Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
பட்ஜெட்டுக்கு முன்னாடி ஏன் அல்வா கிண்டி கொண்டாடுறாங்க-ன்னு தெரியுமா?
Budget 2024: 2024-2025 ஆம் ஆண்டிற்கான மத்திய யூனியன் பட்ஜெட்டை ஜூலை 23 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் யூனியன் பட்ஜெட்டிற்கு முன் ஒரு விழா வழக்கமாக நடத்தப்பட்டு வருவது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அது தான் அல்வா விழா.
சரி, இந்த அல்வா விழா ஏன் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டிற்கு முன் நடக்கிறது என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா? பட்ஜெட்டிற்கும், அல்வாவிற்கும் என்ன சம்பந்தம் என்று உங்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளதா? அப்படியானால், இப்போது பட்ஜெட்டிற்கு முன் ஏன் அல்வா கிண்டி கொண்டாடுகிறார்கள் என்பது குறித்து காண்போம்.

அல்வா விழா என்றால் என்ன?
மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் மத்திய நிதி அமைச்சர், பட்ஜெட்டுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உதவி ஊழியர்களுக்கு இனிப்புக்களை வழங்கும் ஒரு விழாவை தொடங்கும் விதமாக, அல்வா விழா நடத்தப்படுகிறது. ஏனெனில் அல்வாவானது நமது நாட்டின் பாரம்பரிய இனிப்பு வகையாகும்.
அல்வா விழா ஏன் பட்ஜெட்டுக்கு முன் நடத்தப்படுகிறது?
அல்வா விழாவை நடத்துவதற்கு காரணம், இந்தியாவில் எந்த ஒரு முக்கியமான மற்றும் மங்களகரமான நிகழ்வு நடப்பதற்கு முன்பும் இனிப்பு சாப்பிடுவது வழக்கம். எனவே தான் அதை உணர்த்தும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் அல்வா கிளறி அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது. இது தவிர பட்ஜெட்டில் அயராது உழைத்தவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கும் வகையிலும் அல்வா விழா கருதப்படுகிறது. நிதி அமைச்சகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அல்வாவை கொடுத்த பிறகு, 'லாக்-இன்' மற்றும் பட்ஜெட் ஆவணங்களை அச்சிடுவதற்கான தொடக்கத்தைக் குறிக்கிறது .
அல்வா விழா எங்கு நடைபெறும்?
பொதுவாக அல்வா விழா டெல்லியின் உள்ள நிதி அமைச்சகத்தின் நார்த் பிளாக் அடித்தளத்தில் நிதி அமைச்சர் மற்றும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெறும்.
அல்வா விழாவிற்கு பின் என்ன நடக்கும்?
அல்வா விழாவிற்கு பின், நிதி அமைச்சக ஊழியர்கள் நார்த் பிளாக்கில் உள்ள அமைச்சகத்தின் தலைமையகத்தில் அமைந்துள்ள பட்ஜெட் அச்சகத்தில் நுழையும் 'லாக்-இன்' காலம் தொடங்குகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் உரையை நிதியமைச்சர் முடித்த பிறகே அந்த ஊழையர்கள் வெளியே வர முடியும்.
கடந்த ஆண்டு அல்வா விழா எப்போது நடத்தப்பட்டது?
கடந்த ஆண்டு அல்வா விழாவானது 2023 ஜனவரி 26 ஆம் தேதி நடத்தப்பட்டது. அது இந்தியாவின் குடியரசு தினமாகும். இந்த ஆண்டு அல்வா விழா 2024 ஜனவரி 24 ஆம் தேதி நடந்தது.



Click it and Unblock the Notifications