Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
சாணக்கிய நீதி படி இந்த குணங்கள் இருப்பவர்கள் சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுபவர்களாக வருவார்களாம்...!
Chanakya Niti: அனைத்து மனிதர்களுக்குமே தாங்கள் வாழும் சமுதாயத்தில் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டு அவரைப் பாராட்ட வேண்டும் விரும்புகிறார்கள். ஆனால், பணத்தாலும் பதவியாலும் மட்டுமே ஒருவருக்கு எப்போதும் மரியாதை கிடைக்காது, எல்லோருக்கும் வெற்றியும் மரியாதையும் கிடைப்பதில்லை.
சாணக்கிய நீதியின் படி, ஒரு நபர் தனது வாழ்க்கையில் சில பழக்கங்களை கொண்டு வந்தால் மட்டுமே மரியாதை மற்றும் வெற்றியை அவர்கள் பெற முடியும். இந்த பழக்கங்களைக் கொண்டவர்கள் சமூகத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பெறுகிறார்.

சமுதாயத்தில் மரியாதை பெறவும், மற்றவர்களால் பாராட்டப்படவும் சில விஷயங்களைப் பயிற்சி செய்ய வேண்டும். சாணக்கியர் சொல்லும் அந்த விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நேர்மையாக இருக்க வேண்டும்
உண்மையின் பாதையில் செல்பவர் பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் சில காலம் கழித்து அவர்களுடைய நேர்மைக்கான பலனைப் பெறுவார்வார்கள். அவர்கள் மக்களுக்கு முன்மாதிரியாக மாறுவார்கள்.
நேர்மையானவர் மற்றவர்களால் கவரப்பட்டு கௌரவம் பெறுவார்கள். அப்படிப்பட்டவர் சமூகத்தில் உயர்நிலையை அடைகிறார்கள்.
மற்றவர்களை மதிக்க வேண்டும்
மரியாதைக்குரிய நபரை சமூகம் எப்போதும் நினைவில் கொள்கிறது என்று சாணக்கியர் கூறுகிறார். ஆனால் மற்றவர்களுக்கு மரியாதைக் கொடுப்பவர்களுக்கும் சமூகத்தில் மரியாதை கிடைக்கும். பிறரை இழிவுபடுத்தும் நபரை சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்தால்தான் அதற்கு பதில் மரியாதை கிடைக்கும் என்கிறார் சாணக்கியர்.
பொறுப்பு உணர்வு கொண்டவர்கள்
வாழ்க்கைப் பயணத்தில் தனது பணியின் பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் நபர் சமூகத்தில் மரியாதைக்குரியவராக மாறுகிறார். ஒரு மனிதன் தன் செயல்களால் போற்றப்படுகிறான் என்று கூறப்படுகிறது. அவர் தனது கடமைகளைச் சரியாகச் செய்தால், சமூகம் அவரை நல்ல கண்ணோட்டத்துடன் பார்க்கும். அத்தகையவர்கள் எப்போதும் மற்றவர்களால் நேசிக்கப்படுவார்கள் மற்றும் மதிக்கப்படுவார்கள்.
புத்திசாலிகள்
சமுதாயத்தின் நலனுக்காக தனது அறிவைப் பயன்படுத்தும் ஒரு புத்திசாலி நபர் எப்போதும் மரியாதைக்குரியவராக மாறுகிறார். அப்படிப்பட்டவர் எப்போதும் பிறரால் விரும்பப்படுவார் என்கிறார் சாணக்கியர். அப்படிப்பட்டவர்களுக்கு சமூகத்தில் தனி இடம் கிடைக்கும். அதனால்தான் ஒரு புத்திசாலி மனிதன் எப்போதும் மக்களின் மனதை வெல்கிறார்.
மற்றவர்களை மோசமாக விமர்சிக்காதவர்கள்
பிறரை மோசமாக விமர்சிப்பவர்கள், கிண்டல் செய்பவர்கள், ஒருவரின் நற்பெயரை கெடுக்கும் பழக்கமும் உள்ளவர்களுக்கு சமூகத்தில் மரியாதை கிடைக்காது. இந்தப் பழக்கவழக்கங்களைக் கொண்ட ஒருவரை, அவர்கள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் யாரும் பாராட்ட மாட்டார்கள்.
எனவே நீங்கள் மற்றவர்களின் மனதில் நல்ல இடத்தைப் பெற விரும்பினால், இந்த கெட்ட பழக்கங்களை உடனடியாக கைவிடுங்கள்.
மற்றவர்களுக்கு தீமை செய்யாதவர்கள்
சாணக்கியர் கூற்றின் படி, பொய் சொல்லி மற்றவர்களுக்குத் தீங்கு செய்பவர் வாழ்க்கையில் அடிக்கடி அவமானங்களைச் சந்திப்பார். ஆனால் கடின உழைப்பு மற்றும் உண்மையின் பாதையைப் பின்பற்றுபவர் எப்போதும் வெற்றியைப் பெறுகிறார். சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் வாழ்பவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் மரியாதையைப் பெறுகிறார்கள்.
பேராசைக் கொள்ளாதவர்கள்
சாணக்கிய நீதியில், பேராசை ஒரு வகையான விஷம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. பேராசை என்பது ஒருவரின் நல்ல செயல்களை மெதுவாக அழிக்கும் விஷம். ஆனால் பேராசை இல்லாதவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று அனைவரின் அன்பையும் பெறுவார்கள்.



Click it and Unblock the Notifications












