்லது பலம் எதையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஏனென்றால் அவை எப்போது வேண்டுமென்றாலும் அவை நமக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம்.
மற்றவர்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்
நாம் செய்த தவறுகளிலிருந்து எப்போதும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் வாழ்க்கையில் முன்னேற் அது மட்டும் போதாது. ஆனால் நம்முடைய தவறுகளிலிருந்து மட்டுமல்ல, மற்றவர்களின் தவறுகள் மற்றும் அனுபவங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் அவையும் நமக்கு உதவியாக இருக்கும்.. மற்றவர்களின் தோல்விகள் மற்றும் வெற்றிகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவை எதிர்காலத்தில் சரியான முடிவுகளை எடுக்கவும், வாழ்க்கையில் முன்னேறவும் உதவும்.
மூன்று கேள்விகள்
சாணக்கியர் எந்தவொரு விஷயத்தையும் செய்வதற்கு முன், மூன்று கேள்விகளை உங்களுக்குள் கேட்க வேண்டும் என்று கூறுகிறார். நான் ஏன் இதைச் செய்கிறேன், இதனால் என்ன பலன்கள் கிடைக்கும், இதில் நான் வெற்றி பெறுவேன் என்பதுதான் அந்த கேள்விகள். இந்த கேள்விகளுக்கு திருத்திகரமான பதில் கிடைத்தால் மட்டுமே அந்த காரியத்தை செய்ய வேண்டும்.
கடன்தான் மிகப்பெரிய எதிரி
மன அமைதி மற்றும் நிதிரீதியான முன்னேற்றத்தை விரும்புபவர்கள் ஒருபோதும் கடன் வாங்கக்கூடாது என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். ஏனென்றால், பிற்காலத்தில் அவை நமது இலக்குகளை அடைவதில் நமக்கு முன் மிகப்பெரிய தடையாக மாறும் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
