Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
1 வருடம் கழித்து ரிஷபத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: மே 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்...
Budhaditya Rajyog In Taurus 2024: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மே 14 ஆம் தேதி சுக்கிரனின் ரிஷப ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் இந்த ரிஷப ராசிக்கு கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் மே 31 ஆம் தேதி நுழையவுள்ளார். இதனால் ரிஷப ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகமானது சுமார் 1 வருடத்திற்கு பின் ரிஷப ராசியில் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும் மற்றும் செல்வம் பெருகும். இப்போது ரிஷப ராசியில் உருவாகவுள்ள புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. சிலர் புதிய வருமான ஆதாரங்களையும் பெறலாம். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளை செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம். தொழிலதிபராக இருந்தால், அதிக லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திருமணமானவர்கள் குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். சிலருக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். வியாபாரத்தை விரிவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications