Latest Updates
-
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
விருச்சிகத்தில் உருவாகியுள்ள புதாதித்ய ராஜயோகம்: அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை பிரகாசமா இருக்கும்
Budhaditya Rajyoga In Scorpio On November 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் வேளையில், சில சமயங்களில் கிரக சேர்க்கைகளால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் நவம்பர் 17 ஆம் தேதி விருச்சிக ராசியில் நுழைந்தார். ஏற்கனவே நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் புதன் விருச்சிக ராசிக்குள் நுழைந்து பயணித்து வருகிறார்.

இதனால் விருச்சிக ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த சுப யோகமானது 10 நாட்கள் வரை தான் நீடித்திருக்கும். ஏனெனில் நவம்பர் 27 ஆம் புதன் தனுசு ராசிக்குள் நுழையுவுள்ளார்.
விருச்சிக ராசியில் உருவாகியுள்ள புதாத்திய ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த யோக காலத்தில் திடீர் பண வரவும், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றியும் கிடைக்கவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சமூகத்தில் நல்ல மரியாதையையும், கௌரவத்தையும் பெறுவார்கள்.
நீதிமன்றத்தில் சொத்து தொடர்பான வழக்குகள் நடந்து கொண்டிருந்தால், இந்த யோக காலத்தில் தீர்ப்பானது சாதகமாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல பலன் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டில் புதாத்திய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். நிதி ரீதியாக சிறப்பான பலன்களைப் பெற வாய்ப்புள்ளது.
முதலீடுகளை செய்யும் எண்ணம் இருந்து செய்தால், நல்ல பலனைப் பெறக்கூடும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். முக்கியமாக எதிர்பாராத பண வரவைப் பெற வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டில் புதாத்திய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பாக செயல்படுவார்கள் மற்றும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இக்காலகட்டத்தில் நிறைய லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம். வெளிநாடு செல்லும் ஆசை இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications