Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
தமிழ்நாட்டின் இந்த கிராமத்தில் செருப்பு அணிவது மிகப்பெரிய குற்றமாம்... காரணம் என்னனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க!
கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி கூறியுள்ளார். தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 6.5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்தியா பல்வேறு இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் நிறைந்தது. இந்தியாவின் கலாச்சாரங்கள் இன்றும் உயிர்ப்புடன் இருக்க அதன் கிராமங்களே காரணம்.
கிராமங்கள் எப்போதும் பல்வேறு தனித்துவமான பழக்கவழக்கங்களுக்கு பெயர் பெற்றதாக இருக்கிறது. அந்த வகையில் ஒரு கிராமம் ஆச்சரியமளிக்கும் விதமாக மக்கள் செருப்பு அணிவதை தடை செய்துள்ளது. பொதுவாக இந்திய மக்கள் வீட்டை கோவிலாக கருதுகிறார்கள், அதனால்தான் வீட்டிற்க்குள் செல்லும் போது செருப்பை வெளியே கழட்டி விட்டுவிட்டு செல்கிறார்கள். ஆனால் இந்த கிராமம் அவர்களின் எல்லைக்குள் முற்றிலுமாக செருப்பு அணிவதைத் தடை செய்துள்ளது. இது வேறு எங்குமில்லை நமது தமிழ்நாட்டில்தான்.

நம்ம தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள சிறிய கிராமமான அந்தமானில்தான் இந்த வினோத பழக்கம் உள்ளது, இங்கு மக்கள் காலணிகள் அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பொதுவாக கிராமத்தின் நுழைவாயிலிலேயே தங்கள் காலணிகளை கழட்ட வேண்டும். இந்த கிராமத்தில் விவசாயமும், வயல்களில் வேலை செய்வதும் முதன்மையான தொழிலாக இருக்கிறது. விதிவிலக்காக, வயதானவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மட்டும் இந்த கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, மற்ற படி அனைவரும் வெறுங்காலுடன்தான் கிராமத்திற்குள் நடக்க வேண்டும்.
வெயில் காலங்களில் சிலர் சூடான தரையிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள செருப்புகளை அணிவார்கள், அதே நேரத்தில் குழந்தைகள் காலணிகள் இல்லாமல் பள்ளிக்குச் செல்கிறார்கள். மக்கள் பெரும்பாலும் தங்கள் காலணிகள் மற்றும் செருப்புகளை தங்கள் கைகளில்தான் எடுத்துச் செல்கிறார்கள்.
கிராமத்தின் தெய்வத்திற்கு மரியாதை மற்றும் அன்பு செலுத்தும் விதமாக இந்த நீண்டகால பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அறிக்கைகளின் படி 'முத்தியாலம்மா' என்ற தெய்வம் தங்கள் சமூகத்தை பாதுகாப்பதாக கிராம மக்கள் நம்புகிறார்கள். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், அவர்கள் முத்தியாலம்மாவை வணங்கி, மூன்று நாள் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.
தங்கள் தெய்வத்தின் நினைவாக, இந்த கிராம மக்கள் காலணிகள் மற்றும் செருப்புகளை அணிவதைத் தவிர்க்கின்றனர். நாம் வெறுங்காலுடன் கோயிலுக்குள் நுழைவது போல, அவர்கள் தங்கள் கிராமத்தை புனிதமான இடமாகக் கருதி, காலணிகள் இல்லாமல் நடக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கைகளில் வேரூன்றிய இந்த நடைமுறை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

மற்ற கிராமங்களில் இருந்து வருபவர்களும் இந்த கிராமத்திற்குள் நுழைந்தவுடன் இந்த பாரம்பரியம் குறித்து தெரிவிக்கப்பட்டு, இதனை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், இந்த நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அவர்களின் வழக்கத்தை மதித்து இந்த பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
கூடுதலாக, கிராமத்தில் செருப்புகளை அணிந்து நடந்தால் குணப்படுத்த கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்படுவார்கள் என்று கிராமவாசிகள் பழங்கால நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். இந்த காரணத்திற்காக, அவர்கள் பொதுவாக பாதணிகளை அணிவதைத் தவிர்க்கிறார்கள். இதேபோல் தமிழ்நாட்டில் மற்றொரு கிராமமும் உள்ளது. அதைப்பற்றி மேற்கொண்டு பார்க்கலாம்.
வெள்ளகவி கிராமம்
வெள்ளகவி கிராமம் கொடைக்கானலின் வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு, யாரேனும் பாதணி அணிந்திருந்தால், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சாலைகள் இல்லை, கிராமத்தை அடைய, கடினமான மலையேறித்தான் செல்ல வேண்டும்.
கிராமத்தின் நுழைவாயிலில் மக்கள் வழிபடும் புனிதமான பெரிய மரம் உள்ளது. அங்கு வசிப்பவர்களின் மத நம்பிக்கையின் காரணமாக மக்கள் செருப்பு அணிவதைத் தவிர்க்கிறார்கள். கிராம மக்கள் தங்கள் கிராமத்தை கடவுளின் வீடு என்று நம்புகிறார்கள், எனவே எவ்வளவு சூடான வானிலையிலும் மக்கள் செருப்பு அணிவதை பார்க்க முடியாது. இந்த நம்பிக்கைக்கு எதிராக யாராவது சென்றால், அவர்கள் தெய்வ குற்றத்திற்கு ஆளாவார்கள் என்று கூறப்படுகிறது.
கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும்போது வயதானவர்கள் மட்டும் செருப்பு அணியலாம். வீடுகளுக்கு இடையில் மற்றும் கிராமத்தின் முடிவில் 25 க்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டப்பட்டுள்ளன, மேலும் இந்த கிராமத்தில் ஒரே ஒரு சிறிய தேநீர் மற்றும் மளிகைக் கடை மட்டுமே உள்ளது, ஒவ்வொருவரும் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காக அருகிலுள்ள நகரத்திற்குச் செல்ல வேண்டும்.
இந்த கிராமத்தில் பல கட்டுப்பாடுகள் இருப்பதால் கிராமம் முழுவதும் இரவு 7 மணிக்கு உறங்கி விடுகிறது. 7 மணிக்கு மேல் சத்தமாகப் பேசவோ, இசையைக் கேட்கவோ, உரத்த ஒலியை இசைக்கவோ யாருக்கும் அனுமதி இல்லை. இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தாலும், இந்த கிராம மக்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்.



Click it and Unblock the Notifications