Latest Updates
-
மேஷ ராசியில் உருவாகும் மங்களாதித்ய ராஜயோகம் 2026: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியப் போகுது.. -
சப்பாத்திக்கு ஒருடைம் முட்டைக்கோஸ் பச்சை குருமா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்! உங்கள் தனிப்பட்ட சாட்கள் இனி பாதுகாப்பில்லை? இந்த மாற்றத்தை உடனே கவனிங்க! -
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்!
சாணக்கிய நீதி படி உங்க நண்பரிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க உங்களுக்காக உயிரையே கொடுப்பாங்களாம்...!
Chanakya Niti: சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, நாம் நட்பை உருவாக்க விரும்புவதற்கு முன்பு ஒரு நபரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது எப்போதும் நல்லது. சாணக்கியரின் கூற்றுப்படி, சரியான நண்பரை எவ்வாறு அடையாளம் காண்பது? நம் நண்பர்கள் நல்லவர்களா கெட்டவரா என்பதை எப்படி அறிவது?
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நல்ல அல்லது உண்மையான நண்பர் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற சொத்து. நண்பர்கள் இல்லாத ஒருவருக்கு, வாழ்க்கை வீணாகத் தொடங்குகிறது. வாழ்க்கையில் அனைவருக்கும் நண்பர்கள் தேவை, ஆனால் உங்கள் சரியான நண்பர் அல்லது நண்பர்கள் யார் என்பதை எப்படி அடையாளம் காண்பது? ஒருவேளை நீங்கள் உங்கள் எதிரிகளுடன் நண்பர்களாக பழகுகிறீர்களா?

இப்படி நடந்தால் உங்கள் வாழ்க்கையே பாழாகிவிடும் என்கிறார் சாணக்கியர். உண்மையான நண்பர்களை அடையாளம் காண சாணக்கியர் கூறும் வழிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எப்படிப்பட்ட நண்பரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
உங்கள் முன் நாகரீகமாகப் பேசி முதுகுக்குப் பின்னால் உங்கள் வேலையைக் கெடுக்கும் நண்பரை விட்டுவிடுவது நல்லது. சாணக்கியறின் கூற்றுப்படி, அப்படிப்பட்ட நண்பன் விஷமுள்ள பாம்பு போன்றவர். எனவே உங்கள் முன் கண்ணியமாகப் பேசிவிட்டு, உங்கள் முதுகுக்குப் பின்னால் உங்களுக்கு தீமையை ஏற்படுத்துபவர்களுடன் ஒருபோதும் நட்பு கொள்ளாதீர்கள்.
குடும்ப மகிழ்ச்சி முக்கியமானது
ஒரு வீடு மகிழ்ச்சியாக இருக்க, அந்த வீட்டின் குழந்தைகள் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். குழந்தைகளை நன்றாக வளர்ப்பது பெற்றோரின் கடமை. மேலும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் இடையே நம்பிக்கை இருப்பது மிகவும் முக்கியம். அந்த குடும்பத்தில் திருமணமாகி வரும் பெண்ணும் அந்த குடும்பத்தின் இன்ப துன்பத்தில் பங்கு கொள்ள வேண்டும்.
எந்த வகை நண்பர்களுடன் பழகுவது நல்லது?
- உங்கள் குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால், அந்த சூழ்நிலையில் ஒரு நண்பர் உங்களுடன் ஒன்றாக நின்றால், அவர் உங்கள் உண்மையான நண்பர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
- இரண்டாவதாக, நீங்கள் ஏதேனும் பிரச்சனையால் சூழப்பட்டிருந்தால் அல்லது எதிரி உங்களைச் சூழ்ந்தால், அத்தகைய நெருக்கடியில் ஒரு நண்பர் உங்களுக்கு உதவினால், அவர் உண்மையான நண்பர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
- மூன்றாவதாக, உங்கள் நண்பர் எந்த முக்கியமான வேலையிலும் உங்களுக்கு ஆதரவாக இருந்தால், அவர் உங்கள் உண்மையான நண்பர். சாணக்கியர் கூற்றுப்படி, மரணத்திலும் உங்களைக் கல்லறைக்கு அழைத்துச் செல்ல ஒத்துழைப்பவனே உண்மையான நண்பன் என்கிறார். அப்படிப்பட்டவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என்கிறார்.
யாரையெல்லாம் நண்பர்களாக நினைக்கக்கூடாது?
உங்கள் வாழ்க்கையின் முக்கியமான ரகசியங்களையோ அல்லது உங்கள் வாழ்க்கையின் அந்தரங்க விஷயங்களையோ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதவர்தான் உண்மையான நண்பர்.
உங்கள் தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் தெரிவிக்கும் ஒருவருடன் நீங்கள் நண்பராக பழகினால், அவர் உங்களை அவமதிக்கலாம் அல்லது கடுமையான சிக்கலில் சிக்க வைக்கலாம். உங்களைப் பற்றிய ரகசியத்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் நபர் உங்கள் நண்பராக கருதப்படுவதில்லை.
உங்கள் நண்பர்களை அடையாளம் காணும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் உங்கள் வாழ்க்கையை அழிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும். எதிரிகளை நண்பர்களாக வைத்துக்கொண்டு அவர்களுடன் பாதுகாப்பாக இருக்க முடியாது என்கிறார் சாணக்கியர்.



Click it and Unblock the Notifications
