Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
இன்று வளர்பிறை சோமவார பிரதோஷம்... சிவனை வழிபட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாள் திரயோதசி திதி தினங்களில் மாலை 4.30 முதல் 6 மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அந்த நேரத்தில்தான் ஈசன் விஷம் உண்ட மயக்கம் தெளிந்து அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அந்த வகையில் இன்று சோமவார பிரதோஷம். இந்த பிரதோஷம் பொதுவாக திங்கட்கிழமைகளில்தான் வரும்.. சோமவார பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபட்டால் சகல தோஷங்களும் துன்பங்களும் விலகி வாழ்வில் இன்பம் பெறலாம்.. அதனால் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்து இருக்கும்.

சோமவாரம் என்பது திங்கட்கிழமையைக் குறிக்கும். திங்கள் என்றால் சந்திரன். சோமன் என்றால் சிவபெருமானின் திருநாமங்களில் ஒன்று. சந்திரனைப் பிறையென சிரசில் சூடிக்கொண்டிருப்பவர் என்பதால் ஈசனுக்கு சோமன் எனும் திருநாமம் அமைந்தது. அதேபோல் சந்திரசேகரன் என்கிற திருநாமமும் உண்டு. சிவாலயங்களில் இன்று மாலையில் சோமவாரப்பிரதோஷம் நடைபெறுகிறது. மற்ற பிரதோஷ நாட்களைவிட சனிப்பிரதோஷம் மற்றும் சோமவார பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு.
அந்த வகையில் இன்று வைகாசி மாதத்தின் சோமவார பிரதோஷம். நம்பிக்கையோடு நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை கூறி பிரதோஷ காலத்தில் நந்தியம் பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். அத்துடன் துன்பங்கள் அனைத்தும் விலகும். மனோபலம் பெருகும். மனதில் தெளிவு பிறக்கும். சிவனாரையும் சிவ மைந்தன் முருகனையும் சந்திர பகவானையும் ஆத்மார்த்தமாக முழு ஈடுபாட்டுடன் இன்று வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டுவதெல்லாம் கிடைக்கப் பெறுவீர்கள்.
விரதம் இருக்கும் முறை
பிரதோஷ நாளில் காலையில் இருந்து விரதம் இருந்து பிரதோஷ வேளையான மாலையில், சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்ணார தரிசித்துப் பிரார்த்தனை செய்தால் இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும். பலர் பிரதோஷ தினத்தில் விரதமிருந்து, பிரதோஷ தரிசனம் காண்ட பின்னர் தங்களின் விரதத்தை முடிப்பது உண்டு. சாதாரண நாளில் வரும் பிரதோஷத்தில் இருக்கும் விரதத்தை விட திங்கட்கிழமை வரும் பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. இதனை சோமவார என்பார்கள். இந்த பிரதோஷநாளில், சிவனாரை நினைத்து வீட்டில் விளக்கேற்றுங்கள். சிவ ஸ்துதி பாராயணம் செய்யுங்கள். ருத்ரம் சொல்லி வழிபடுங்கள். பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும் என்பது நம்பிக்கை.
நைவேத்தியம்
இன்று சிவனுக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். அதோடு பாயசம் நைவேத்தியம் செய்வதும் விசேஷம். பிரதோஷ நாளில் பசுவுக்கு உணவளிப்பதும் அகத்தி கீரை வழங்குவதும் சிறப்பு.
இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்
பிரதோஷ விரதம் பற்றி ஸ்கந்த புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. பிரதோஷ விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம். பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கும் நாளைப் பொறுத்து பலன்களைத் தரும். ஞாயிற்றுக்கிழமை நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். திங்கட்கிழமை துன்பத்தை நீக்கி விருப்பங்களை நிறைவேற்றும். செவ்வாய் அன்று நோய்கள் குணமாகும். புதன்கிழமை அன்று பிரதோஷ விரதம் அனுஷ்டித்தால் நினைத்தது நடக்கும் நிறைவேறும். இந்த விரதத்தை வியாழன் அன்று செய்தால் எதிரிகள் இருக்க மாட்டார்கள். வெள்ளிக்கிழமை செய்வது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். சனிக்கிழமையில் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும்.



Click it and Unblock the Notifications