Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்டையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம் -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்..
Ayudha Pooja: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை அன்னிக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்புங்க.. சந்தோஷப்படுவாங்க!
Ayudha Pooja 2026 Wishes In Tamil: நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. நவராத்திரி பண்டிகையில் ஒன்பதாம் நாளான இறுதி நாளில் ஆயுத பூஜையும் பத்தாவது நாளில் விஜயதசமியும் பக்தியுடன் கொண்டாடப்படுகிறது.
கல்வியில் சிறந்து விளங்கவும் தொழில் வளம் பெருகவும் ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையும், 20 ஆம் தேதி விஜய தசமியும் கொண்டாடப்பட இருக்கிறது.

நவராத்திரி நாட்களில் அரக்கன் மகிஷாசுரனை தேவி வதம் செய்த நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. துர்கா தேவி தனது ஆயுதங்களை பூஜை செய்த நாள் ஆயுத பூஜையாகவும், தசமி திதியில் பத்தாம் நாள் அசுரனை அழித்த தேவியின் வெற்றியை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுவதாகவும் புராணங்கள் கூறுகின்றன. ஆயுத பூஜை அன்று உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எவ்வாறு வாழ்த்து கூறலாம் என இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

வாழ்த்து 1
செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும் அறிவாகவும் இருந்து செயல்படும் இறைவனுக்கு என்றென்றும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். இன்று தொடங்கும் நம் அனைத்து காரியங்களிலும் இறைவனின் அருள் பரிபூரணமாக இருந்து வெற்றியை நமக்கு தரட்டும். இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 2
சிறப்புமிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நாளில் அன்னையின் அருளால் மக்கள் அனைவரும் வெற்றி மேல் வெற்றி பெற்று அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ எங்களது மனமார்ந்த ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
படிப்பிற்கும் , தொழிலுக்கும், செல்வத்திற்கும் உரிய தெய்வங்களை வணங்கி அனைத்து வளங்களையும் பெறுவோம். இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!

வாழ்த்து 4
ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணரத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5
தொழில் சிறக்கட்டும்... வளம் பெருகட்டும்...! இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்...!

வாழ்த்து 6
அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்! கலைமகளின் அருள் எல்லாருக்கும் கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் இந்நாளில் பூஜை செய்து வணங்குவோம். இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
உறவுகள் அனைவருக்கும் கல்வி, தொழில், செல்வம், வீரம் பெருக கலைமகள் ஆசி நிலைத்து நின்று செழித்தோங்க இந்த நாளில் வேண்டிக்கொள்வோம். இனிய ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications
