Latest Updates
-
நெல்லூர் வெங்காய கார சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. 1 வாரமானாலும் கெட்டுப்போகாது.. -
இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு பல தலைவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வது ஏன்? -
18 ஆண்டுக்கு பின் மகம் நட்சத்திரம் செல்லும் கேதுபகவான்: இந்த 3 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்... -
பெங்காலி தக்காளி சட்னி ரெசிபி... ஒரு தடவை அரைச்சு பாருங்க... இனிப்பா, காரமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க... -
குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 4 ராசிகாரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கூடிவரப்போகுதாம்...! -
இளநீர் Vs நெல்லிக்காய் ஜூஸ் - இவற்றில் கோடையில் குடிக்க சிறந்தது எது? -
Tamil Nadu Election 2026: தமிழ்நாடு அரசிலுடன் தொடர்புடைய புகழ்பெற்ற தமிழ்நாட்டு கோவில்கள் என்னென்ன தெரியுமா? -
12 ஆண்டுகள் கழித்து உச்ச வீட்டில் நுழையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு ராஜயோகம் அடிக்கப்போகுது..
வீட்டில் செல்வம் கொழிக்க வலம்புரி சங்கு வழிபாடு செய்யுங்கள்..!
வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும் என்கிறது சாஸ்திரம்.. அப்படி அந்த வலம்புரி சங்கினை வீட்டில் வைக்க வேண்டும் என்றால் அதை பராமரிப்பதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கிறது.. அதை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்..
அதாவது வலம்புரி சங்கினை காலியாக வைக்கக் கூடாது, தரையில் வைக்கக் கூடாது என்றெல்லாம் பல விதிமுறைகள் உண்டு. இவற்றை முறையாக பின்பற்றினால் மட்டுமே சங்கின் வடிவில் மகாலட்சுமி நம்முடைய வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வாள். ஆம் வலம்புரி சங்கு மகாலட்சுமியின் ஒரு அங்கமாக கருதபப்டுகிறது..

வலம்புரி சங்கு என்றால் என்ன?
வலம்புரி சங்கு என்பது வாய் பகுதி துவங்கி, சுழி வரை வலது புறமாக சுழன்று இருக்கும் சங்கிற்கு வலம்புரி சங்கு என்று பெயர். வலம்புரிச் சங்கு (Dakshinavarti Shankh) என்பது சங்குகளில் ஒரு அரிய வகை ஆகும். இது இந்து நம்பிக்கைகளில் மிகப் புனிதமான சங்காகவும், வளத்தையும், நலத்தையும் தருவதாக கருதப்படுகிறது. இந்த நம்பிக்கைகளின் காரணமாக வலம்புரிச் சங்குகளை அதிக பணம் அளித்து வாங்குபவர் உள்ளனர்.
வலம்புரி சங்கின் சிறப்புகள்
வலம்புரி சங்கு மங்கலத்தின் அடையாளமாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது...தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது கிடைத்த பல பொருட்களில் ஒன்று வலம்புரி சங்கு. மகாலட்சுமியுடன் சேர்ந்து பாற்கடலில் தோன்றியது என்பதால் இதை மகாலட்சுமியின் அம்சமாக கருதி வழிபடுகிறோம். வீட்டில் வலம்புரிச் சங்கு வைத்து வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக நமக்குக் கிட்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. நம் வீட்டில் வலம்புரிச் சங்கு பூஜை முறையாக நடைபெற்றால் பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும்நீங்கி விடும்.. வீட்டில் வாஸ்து குறை காணப்பட்டால் மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இட்டுக் கால் படாத இடங்களிலும் வீட்டின் மூலைகளிலும் காலையில் தெளித்து விட்டால் அந்தக் குறைகள் நீங்கும்.
வழிபடும் முறைகள்
வலம்புரிச் சங்கிற்கு பொருத்தமான ஒரு வெள்ளித் தட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.. அதில் பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள். அப்படி வெள்ளித் தட்டில் வைக்க வசதியில்லாதவர்கள் பித்தளை தட்டினை உபயோகிக்கலாம்.. பின்னர் அதன் மேல் வெண் பட்டு விரித்துக் கொள்ளுங்கள். இந்தத் தட்டினை மகாலட்சுமி படத்தின் முன்னால் வைக்கவும். அதன் மேல் வலம்புரிச் சங்கினை வாய் பிளந்த பக்கம் மேற்புறமாக இருக்குமாறு வையுங்கள்.
முன்னதாக சங்கிற்கு வட்டமான முன் பகுதியில் நடுவில் ஒரு பொட்டும் அதனை சுற்றி 7 பொட்டுக்கள், அதாவது முதலில் சந்தனம் அதன் மேல் குங்குமம் வைக்கவும். பின்பு பிளந்த பக்கத்தின் ஓரமாக இதேபோல் ஏழு பொட்டுகள் வைக்கவும். சங்கினுள் சிறிது மஞ்சள் கலந்த நீர் விட்டு நிரப்பவும். இதனுள் இரண்டு கிராம்பு சேர்க்கவும். இப்படித் தயார் செய்யப்பட்ட சங்கினை தட்டில் வைக்கவும். சங்கு கிழக்கு மேற்காக இருக்க வேண்டும். வால் பகுதி மேற்கு நோக்கியிருக்க வேண்டும். பின்னர் அதில் நெய் தீபம் ஏற்றவும். சங்கு உள்ள தட்டினைச் சுற்றி பூக்களைத் தூவி அலங்கரிகக்வும்..
'ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தன்னோ சங்கஹ் ப்ரசோதயாத்'
என்று சங்கு காயத்ரி மந்திரத்தை 18 முறை சொல்லி தூப, தீபம் ஆராதனை செய்து சங்கினை வழிபட வேண்டும். பின்னர் மகாலட்சுமி தாயாரை நினைத்து,
'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் தனநாயிகாயை
ஸ்வர்ணாகர்ஷண தேவ்யாயை
சர்வ தாரித்ரிய நிவாரணாயை
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹா:'
எனும் மந்திரத்தினை 108 தடவைக்கு குறையாமல் சொல்லி தூப, தீப, நைவேத்திய ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். அந்த பூஜையினை அதிகாலை வேளையில் செய்வதே சிறப்பாகும்.
வலம்புரி சங்கின் பலன்கள்
வலம்புரி சங்கு இருக்கும் வீட்டில் மகாலட்சுமியின் அருட்கடாட்சம் நிரந்தமாக நிறைந்திருக்கும். செல்வம் வலம் பெருகும், ஆரோக்கியம், ஒற்றுமை, நிம்மதி மகிழ்ச்சி என அனைத்தும் தலைத்தோங்கும். வீட்டில் வலம்புரி சங்கு இருந்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.. அப்படி கிடைக்கும் மகாலட்சுமியின் அருள் சாதாரணமாக கிடைக்காது.. அதனை வழிபடும் முறைகளை சரியாக பின்பற்றி வழிபாடு செய்ய வேண்டும்.. அதனை பராமரிப்பதையும் சரியாக பார்த்து பரமரிக்க வேண்டும்..



Click it and Unblock the Notifications











