Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
பாபா வாங்கா கணிப்புப்படி 2026-ல் தங்கத்தின் விலை எந்த அளவிற்கு உயரப்போகுது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
ஒவ்வொரு புது வருடம் பிறக்கும் போதும் பல்கேரியாவைச் சேர்ந்த ஆன்மீகவாதியான பாபா வாங்காவின் பல கணிப்புகள் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகின்றன. இரண்டாம் உலகப் போர், அமெரிக்காவின் செப்டம்பர் 11 தாக்குதல்கள் மற்றும் சுனாமி போன்ற உலகை அச்சுறுத்திய நிகழ்வுகளை பாபா வாங்காவின் கணிப்புகள் முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தங்கத்தின் விலை குறித்து பாபா வாங்காவின் கணிப்புகள் தற்போது பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளன. தங்கத்தின் விலை குறித்த பாபா வாங்காவின் கணிப்புகள் மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகின்றன. இது பல ஊடக தளங்களில் பல்வேறு விதமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த பாபா வாங்கா?
பாபா வங்கா பெரும்பாலும் "பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்" என்று அழைக்கப்படுகிறார், அவர் தனது எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் திறனுக்காக பிரபலமானவர். அக்டோபர் 31, 1911 அன்று பிறந்த பாபா வாங்கா 1996-ல் இறந்தார். தங்கத்தின் விலை குறித்த பாபா வங்காவின் கணிப்பு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பாபா வங்காவின் கணிப்பு உண்மையாகுமா? ஆகாதா? என்பது குறித்து மக்களிடையே இது விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
பாபா வாங்கா பன்னிரண்டு வயதில் தனது பார்வையை இழந்தார். ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர் பல விஷயங்களை முன்கூட்டியே கணித்தார், அவற்றில் சில விஷயங்கள் சமீப காலங்களில் நடந்தேறியுள்ளன. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பலரும் இப்போது கவலை அடைந்துள்ளனர். பாபா வங்காவின் கணிப்புகளையும், அவை தொடர்ந்து நிறைவேறி வருவதாலும், அவரது கணிப்பின் அடிப்படையில் தங்கத்தின் விலையில் மேலும் ஒரு உயர்வு ஏற்படுமா இல்லையா என்று பெரும்பாலான மக்கள் கவலையடைந்து வருகின்றனர்.
தங்கத்தின் விலை
இந்தியாவில் ஒரு பவுன் தங்கத்தின் தற்போதைய விலை ரூ. 1,17,000-ஐ எட்டியுள்ளதுடன், கடந்த சில மாதங்களாக புயல் வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும், பாபா வாங்கா தங்கத்தின் விலை உயர்வை பற்றி முன்கூட்டியே கணித்திருந்ததால், அவரது கணிப்பின் விளைவாக தங்கத்தின் விலை எந்த அளவுக்கு உயரும் என்பது குறித்த கவலை அதிகரித்துள்ளன.
தங்கத்தின் விலையில் சமீப காலமாக ஏற்பட்ட வரும் வியத்தகு உயர்வு, பாபா வாங்காவின் கணிப்பை உறுதிப்படுத்துகிறது. உலக நாடுகளிடையே நிலவி வரும் அரசியல் மோதல்கள், பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக அதிகரித்துள்ள உலகளாவிய நிச்சயமற்ற தன்மை, உலகம் முழுக்க முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான முதலீடாக தங்கம் மற்றும் வெள்ளியை நோக்கி நகர்த்தியுள்ளது.
தங்கம் பற்றிய பாபா வாங்காவின் கணிப்பு
பாபா வாங்கா 2026-ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் என்றும், அது கடந்த சில மாதங்களாகவே உச்சத்தை எட்டியுள்ள தங்கத்தின் விலையில் பெரும் உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் முன்னறிவித்துள்ளார்.
பாபா வங்காவுக்கு 2026-ஆம் ஆண்டில் ஒரு நிதி நெருக்கடி அல்லது "பணப் பற்றாக்குறை" ஏற்படப்போவது குறித்து ஒரு தீர்க்கதரிசனம் கிடைத்ததாகவும், அது தங்கத்தை மிகவும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக மாற்றும் என்றும், அதே சமயம் நிலம், வாகனம் போன்ற பாரம்பரிய முதலீடுகள் பெரும் நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் தங்க விலை குறித்து பாபா வங்கா என்ன கணித்துள்ளார்?
பாபா வங்கா தனது கணிப்பில் இந்தியாவைப் பற்றி குறிப்பிடவில்லை என்றாலும், ஒருவேளை அவரது கணிப்புகள் உண்மையாகுமானால், நாட்டில் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, 2026-ன் இறுதிக்குள் தங்கத்தின் விலை ரூ. 1.62 லட்சம் முதல் ரூ. 1.82 லட்சம் வரை எட்டக்கூடும்.



Click it and Unblock the Notifications
