உலகம் முழுவதும் நடைபெறும் தேர்தல்கள் பற்றிய சில ஆச்சரியமான உண்மைகள்!

Assembly Elections Result 2023: நம் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் தேர்தல் என்பது மிக முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. ஒரு நாட்டை ஆள சரியான நபரை தேர்ந்தெடுக்கும் மிகச்சிறந்த பணி தான் இந்த தேர்தல் களம். மக்களுக்காக சேவை செய்யப் போகும் சரியான நபரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு மிக முக்கியமான பங்கு வகிப்பதில் தேர்தல் பணி உள்ளது .

அந்த வகையில் பார்க்கும் போது அந்தக் கால மன்னர் ஆட்சி முதல் இந்தக் கால மக்கள் ஆட்சி வரை உலகம் முழுவதும் உள்ள தேர்தல்கள் பல கால கட்டத்தை கடந்து தான் வந்துள்ளது. வாக்களிப்பதைப் பற்றி நீங்கள் எவ்வளவு அறிந்திருந்தாலும், இன்னும் தேர்தலைப் பற்றி நீங்கள் அறிந்திராத விஷயங்கள் நிறையவே உள்ளன.

Assembly Elections Result 2023: Top 5 Surprising Facts about Elections Around the World In Tamil

மக்கள் தேர்தலை நடத்தும் சில வித்தியாசமான வழிகளைக் கண்டு உண்மையில் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உலகம் முழுவதும் தேர்தலில் வாக்களிக்க சில விநோதமான வாக்களிக்கும் முறைகளை பின்பற்றி உள்ளனர். அந்த வகையில் தேர்தலைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி இக்கட்டுரையில் நாம் அறிந்து கொள்வோம்.

தேர்தலை பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான விஷயங்கள்:

வாக்காளர்கள் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிப்பதில்லை

முந்தைய தேர்தல் முறைகளில் வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வாக்குச்சீட்டு முறைகளை பின்பற்றி வந்தனர். ஆனால் அந்தக் கால பண்டைய கிரேக்க முறையில் நடத்தப்பட்ட ஆய்வில் வாக்காளர்கள் வாக்களிக்க கருப்பு மற்றும் வெள்ளை கூழாங்கற்களைப் பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே ரோமானியர்கள் கூழாங்கற்களுக்கு பதிலாக களிமண் பந்துகளை மாற்றி தலைகவசங்களை வாக்குப் பெட்டிகளாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதுவே அமெரிக்க காலனித்துவம் இருந்த காலத்தில் ஆரம்ப நாட்களில் வாக்காளர்கள் வண்ணமயமான பீன்ஸ் அல்லது சோளக்கதிர்களை வாக்களிக்க பயன்படுத்தி வந்துள்ளனர்.

தென்மேற்கு ஆப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்ற வாக்குப்பதிவில் வாக்காளர்கள் கைகளில் பச்சை வண்ணம் பூசப்பட்டு அதை வைத்து வாக்களித்து உள்ளனர். இதுவே நீங்கள் ஈராக்கியர்களை எடுத்துக் கொண்டால் ஊதா நிற மை ஜாடியில் விரலை நனைத்து தங்கள் ஆதரவை காட்டி உள்ளனர். காம்பியன் வாக்காளர்கள் எப்பொழுதுமே வித்தியாசமானவர்கள். அவர்கள் கண்ணாடி பளிங்கு கற்களை வண்ண டிரம்மில் போட்டு தங்கள் ஆதரவை காட்டியுள்ளனர். பளிங்கு கற்கள் ஒன்றன் மேல் ஒன்று விழும் ஒலியை வைத்து பெரும் ஆதரவை கணித்தனர்.

மக்களின் வசதிக்கேற்ப தேர்தல் நாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது

பொதுவாக அமெரிக்க தேர்தல்கள் நவம்பர் மாதம் செவ்வாய் கிழமைகளில் தான் நடைபெறும். ஏனெனில் அமெரிக்காவில் விவசாயிகள் அதிகமாக இருந்த போது இது நடைமுறையில் இருந்தது. ஏனெனில் அவர்களின் சாகுபடி மற்றும் அறுவடை நவம்பர் மாதத்திற்குள் முடிந்து விடும். இதனால் விவசாயிகள் வேலையில் இருந்து விலகி வாக்களிக்க அதிக நேரம் கிடைத்தது.

ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் கிரீஸ் உட்பட பல நாடுகளில் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் குறைவாக வேலை செய்யும் போது தேர்தல் நடத்தப்படுகிறது. இதனால் எல்லா மக்களும் தேர்தலில் கலந்து கொள்ள முடியும். நெதர்லாந்து போன்ற நாடுகளில் புதன் கிழமைகளில் வாக்களிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பெரும்பாலான வாக்குச்சாவடிகள் பள்ளிகளில் அமைந்துள்ளதை அடுத்து பள்ளிகளுக்கு புதன் கிழமைகளில் அரை நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

வாக்களிக்க எல்லோருக்கும் 18 வயது இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது

அமெரிக்காவில் முதன் முதலில் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட போது 21 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய வெள்ளையர்களில் சொத்துக்கள் உடைய ஆண்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற சட்டம் இருந்தது. 1971 ஆம் ஆண்டு வரை வாக்களிக்கும் வயது 21 ஆகவே இருந்தது. அதன் பிறகு தான் வாக்களிக்க 18 வயதை தீர்மானித்தார்கள். அதன் பிறகு தான் 18 வயதை நிரம்பியவர்கள் இராணுவத்தில் சேரலாம், திருமணம் செய்து கொள்ளலாம், வரிப்பணம் செலுத்தலாம் போன்ற நடைமுறைகள் நடைமுறைக்கு வந்தன.

இதன் பிறகு பல நாடுகளில் 18 வயதை நிரம்பியவர்கள் வாக்களிக்கலாம் என்ற சட்டம் வந்தது. மால்டா மற்றும் ஆஸ்திரியாவில் 16 வயதை அடைந்தவர்கள் கூட வாக்களிக்க முடியும். உள்ளூர் தேர்தலில் வாக்களிக்க ஜெர்மானியர்கள் 16 வயதை எட்டி இருந்தால் போதும். ஜனாதிபதித் தேர்தலுக்கான நேரத்தில் 18 அல்லது 17 வயது இளைஞர்களை முதன்மைத் தேர்தலில் வாக்களிக்க மூன்றில் ஒரு பங்கு மாநிலங்கள் அனுமதிக்கின்றன என்கிறது புள்ளி விவரங்கள்.

சில தேர்தலின் முடிவுகளை தெரிய நீண்ட காலம் எடுக்க வாய்ப்பு உள்ளது

2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் சுமார் 200 மில்லியன் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்தியாவில் ஒவ்வொரு தேர்தலிலும் சுமார் 900 மில்லியன் வாக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இந்த வாக்குகளை எண்ண இந்தியாவில் மட்டும் 11 மில்லியன் தேர்தல் பணியாளர்கள் தங்கள் கடின உழைப்பை போடுகிறார்கள். மக்கள் எளிதாக வாக்களிக்க வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது.

அதே மாதிரி வாக்காளர்களை நீண்ட தூரத்திற்கு அழைத்துச் சென்றும் வாக்களிக்க வைத்துள்ளனர். வாக்குப் பதிவு இயந்திரங்களை யானையின் முதுகில் வைத்து பாலங்களை கடப்பது, காடுகள், பனிப்பாறைகள் மற்றும் பாலைவனங்கள் வழியாக கடந்து செல்வது போன்ற விஷயங்களை செய்து வந்துள்ளனர். இதன் மூலம் காடுகளில் வசிக்கும் நபரும் வாக்களிக்க வாய்ப்பு தரப்பட்டது. அமெரிக்காவில் மார்ச் முதல் மே வரை தேர்தல் நடந்தால் வெற்றியாளர்களை அறிவிக்க 10 வாரங்கள் வரை ஆகலாம்.

மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் வாக்களிக்கலாம்

குரங்கில் இருந்து மனிதர்கள் வந்தார்கள் என்பார்கள். ஒரு வேளை இந்த வாக்களிக்கும் எண்ணம் நமக்கு விலங்குகளிடம் இருந்து வந்திருக்கலாம். ஏனெனில் பெரும்பாலும் காட்டுகளில் வாழும் மிருகங்கள் தங்கள் தலைவரை தேர்ந்தெடுக்க இந்த நடைமுறையைத் தான் பின்பற்றுகிறார்கள். குறிப்பாக சிம்பன்சி குரங்குகள் தங்கள் தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர். யார் சிம்பன்சி தலைவராக வேண்டுமே அவர் மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் ஆதரவை பெறுகிறார்.

மற்றவர்களுக்கு உதவி செய்யும் நபர் சிம்பன்சி கூட்ட தலைவராகிறார். இதுவே மான் கூட்டங்களில் ஒரு வயலில் இருந்து 60% க்கும் அதிகமான சிவப்பு மான் கூட்டங்கள் எழுந்து நின்று ஆதரவை காட்டுகின்றன. இதுவே ஆப்பிரிக்க காட்டு நாய்கள் தும்மலின் மூலம் ஆதரவை வெளியிடுகின்றன. இதுவே நீங்கள் பபூன் பூச்சிகளை எடுத்துக் கொண்டால் வெவ்வேறு திசைகளில் புறப்படும் போது எந்த தலைவரை பின்பற்ற வேண்டும் என்பதை உறுப்பினர்களைக் கொண்டு தேர்ந்தெடுக்கின்றனர்.

இதுவே தேனீக்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் தேர்ந்தெடுத்த மகரந்தத் தளங்களுக்கு மற்ற தேனீக்களை அழைத்துச் செல்ல நடனமாடும் முறையை பின்பற்றுகிறார்கள். அந்த மற்ற தேனீக்களை அங்கு அழைத்துச் செல்ல போட்டி போடுகிறார்கள்.

எனவே நிலையான ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பது என்பது மனிதர்களில் மட்டுமல்ல விலங்குகளிடம் கூட இருக்கிறது. இப்படி மன்னர் ஆட்சி முதல் இன்று இருக்கும் மக்கள் ஆட்சி வரை மக்கள் தங்கள் தலைவனை தேர்ந்தெடுக்க வித்தியாசமான முறைகளை பின்பற்றி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Desktop Bottom Promotion