Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
உலகம் அழியும் போது பணக்காரர்கள் வாழ கட்டப்பட்டு வரும் பதுங்கு குழிகள்..ஒரு டிக்கெட்டின் விலை எவ்வளவு தெரியுமா?
பணக்காரர்களும், ஏழைகளும் ஒரே பூமியில் வாழ்ந்தாலும் அவர்கள் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்வதில்லை. இங்கு ஏழைகளுக்கு நீதி மறுக்கப்பட்ட வாழ்க்கையும், பணக்காரர்கள் நீதியை விலைக்கு வாங்கும் ஆடம்பர வாழ்க்கையும் விதிக்கப்பட்டுள்ளது. உலகில் பணக்காரர்கள் விதிமுறைகளே இல்லாத ஒரு வாழ்வை அனுபவித்து வருகிறார்கள்.
எனவே அவர்கள் எப்போதும் சாதாரண மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியதா விஷயங்களை மிகவும் எளிதாக செய்து விடுகிறார்கள். அந்த வகையில் உலகமே அழிந்தாலும் தங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்ள பணக்காரர்கள் ஒரு வழியைக் கண்டறிந்துள்ளனர். சமீபத்தில் இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இந்த உலகம் அழிவை சந்தித்தே தீரும். எனவே அவர்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க இப்போதே ஒரு வழியைக் உருவாக்கி விட்டார்கள்.

தற்போது உலகின் மிகப் பெரிய பணக்காரர்களுக்காக ரகசிய ஆடம்பரமான பதுங்கு குழிகள் தயாரிக்கப்படுகின்றன, அங்கு அவர்கள் உலக அழிவு ஏற்பட்ட்டால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அமெரிக்க உயர் அதிகாரி கேத்தரின் ஆஸ்டின் ஃபிட்ஸ் மீண்டும் ஒரு தலைப்பு செய்தியை உருவாக்கியுள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்தில் இருந்த கேத்தரின், 1998 மற்றும் 2015 க்கு இடையில் 21 டிரில்லியன் டாலர்களை (சுமார் ரூ. 1,743,00,00,00,00,000) செலவழித்து அமெரிக்க அரசாங்கம் சுமார் 170 நிலத்தடி மற்றும் கடலுக்கடியில் பதுங்கு குழிகளை ரகசியமாக உருவாக்கியுள்ளதாக சமீபத்தில் கூறினார். மேலும் இந்த பதுங்கு குழிகள் உலகம் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஒரு ரகசிய போக்குவரத்து அமைப்பு மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் பிரபல பாட்காஸ்டின் போது கேத்தரின் இந்தக் கூற்றை முன்வைத்தார். உலகின் பேரழிவுகளிலிருந்து பணக்காரர்களைப் பாதுகாக்க சூப்பர் ஸ்ட்ராங் பதுங்கு குழிகள் கட்டப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். இருப்பினும், இந்த கூற்றுக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
21 டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பதுங்கு குழிகள்
2017-ல் வெளியிடப்பட்ட பொருளாதார அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த அறிக்கை அமெரிக்க கூட்டாட்சி செலவினங்களில் பெரும் முறைகேடுகளை வெளிப்படுத்தியது. கோடிக்கணக்கான டாலர்கள் முறைகேடாக செலவழிக்கப்பட்டது என்று கூறப்பட்டது. இந்த பெரும் தொகை பல சக்திவாய்ந்த பதுங்கு குழிகளை ரகசியமாக கட்ட பயன்படுத்தப்பட்டதாக கேத்தரின் ஃபிட்ஸ் குற்றம் சாட்டுகிறார்.
இது வெறும் கட்டுக்கதை அல்ல
அமெரிக்க நிறுவனமான SAFE (Strategically Armored and Fortified Environments) சமீபத்தில் அதன் மெகா திட்டப் பெயரை அறிவித்துள்ளத. இந்த திட்டத்தின் பெயர் 'Aerie'. இந்த திட்டத்தின் படி 2026 ஆம் ஆண்டுக்குள் வாஷிங்டனுக்கு அருகில் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிலத்தடி கோட்டை கட்டப்பட உள்ளது. மனிதர்கள் வாழத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த கோட்டை, இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்படும் பேரழிவுகளின் போது உலகின் 625 பணக்காரர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். இந்த கோட்டையில் வசிக்க ஒற்றை டிக்கெட்டின் விலை ஒரு நபருக்கு 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த பதுங்கு குழி பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு இணையான வசதிகளை வழங்கும் வகையில் உருவாக்கப்படுகிறது, இதில் AI-அடிப்படையில் செயல்படும் சுகாதார வசதிகள், மருத்துவமனைகள், விளையாடும் இடம், உட்புற நீச்சல் குளம் போன்ற வசதிகள் இடம் பெற்றிருக்கும், இப்போது வரை இது உலகெங்கிலும் உள்ள பணக்காரர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.
ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டில், நியூசிலாந்தை சேர்ந்த சில பில்லியனர்கள் பதுங்கு குழிகளை வாங்கினார்கள். குறிப்பாக, பேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க் ஹவாய் தீவில் ஒரு பெரிய தனியார் வளாகத்தை கட்டி வருகிறார், அதில் ஒரு நிலத்தடி பதுங்கு குழியும் அடங்கும். உலகமே அழிந்தாலும் பணக்காரர்கள் வாழ்வதற்கு அனைத்து வசதிகளையும் உருவாக்கி வருகின்றனர். ஏழைகளின் நிலைதான் எப்போதும் போல கேள்விக்குறியாகவே உள்ளது.



Click it and Unblock the Notifications

