Latest Updates
-
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
உலக வரலாற்றின் மிகவும் தைரியமான போர் ராணிகள் இவங்கதான்... இதில் இரண்டு 2 இந்திய ராணிகளும் இருக்காங்க...!
உலக வரலாறு முழுவதுமே பல எண்ணற்ற வீரம் நிறைந்த கதைகளால் நிரம்பியுள்ளது, இந்த கதைகளில் பெரும்பாலும் கதைகளின் நாயகர்களாக ஆண்களே இருப்பார்கள். உண்மையில், ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் வீரத்தால் வரலாற்றை மாற்றியமைத்துள்ளனர்.
இந்த வலிமைமிக்கப் பெண்கள் தங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளையும், தங்களின் எல்லைகளையும் தாண்டிப் படைகள் மற்றும் நாடுகளை வழிநடத்தினர். பழங்கால நாகரிகங்கள் முதல் சமீப காலங்கள் வரை அவர்களின் கதைகள்வரலாறு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கின்றன.

இந்த ராணிகள் ஒவ்வொருவரும் தனது மக்களைப் பாதுகாக்கவும், தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தவும் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் வெறும் ராணிகள் அல்ல ,அவர்கள் சிறந்த ராஜதந்திரிகள், போர்வீரர்கள் மற்றும் எதிர்ப்பின் சின்னங்களாக இருந்தனர், அவர்கள் சில சமயங்களில் தந்திரங்கள் மற்றும் தைரியம் ஆகிய இரண்டிலும் தங்கள் ஆண் சகாக்களை விஞ்சினர்.
பௌடிக்கா
ஐசெனி பழங்குடியினரின் ராணியான பௌடிக்கா, கிபி 60 இல் பிரிட்டனில் ஆக்கிரமிக்கப்பட்ட ரோமானியப் படைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார். தனிப்பட்ட இழப்புக்கு ஆளான பிறகு, தனது மக்களை கொடூரமாக நடத்துவதைக் கண்ட பௌடிக்கா, லண்டினியம் (இன்றைய லண்டன்) உட்பட ரோமானிய குடியேற்றங்களை அழித்த ஒரு இராணுவத்தை திரட்டினார்.
ரோமானிய கவர்னர் சூட்டோனியஸ் பாலினஸால் அடக்கப்படுவதற்கு முன்பு அவரது கிளர்ச்சி ஆயிரக்கணக்கானவர்களின் மரணத்திற்கு வழிவகுத்தது. அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாக பௌடிக்காவின் வரலாறு இன்றும் நிலைத்திருக்கிறது.
அமானிரெனஸ்
அமானிரெனஸ் பண்டைய ஆப்பிரிக்க குஷ் இராச்சியத்தின் ராணி ஆவார். மெரோயிடிக் போரில் (கிமு 27-22) ரோமானியப் பேரரசுக்கு எதிராக தனது மக்களை வழிநடத்தியதில் அவர் முக்கியப்பங்கு வகித்தார். போரில் ஒரு கண்ணை இழந்த போதிலும், அமானிரெனஸ் தனது ராஜ்ஜியத்தின் பாதுகாப்பையும் செழிப்பையும் உறுதிசெய்து, அவர்களுக்கு சாதகமான நிபந்தனைகளின் அடிப்படையில் சமாதான உடன்படிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜெனோபியா
ஜெனோபியா சிரியாவில் உள்ள பால்மைரீன் பேரரசின் ராணியாக இருந்தார், அவர் தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு, அவருடைய சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினார் மற்றும் கிபி 3 ஆம் நூற்றாண்டில் ரோமானிய ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சி செய்தார்.
பேரரசர் ஆரேலியனால் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பு அவர் எகிப்து மற்றும் ஆசியா மைனரின் பெரும்பகுதியை வென்றார். ஜெனோபியாவின் லட்சியம் மற்றும் போராட்டம் அவரை பழங்காலத்தின் மிகவும் வலிமையான பெண்களில் ஒருவராக மாற்றியது.
டோமிரிஸ்
மசாகெட்டேயின் ஆட்சியாளரான டோமிரிஸ், பெர்சியாவின் கிரேட் சைரஸுடனான அவரது மோதலால் மிகவும் பிரபலமானவர். கிமு 530 இல், சைரஸ் தனது மகனைக் கைப்பற்றிய பிறகு, டோமிரிஸ் தனது படைகளை பெர்சியர்களுக்கு எதிராக ஒரு தீர்க்கமான வெற்றிக்கு அழைத்துச் சென்றார், போரில் அவர் சைரஸைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அவரது வெற்றி அவரது இராணுவ புத்திசாலித்தனத்திற்கும் விடாமுயற்சிக்கும் ஒரு சான்றாகும்.
ராணி லட்சுமிபாய்
ஜான்சியின் ராணி ராணி லக்ஷ்மிபாய், 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியக் கிளர்ச்சியில் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவரது துணிச்சல் மற்றும் புத்தியின் வலிமைக்காக அறியப்பட்ட அவர், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான போரில் தனது படைகளை வீரத்துடன் வழிநடத்தினார். லட்சுமிபாயின் எதிர்ப்பும், தியாகமும் அவரை இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் தவிர்க்க முடியாத அடையாளமாக மாற்றியுள்ளன.
காரியாவின் ஆர்ட்டெமிசியா I
ஆர்டெமிசியா I காரியாவின் ராணியாகவும் கிரேக்க-பாரசீகப் போர்களின் போது பாரசீக மன்னர் செர்க்ஸஸின் கூட்டாளியாகவும் இருந்தார். கிமு 480 இல் சலாமிஸ் போரில் அவர் தனது சொந்த கடற்படையை வழிநடத்தினார் மற்றும் அவரது தந்திரோபாய திறமை மற்றும் தைரியத்திற்காக அறியப்பட்டார், அதன்மூலம் அவரின் கூட்டாளிகள் மற்றும் எதிரிகளிடமிருந்து மரியாதையைப் பெற்றார்.
ரசியா சுல்தான்
சுல்தான் ஷம்சுதீன் இல்துமிஷுக்கு பிறந்தவர ரசியா சுல்தான், டெல்லியை ஆண்ட ஒரே பெண் ஆட்சியாளர் இவர்தான். இவரது மூத்த சகோதரரும் அரியணையின் வாரிசுமான நசிருதின் மஹ்மூத்தின் மரணத்திற்குப் பிறகு, சுல்தான் இல்துமிஷ் ரசியாவை வாரிசாக நியமித்தார், ஒரு பெண் ஆட்சியாளரை ஏற்றுக்கொள்ள முடியாத அவரது பிரபுக்கள் அவருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
பிரபுக்கள் அவரது சகோதரர் ருக்னுதீன் ஃபிரூஸை அவருக்குப் பதிலாக ராஜாவாக நிறுவியதால், ரசியா அரியணைக்காகப் போராட வேண்டியிருந்தது, அவர் ஒரு திறமையற்ற மற்றும் கொடூரமான ஆட்சியாளர் என்பதால் அவர் அரியணையில் அமர்வதைத் தடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த இந்திய ராணி, பொது மக்களை ஒரு கிளர்ச்சியை நோக்கி வழிநடத்தி, அவரது சகோதரரை தூக்கியெறிந்து அரியணை ஏறினார், அதைத் தொடர்ந்து, ருக்னுதீனை சிறையில் அடைத்து தூக்கிலிட்டார். அவரது ஆட்சி குறுகிய காலமாக இருந்தபோதிலும், ரசியா சுல்தான் தன்னை ஒரு வலிமையான மற்றும் திறமையான தலைவராக நிரூபித்தார்.



Click it and Unblock the Notifications
