Latest Updates
-
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்!
மரணமிலா மருந்தை கிட்டதட்ட கண்டுபிடித்துவிட்ட உலக பணக்காரர்கள்... ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு...என்ன தெரியுமா?
உலகம் தோன்றிய காலம் முதலே பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது அந்த இடைவெளி மேலும் அதிகரித்து வருகிறது. மக்களிடையே பொதுவாக இருக்கும் ஒரு நம்பிக்கை 'பணத்தால் எதையும் வாங்கி விடலாம்' என்பதுதான், ஆனால் பணத்தால் அனைத்தையும் வாங்கி விடமுடியுமா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
ஒருவேளை அப்படி வாங்க முடியுமென்றால் உலகில் எந்தவொரு செல்வந்தரும் மரணத்தை சந்திக்க மாட்டார்கள். தங்கள் வாழ்நாள் முழுவதும் செலவழித்தால் கூட செலவழிக்க முடியாத அளவிற்கு பணத்தை உலகில் பலர் வைத்துள்ளனர். பல நூற்றாண்டுகளாக செல்வந்தர்களிடையே மரணத்தை வெல்ல வேண்டுமென்ற கனவு இருந்து வருகிறது.

தற்போது இந்த கனவு நனவாகுவதற்கு நம்பமுடியாத அளவிற்கு கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளது. அமெரிக்காவின் பிரபல இதழில் வெளிவந்துள்ள அறிக்கையின்படி, உலகின் சில செல்வந்தர்கள் மனித ஆயுளை நீட்டிக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் மருந்துகளுக்கு பணத்தை கணக்கின்றி செலவிடுகிறார்கள். ஆனால் இந்த தொழில்நுட்பம் பணக்காரர்களுக்கு மட்டும்தான் கிடைக்குமா? அது சமூகத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அமேசான் நிறுவனரின் முயற்சி
சமீபத்தில் வெளியான இந்த அறிக்கை உலக கோடீஸ்வரர்கள் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதாக குறிப்பிடுகிறது. அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் அவரது ஆல்டோஸ் லேப்ஸ் நிறுவனத்தில் 3 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளார், இது தற்போது உலகின் மிகப்பெரிய பயோடெக் நிறுவனமாக உள்ளது.
ஆல்டோஸ் லேப்ஸ் தனது ஆய்வகத்தில் மனித உயிரணுக்களை புத்துயிர் பெறக்கூடிய உயிரியல் மறுஉருவாக்கம் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது. மனித உடல் டிரில்லியன் கணக்கான உயிரணுக்களால் ஆனது மற்றும் மனித உயிரணுக்களை புத்துயிர் பெற வைப்பதில் இந்த நிறுவனம் வெற்றி பெற்றால், அது மனித ஆயுளை நீட்டிக்க முடியும்.
பிற நிறுவனங்களின் முயற்சி
PayPal நிறுவனத்தின் இணை நிறுவனர் Peter Thiel, Methuselah பவுண்டேஷனில் அதிக அளவு பணத்தை முதலீடு செய்துள்ளார். இந்த அறக்கட்டளை சமீபத்திய தொழில்நுட்பங்கள் மூலம் நோய்களைத் தடுப்பதிலும் ஆயுளை நீட்டிப்பதிலும் ஆய்வுகளை நடத்தி வருகிறது.
அதேபோல ChatGPT-ன் நிறுவனர் சாம் ஆல்ட்மேன், ரெட்ரோ பயோ சயின்ஸில் 180 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளார். அதன் சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் மூலம் மனித ஆயுளை 10 ஆண்டுகள் நீட்டிக்க முடியும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
தொழில்நுட்பத்தால் மரணத்தை வெல்ல முடியுமா?
உயிரியல் மறுஉருவாக்கம், உயிரணுக்களை உயிர்ப்பித்தல் மற்றும் அவற்றின் இளமையை பராமரிப்பது குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகின் பல நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் மனித ஆயுளை நீட்டிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் லண்டன் இம்பீரியல் கல்லூரி மற்றும் சிங்கப்பூரின் டியூக்-என்யுஎஸ் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வக எலிகளின் ஆயுட்காலத்தை 25 சதவிகிதம் அதிகரிக்கும் மருந்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளனர். இது மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் முயற்சியில் முக்கியாய் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
ஆடம்பர ஜாம்பிகளின் உலகம்
மரணமிலா வாழ்க்கைக்கான கனவுகள் பல சர்ச்சைகளுடன் வருகின்றது. SmartWater குழுமத்தின் நிறுவனர் Phil Clery இது குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். ஃபிலின் கூற்றுப்படி, இந்த தொழில்நுட்பம் பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும், அளவில்லாத பணம் வைத்திருக்கும் 'ஆடம்பரமான ஜோம்பிஸ்' மட்டுமே நீண்ட ஆயுளை அனுபவிக்கும் சமூகத்தை உருவாக்கும்.
பில்லியனர்கள் தங்கள் ஆயுளை நீட்டிக்க முயற்சிப்பதற்குப் பதிலாக உலகின் ஏழைக் குழந்தைகளைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வாதிடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் 5 மில்லியன் குழந்தைகள் பசி மற்றும் மருத்துவ பராமரிப்பு இல்லாததால் இறப்பதை மேற்கோள்காட்டி அவர் இந்த கருத்தைக் கூறியுள்ளார்.
மரணமிலா வாழ்க்கை ஏற்படுத்தும் விளைவுகள்
ஆயுளை அதிகரிக்கும் மருந்துகள் உலகில் சமத்துவமின்மையை அதிகரிக்கக்கூடும் என்று கிளரி எச்சரித்தார். மேலும் அவர் கூறுகையில், " செல்வந்தர்களின் ஆயுளை அதிகரிக்கும் ஒரு மருந்து உலகை தற்போதைய நிலையை விட அநீதி நிறைந்தாக மற்றும் சமத்துவமற்றதாக மாற்றும். பணக்காரர்கள் மட்டுமே அதை அணுகுவார்கள், அதே நேரத்தில் ஏழைகள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே போராடுவார்கள்.



Click it and Unblock the Notifications
