Latest Updates
-
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும்
தலைசுற்ற வைக்கும் வரலாற்றின் கொடூரமான மரண தண்டனை முறைகள்... இதயம் பலவீனமானவங்க படிக்காதீங்க...!
மனித இனம் உருவான காலம் முதலே பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி உள்ளது. கடந்த கால மனிதர்கள் நம்மால் கற்பனை செய்ய முடியாத வழியில் வாழ்ந்தார்கள். தலைசிறந்த கலைப்படைப்புகளை உருவாக்குவது, பிரபஞ்சத்தின் மர்மங்களைத் தீர்ப்பது போன்ற சாதனைகளை செய்த அதே நேரத்தில், மனிதர்களை தண்டிக்க புதிய மற்றும் கொடூரமான வழிகளைக் கண்டறிந்தார்கள்.
வரலாறு முழுவதும், பல்வேறு சமூகங்கள் மற்றும் கலாச்சாரங்கள் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி வந்தன. சட்டத்தை மீறுபவர்கள், மதவெறியர்கள், சூனியக்காரர்கள், கிளர்ச்சியாளர்கள் அல்லது அரசியல்ரீதியான எதிரிகள் மரணத்தை மட்டுமல்ல, விவரிக்க முடியாத துன்பத்தையும் எதிர்கொண்டனர். இந்த மரணதண்டனை முறைகள் விரைவான நீதியைப் பற்றியது அல்ல, மாறாக மக்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதைப் பற்றியதாக இருந்தது. மனிதகுலத்தின் இருண்ட பக்கத்தை விவரிக்கும் கொடூரமான தண்டனை முறைகள் சிலவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

லிங் சி(Ling chi)
"மெதுவாக வெட்டுதல்" அல்லது "ஆயிரம் வெட்டுக்களால் மரணம்" என்றும் அழைக்கப்படும் லிங் சி என்பது சீனாவில் சுமார் 900 முதல் 1905 இல் தடைசெய்யப்படும் வரை நடைமுறையில் இருந்த ஒரு சித்திரவதையான மரணதண்டனை ஆகும். இந்த தண்டனை முறை வியட்நாம் மற்றும் கொரியாவிலும் பயன்படுத்தப்பட்டது. கடந்த கால குறிப்புகளின் படி, தண்டனை வழங்கப்பட்ட நபர் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டு, தோல் மற்றும் கைகால்கள் படிப்படியாக சின்ன சின்ன துண்டுகளாக வெட்டப்பட்டன. இறுதி வெட்டு பொதுவாக இதயத்தில் அல்லது தலையை வெட்டுவதுடன் தண்டனை முடிவடையும்.
பிரேசன் புல்
பிரேசன் புல் என்பது கிமு 6 ஆம் நூற்றாண்டில் சிசிலியின் கொடுங்கோல் அரசர் பலாரிஸ் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு மரணதண்டனை சாதனமாகும். இது ஒரு காளை போன்ற வடிவிலான ஒரு காலியான வெண்கல சிலையாகும், அதில் தண்டனை வழங்கப்பட்டவர்களை உள்ளே வைப்பதற்கான கதவு இருந்தது. ஒருவர் உள்ளே வைக்கப்பட்டவுடன், கீழே நெருப்பு மூட்டப்பட்டு, அந்த நபரை உயிருடன் க்ரில் சிக்கன் போல வறுத்தெடுத்தது. இதில் உச்சக்கட்ட கொடூரம், காளையின் வடிவமைப்பு அலறல்களை ஒரு காளையைப் போன்ற ஒலிகளாக மாற்றியது.
இரத்தக் கழுகு(Blood Eagle)
இரத்தக் கழுகு என்பது நார்ஸ் புராணத்தில் வேரூன்றிய ஒரு கொடூரமான மரணதண்டனை முறையாகும். இந்த தண்டனைப் பற்றிய குறிப்புகளின் படி, தண்டனை வழங்கப்பட்டவரின் முதுகு வெட்டப்பட்டு விலா எலும்புகள் வெளிப்படும், பின்னர் அவை உடைக்கப்பட்டு இறக்கைகளைப் போல வெளிப்புறமாக வளைக்கப்பட்டன. வேதனையை அதிகரிக்க காயங்களில் உப்பு தேய்க்கப்பட்டதாகவும், நுரையீரல் வெளியே இழுக்கப்பட்டு நீட்டிய விலா எலும்புகளின் மீது வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது, இது ஒரு பயங்கரமான "கழுகு" போன்ற காட்சியை உருவாக்கியது. இது ஒரு கற்பனை தண்டையாக இருக்கலாம் என்று சில குறிப்புகள் கூறுகிறது.
The Rack
இந்த ரேக் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து லண்டன் கோபுரத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு சித்திரவதை சாதனமாகும், இது பாதிக்கப்பட்டவர்களின் கைகால்களை கயிறுகளால் இழுத்து நீட்ட வடிவமைக்கப்பட்டது, இது பெரும்பாலும் மூட்டுகளை இடமாற்றம் செய்தது. தேசத்துரோகம் அல்லது மதங்களுக்கு எதிரான பிரச்சாரம் செய்த குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற யூமன் வார்டர்கள் இதைப் பயன்படுத்தினர். இந்த தண்டனைக்கு ஆளான ஒருவர் புராட்டஸ்டன்ட் போதகர் ஆன் அஸ்க்யூ ஆவார், அவர் சக அனுதாபிகளின் பெயரைக் கூற மறுத்ததற்காக 1546 இல் சித்திரவதை செய்யப்பட்டார். இறுதியாக நடக்க முடியாத சூழ்நிலையில், அவர் கழுமரத்தில் தூக்கிச் செல்லப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டார்.
எலி சித்திரவதை
இந்த கொடூரமான சித்திரவதை முறையில், பசியால் வாடிய அல்லது நோயுற்ற எலிகள், தண்டனை அளிக்கப்பட்டவரின் வெறும் வயிறு அல்லது மார்பில் வைக்கப்பட்ட ஒரு கொள்கலனில் வைக்கப்பட்டது. பின்னர் கொள்கலன் வெளியில் இருந்து சூடேற்றப்படும், வெறித்தனமான எலி தப்பிக்க ஒரே வழி, பாதிக்கப்பட்டவரின் சதை வழியாகவும் அவர்களின் உடலுக்குள் நுழைவதுதான். எலி மனித உடலுக்குள் சென்றவுடன், வெப்பத்திலிருந்து தப்பிக்க ஒரு தீவிர முயற்சியில் அது பெரும்பாலும் முக்கிய உறுப்புகளை கிழித்தெறிகிறது.
கொதிக்க வைத்தல்
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, கிழக்கு ஆசியாவிலிருந்து இங்கிலாந்து வரை கொதிக்க வைப்பது என்பது பரவலாகப் பயன்படுத்தப்பட்ட மரணதண்டனை முறையாகும். இந்த தண்டனை முறையில் ஆடைகளை அகற்றி கொதிக்கும் நீர், எண்ணெய் அல்லது தார் தொட்டிகளில் மூழ்கடித்தனர். சில சந்தர்ப்பங்களில், அவர்கள் குளிர்ந்த திரவத்தில் மூழ்கடிக்கப்பட்டனர், பின்னர் அது படிப்படியாக சூடேற்றப்பட்டது, இதனால் அவர்களின் வேதனை நீடித்தது.



Click it and Unblock the Notifications












