Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
April 2024 Monthly Numerology Predictions In Tamil: ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி எண்களுக்கு உள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்ற பல விஷயங்களை அறியலாம்.
2024 ஆம் ஆண்டின் மூன்றாவது மாதமான ஏப்ரல் மாதம் உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே, எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதிப்படி 2024 ஏப்ரல் மாதம் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஏப்ரல் மாதம் கலவையான பலன்களைத் தரும். இம்மாதத்தில் எந்த ரிஸ்க்கையும் எடுக்காதீர்கள். இம்மாதத்தில் எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் அனுபவம் வாய்ந்த நபர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே எடுக்க வேண்டும். இம்மாதத்தில் எந்த ஒரு முதலீடுகளையும் செய்யாதீர்கள். இந்த மாதத்தில் பொறுமையாக இருந்தால், நல்ல பலன்களைப் பெறலாம்.
எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய என் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சாதகமாகவோ அல்லது சராசரியாகவோ இருக்கும். வேலையைப் பொறுத்தவரை சிறப்பாக செயல்படுவீர்கள். சிறந்த பலன்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும் நீங்கள் மற்றவர்களுடன் பேசும் போது மென்மையைக் கடைப்பிடித்தால், நல்ல பலன்களைப் பெறலாம். இல்லாவிட்டால், பிரச்சனையில் சிக்கி வெளிவர முடியாமல் தவிப்பீர்கள். இந்த மாதத்தின் இளைய உடன்பிறப்புக்களின் உதவியால் சில முக்கிய வேலைகளை செய்து முடிக்க முடியும்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதத்தில் பொறுமையையும், நேர்மையுடனும் இருக்க வேண்டும். அத்துடன் சற்று எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு இம்மாதத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். படிக்கும் மாணவர்கள் இம்மாதத்தில் இலட்சியமாக இருப்பதைத் தவிர்த்து, பாடத்தில் கவனத்தை செலுத்த வேண்டும். ஆண்கள் எந்த விதமான பெண்களுடன் பழகும் போது, உறவுகளில் கண்ணியத்தையும் விவாதத்தில் மரியாதையையும் பேணுவது அவசியம்.
எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இம்மாதத்தில் மனதை அலைப்பாய விடாமல், இலக்கில் கவனம் செலுத்தினால் வெற்றி பெறலாம். வேலையை முடிக்க அதிக முயற்சியை எடுக்கும் போது உங்கள் இலக்கை எளிதில் அடைவதோடு, மிகுந்த மகிழ்ச்சியையும், திருப்தியையும் உணர்வீர்கள். இருப்பினும் இம்மாதத்தில் யாரையும் முழுமையாக நம்பாதீர்கள். ஒருவரை நம்பும் முன் அவர்களைப் பற்றி முழுமையாக தெரிந்த பின்னரே நம்ப வேண்டும்.
எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இம்மாதத்தில் வேலையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். முயற்சியின் பலனை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எந்த வேலையிலும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். பொறுமையுடன் உழைத்தால் இலக்கை அடையலாம். இம்மாதத்தில் தேவையான பணத்தை சம்பாதிக்க முடியும். உண்மையான நண்பர்களுக்கும் போலி நண்பர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை இம்மாதத்தில் உங்களால் அறிய முடியும். தனிப்பட்ட மற்றும் குடும்ப உறவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இம்மாதத்தில் அதிக மன அழுத்தத்தை உணரக்கூடும். பொறுமையுடனும், நிதானத்துடனும் வேலை செய்ய வேண்டிய இடத்தில், நீங்கள் அவசரத்துடனும், ஆவேசத்துடனும் வேலை செய்வீர்கள். இதன் விளைவாக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். பொறுமையுடனும் அமைதியுடனும் தொடர்ந்து பணியாற்றினால், விளைவுகள் படிப்படியாக மேம்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இந்த வேலைகளை முழுமையாக முடித்தால் தான், அதிகப் பொறுப்பை ஏற்கும் திறன் உங்களுக்கு கிடைக்கும்.
எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்க உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஏப்ரல் மாதத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடலாம். ஆனால் நீங்கள் அவற்றை சமாளித்து உங்கள் இலக்கை அடைவீர்கள். இந்த மாதம், நீங்கள் பணியிடத்தில் புதிய பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும். இந்த விஷயங்களில் உங்கள் மேலதிகாரிகளின் உதவியை நாடினால் நல்லது. மேலும், அவர்களின் வழிகாட்டுதலைப் பெறுங்கள், இதனால் நீங்கள் இந்தக் கடமைகளை எளிமையாக முடிக்க முடியும். உறவுகளைப் பொறுத்தவரை, சற்று பலவீனமாக இருக்கும். இம்மாதத்தில் அவசரம் மற்றும் ஆணவத்தை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் கெடுதலைத் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் கலவையான பலன்களைத் தரும். நீங்கள் என்ன தான் பொறுமை மிக்கவராக இருந்தாலும், இந்த மாதத்தில் அனைத்தையும் அவசரமாக செய்ய வேண்டியிருக்கும். பொறுமை மற்றும் சோம்பேறித்தனத்தை வேறுபடுத்துவது முக்கியம். பொறுமையுடன் இருந்தால் நேர்மறையான விளைவுகளைப் பெறலாம். இந்த மாதம் நீங்கள் எதையும் விரைவாகச் சாதித்தால், அதிகமாக உற்சாகமடையத் தேவையில்லை. உங்கள் சாதனைகளில் தாமதம் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். மனதில் அமைதியாக இருந்து பொறுமையுடன் தொடர்ந்து பணியாற்றுங்கள். இதனால் நல்ல முடிவுகளை எப்போதும் பெறுவீர்கள்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஓரளவு நன்றாக இருக்கும். பண விஷயம் மற்றும் குடும்ப விவகாரங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்தினால், சிறந்த முடிவுகளைப் பெறலாம். அதிக நம்பிக்கையுடன் எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு வேலையிலும் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் மூத்தவர்களிடமிருந்து வழிகாட்டுதலைத் தொடர்ந்து பெறுவதன் மூலம் நல்ல முடிவுகளை எப்போதும் பெறுவீர்கள்.



Click it and Unblock the Notifications