Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
சாணக்கிய நீதி படி இந்த தந்திரங்கள் மூலம் எதிரிகளை வீழ்த்தி வெற்றியை அடைஞ்சிரலாம்...!
Chanakya Niti: தந்திரங்கள் மற்றும் கடுமையான போட்டி நிறைந்த இந்த உலகில் சாணக்கியரின் போதனைகள் மற்றும் கருத்துக்கள் இப்போதும் மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது. சாணக்கியரால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சாணக்கிய நீதி மற்றும் அர்த்தசாஸ்திரம், அரசியல், பொருளாதாரம், தனிப்பட்ட வாழ்க்கை அல்லது திருமண வாழ்க்கை என வாழ்க்கையின் அனைத்துக் கட்டத்திலும் அனைவருக்கும் பயன்படக்கூடிய உத்திகளையும், தந்திரங்களையும் கொண்டுள்ளது.
சாணக்கியரின் அறிவுரைகள் எக்காலத்திற்கும் பொருத்தமானது என்பது நிருபிக்கப்பட்ட ஒன்றாகும். ஒருவர் தனது வியாபாரம் மற்றும் பணிச்சூழலில் வெற்றியை அடைவதற்கான தெளிவான வழிகாட்டுதலை சாணக்கிய நீதி வழங்குகிறது. இந்த அறிகுறிகளை பின்பற்றுவதன் மூலம், ஒருவர் ஏமாறுவதைத் தவிர்த்து வெற்றியை அடைய முடியும்.

எதிரிகளும், போட்டியாளர்களும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதி என்றும் வெற்றியின் அங்கம் என்று சாணக்கியர் கூறுகிறார். இருப்பினும், உறுதியான மற்றும் தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துபவர்களை எதிரிகளால் தோற்கடிக்க முடியாது. ஆச்சார்யா சாணக்கியர் எதிரிகளை வெல்வதற்கு சில வழிகளைக் கூறியுள்ளார்.
எதிரியை குறைத்து மதிப்பிடக்கூடாது
ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் தங்களுடைய எதிரி தன்னை விட பலவீனமானவர் என்று ஒருபோதும் நினைக்கக்கூடாது என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். உங்களின் இந்த ஆணவம் எதிரிக்கு சாதகமாக மாறிவிடும். இது எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும் என்று சாணக்கிய கூறுகிறார்.
எதிரியின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்
எதிரிகளின் செயல்களையும், அமைதியையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். எதிரியின் செயல்பாடுகளைப் புறக்கணிப்பது விவேகமற்றது என்று அவர் கூறுகிறார். உங்கள் எதிரியின் ஒவ்வொரு அசைவையும் அறிந்திருப்பது வெற்றிக்கு முக்கியமானது. எதிரியைப் பற்றிய முழுமையான விஷயங்களைத் தெரிந்து கொண்டாலே பாதி வெற்றியை அடைந்து விடலாம்.
எதிரியின் பலத்தை தெரிந்து கொள்ள வேண்டும்
எதிரியின் பலத்தை மதிப்பிடுவதும் வெற்றிக்கு அவசியம் என்று சாணக்கிய நினைவூட்டுகிறார். இதன் மூலம், ஒருவர் தனது சொந்த திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த அணுகுமுறை எதிரியின் நடத்தையை நன்கு புரிந்துகொள்ள அனுமதிக்கிறது, இதன் மூலம் சரியான நேரத்தில் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளலாம்.
ஈகோவை வளர்த்துக் கொள்ளக்கூடாது
ஈகோ உள்ளவர்கள் யாரையும் தங்களை விட உயர்ந்தவர்களாக பார்க்க மாட்டார்கள். தற்பெருமை என்பது எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மட்டுமே உதவும் என்று சாணக்கியர் கூறுகிறார். எனவே, உங்களுக்குள் இருக்கும் ஈகோவை அழிக்க வேண்டும்.
கோபம் கொள்ளக்கூடாது
அவமானங்களை எதிர்கொள்ளும் போது, கோபத்தை வெளிப்படுத்துவதை தவிர்த்துவிட்டு அமைதியாக இருக்குமாறு சாணக்கியர் அறிவுறுத்துகிறார். மனதிற்குள் சூழ்ச்சி செய்யும் அமைதியானவர்களைப் புரிந்துகொள்வது யாராலும் முடியாது. சாணக்கியரே இந்த உத்தியை தனது வாழ்க்கையில் பயன்படுத்தியுள்ளார். ஒருமுறை நந்த மன்னன் சாணக்கியரை அவமதித்தபோது, அவர் தனது கோபத்தை அடக்கிக்கொண்டு அமைதியாக இருந்தார். அவர் அமைதியாக மன்னரை அரியணையில் இருந்து அகற்ற ஒரு திட்டத்தை வகுத்தார், அதன்படி சாமானியரான சந்திரகுப்தனை பேரரசர் பதவிக்கு உயர்த்தினார்.



Click it and Unblock the Notifications
