Latest Updates
-
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்!
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை பின்பற்றினால் உங்க வாழ்க்கையில் பணக்கஷ்டம் எப்போதும் வராதாம்...!
Chanakya Niti: ஆச்சார்யா சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையின் பல விவகாரங்கள் குறித்து தனது அனுபவங்களை எழுதியுள்ளார். தன் அறிவை தந்திரமாக பயன்படுத்துவதில் சிறந்த பண்டிதர் என்பதால் அவர் கௌடில்யர் என்று அழைக்கப்படுகிறார்.
இராஜதந்திரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் போன்ற விஷயங்களில் விஷ்ணுகுப்தாவுக்கு நல்ல அனுபவம் உண்டு. சாணக்கியர் எழுதிய நெறிமுறைகள் இன்றும் மனிதர்களுக்கு பல வாழ்க்கை முறைகளை கற்பிக்கிறது. அவற்றை கடைபிடித்தால் மனிதனின் வாழ்க்கை கவலைகள், சிரமங்கள் இன்றி சுமூகமாக செல்லும் என்பது பெரியோர்களின் நம்பிக்கை.

இந்த விஷயங்களை தங்கள் வாழ்க்கையில் பின்பற்றினால் அவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் பணக்கஷ்டம் வராது என்கிறார் சாணக்கியர். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
லட்சுமிதேவி
சாணக்கிய நீதியின் படி, வீட்டில் எப்போதும் கவலைகளும் கண்ணீரும் இருக்கும். வீட்டில் எப்போதும் போர்ச் சூழல் இருந்தால் அந்த வீட்டில் லட்சுமிதேவி வசிக்க மாட்டார். லட்சுமிதேவி அமைதி நிலவும் இனிமையான வீட்டில் எப்போதும் வாழ்கிறார்.
கர்வம் கொள்ளக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி எந்தவொரு மனிதனும் பணத்தின் மீது வெறி கொள்ளக்கூடாது. ஏனென்றால் பணம் சம்பாதித்த பிறகு ஒருவரிடம் கர்வம் இருந்தால், அப்படிப்பட்டவர்களிடம் நீண்ட காலம் பணம் இருக்காது. எல்லோரையும் மதித்து, பணம் வந்தாலும் அடக்கமாக இருக்க வேண்டும், அப்போதுதான் பணம் அவர்களிடம் நிலைத்திருக்கும்.
பணத்தை செலவழிக்கும் முறை
சாணக்கிய நீதியின்படி, நாம் கஷ்டத்தில் இருக்கும் போது பணம் உண்மையான நண்பன் போல செயல்படுகிறது. பணத்தை தொண்டு, முதலீடு மற்றும் சுய பாதுகாப்புக்கு பயன்படுத்த வேண்டும். சொத்துக்களை குவிப்பதற்காக மட்டுமே பணத்தை செலவழிக்கக் கூடாது. அதே சமயம் செல்வத்தை தண்ணீரைப் போல வீணாக்கக் கூடாது. சிந்தனையுடன், பணத்தை சரியான நேரத்தில் செலவிட வேண்டும்.
பணம் சம்பாதிக்கும் முறை
சாணக்கிய நீதியின் படி பணத்தை எப்போதும் நேர்மையாக வழியில் சம்பாதிக்க வேண்டும். ஒழுக்கக்கேடான வழிகளில் சம்பாதிக்கும் பணம் நீண்ட காலம் நிலைக்காது. பணம் எப்போதும் சரியான வழியில் சம்பாதிக்க வேண்டும், அதுதான் நீண்ட காலம் நிலைக்கும்.
தானியக் களஞ்சியம்
வீட்டில் எப்போதும் தானியக் களஞ்சியத்தை முழுவதுமாக வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஸ்டோர் ஹவுஸ் நம் வயிற்றை நிரப்புவது மட்டுமல்லாமல், வீட்டில் செல்வத்தை எப்போதும் நிலைத்திருக்க வைக்கிறது. தானியம் காலியாகும் முன்பு புதிய தானியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம், லட்சுமி தேவியின் அருள் எப்போதும் உங்கள் மீது இருக்கும். மேலும் உணவை ஒருபோதும் அவமதிக்கக் கூடாது.



Click it and Unblock the Notifications

