Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
சாணக்கிய நீதி படி மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் உள்ள 4 ஒற்றுமைகள் மற்றும் 1 வேற்றுமை என்ன தெரியுமா?
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியர் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர். சாணக்கியரின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்க்கையில் மிகப்பெரிய உயரங்களை அடைந்தவர்கள் பலர் உள்ளனர். ஆச்சார்ய சாணக்கியர் வாழ்க்கையில் வெற்றி பெற பல விதிகளை கூறியுள்ளார்.
சாணக்கியர் கூற்றின் படி, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் 4 குணங்கள் ஒரே மாதிரியானவையாக இருக்கிறது என்று சாணக்கியர் சாணக்கிய நீதியில் கூறியுள்ளார், அதேபோல மனிதர்களை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தும் ஒரு குணமும் உள்ளது.

இந்த ஒரு குணம் மட்டும் இல்லையென்றால், மனிதன் ஒரு மிருகமாக கருதப்படுவார். இதை சாணக்கியர் 17வது அத்தியாயத்தின் 17வது வசனத்தில் குறிப்பிட்டுள்ளார். சாணக்கியரின் கூற்றுப்படி, மனிதர்கள் அந்த ஒரு குணத்தை ஒருபோதும் இழக்கக்கூடாது, இல்லையெனில் வாழ்க்கை பாழாகிவிடும்.
பசி
சாணக்கியரின் கூற்றுப்படி பசி என்பது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் என்பது முதன்மையான பொதுவான குணமாகும். அனைத்து மனிதர்களும், விலங்குகளும் தங்கள் வயிற்றை நிரப்புவதற்கே முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுக்கிறார்கள். அது இல்லாமல் இருவருமே வாழ்வது இயலாத காரியம்.
தூக்கம்
பசியைப் போலவே மனிதர்களுக்குத் தூக்கம் எவ்வளவு அவசியமோ, அதேபோல் விலங்குகளும் தினமும் தூங்குவது அவசியம். மனிதர்களைப் பொறுத்தவரை, நல்ல தூக்கம்தான் அவர்கள் ஆற்றலுடன் இருக்க உதவுகிறது. அது மட்டுமின்றி பலவீனம் மற்றும் சோம்பல் போன்ற இலக்கை அடைவதில் உள்ள தடைகளை நீக்கவும் தூக்கம் அவசியம்.
காமம்
எந்தவொரு உயிரினமும் தனது அடுத்த சந்ததியை உருவாக்க நினைப்பது இயல்பானதுதான். இதற்கு மனிதர்களும், விலங்குகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல. படைப்பின் முன்னேற்றத்திற்கு மனிதர்களைப் போலவே விலங்குகளின் உடலுறவும் அவசியம். இந்த உணர்வு மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பொதுவானது.
பயம்
கடைசி விஷயம் பயம். பய உணர்வு மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இயற்கையானது. பயம் என்பது ஒரு உளவியல் கோளாறு. பல வகையான பயம் மனிதர்களை தொந்தரவு செய்கிறது, அதே போல் விலங்குகள் தங்களை பாதுகாக்க பயப்படுவது இயற்கையானது.
மனிதர்களிடம் மட்டும் இருக்கும் குணம்
அறிவு என்பது மனிதர்களை விலங்குகளிலிருந்து வேறுபடுத்தும் குணம். மனிதர்களின் சிறந்த மற்றும் தனித்துவமான அடையாளம் ஞானம். இதனை அடிப்படையாகக் கொண்டே மனிதர்கள் செல்வத்தையும், கடவுளையும் பின்பற்ற முடிகிறது.
புத்திசாலித்தனத்தின் பலத்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். அறிவு இல்லாத மனிதர்கள் விலங்குகளைப் போன்றவர்கள் என்கிறார் சாணக்கியர். அதாவது அறிவைப் பெருக்கிக் கொள்ளாதவன் அல்லது அறிவைப் பயன்படுத்தாதவன் மிருகத்தைப் போன்றவன்.
சாணக்கியர் அறிவு எங்கிருந்து கிடைத்தாலும் அதைப் பெற வேண்டும் என்கிறார். அறிவின் உதவியால் வாழ்க்கையின் எல்லா சிரமங்களையும் சமாளிக்க முடியும் அவர் நம்பினார்.



Click it and Unblock the Notifications