Latest Updates
-
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
உலகமே அணுகுண்டால் அழிஞ்சாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம்... எந்தெந்த உயிரினங்கள்? ஏன் அழியாது தெரியுமா?
நாம் தற்போது இருக்கும் காலகட்டத்தில் அரசியல் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. மறைமுகமான போர் அறிவிப்புகள் பற்றிய வதந்திகளும், அது தொடர்பான மீம்ஸ்களும் வெளியிடப்பட்டு கொண்டிருக்கின்றன. நாம் இவற்றை பற்றி எல்லாம் சிந்திக்காமல் அலட்சியமாகவும் கவலை இல்லாமலும் இருக்கிறோம். கவலைப்பட்டாலும் ஏதும் மாற போவதில்லை என்பது நமது கருத்து.
ஆனால் உண்மையில் இந்த பாதிப்பினால் கவலைப்பட தேவையில்லாத சில உயிரினங்களும் இருக்கின்றன. ஏனென்றால் அவை அணு ஆயுதப் போரில் சிக்கினால் கூட பாதிக்கப்படாது. அவை அவ்வளவு உறுதியானவை. இந்த விலங்குகளால் விசித்திரமான அளவில் கதிர்வீச்சையோ அல்லது பட்டினியையோ அல்லது இரண்டையுமோ தாங்க முடியும். இதனால் முழு பூமியும் அணுசக்தி வீரியத்தில் சிக்கிக் கொண்டு பூமி வாழ தகுதியற்றதாக இருந்தால் கூட இவற்றின் வாழ்க்கை தொடரும். அந்த விலங்குகள் எது என பார்க்கலாம் வாங்க.

கரப்பான் பூச்சி
சமையலறை அலமாரியின் அடியில் ஒளிந்து கொண்டு நம்மை வெறுப்பேற்றி பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி நம்மை கொலை செய்ய வைக்கும் உயிரினமான கரப்பான் பூச்சி அணுகுண்டைத் தாங்கும் திறன் கொண்டிருக்கிறது. அனைத்து வகை கரப்பான் பூச்சிகளும் அல்ல. ஆனால் அவற்றின் மொத்த எண்ணிக்கையும் உயிர்வாழ போதுமானவையாக இருக்கின்றன. பெரும்பாலான கரப்பான் பூச்சிகள் மிதமான அளவு கதிர்வீச்சைத் தாங்க கூடியவை. அதிலும் 20% கரப்பான் பூச்சிகள் அதிக அளவிலான அணு-குண்டு கதிர்வீச்சை தாங்கும். உதாரணமாக, 10,000 ரேட்ஸ் வரை தாங்க கூடியவை.
உண்மையில் ஜப்பான் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட போது, அந்த இடத்திலிருந்து 1000 அடி தூரத்தில் இருந்த கரப்பான் பூச்சிகள் முற்றிலும் ஆரோக்கியமாக காணப்பட்டிருகின்றன. மேலும் இவை ஒரு மாதம் வரை உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் உயிர்வாழ கூடியவை. இவற்றின் தலையை துண்டித்தாலும் 2 வாரங்கள் வரை உயிர்வாழக் கூடியவை.
தேள்
தேள்களால் தாங்கி கொள்ள கூடிய கதிர்வீச்சு அலகுகளின் எண்ணிக்கை பற்றி எந்த விதமான ஆய்வுகளும் நடத்தப்படவில்லை என்றாலும், மற்ற உயிரினங்களை காட்டிலும் தேள்கள் அணு ஆயுதத் தாக்குதல்களில் இருந்து சிறப்பாகத் தப்பிக்க முடியும் என கருதப்படுகிறது. அதற்கு காரணம் இவை மிக அதிக அளவிலான UV கதிர்வீச்சுகளை தாங்கும் தன்மையை கொண்டிருப்பதாகும். மேலும் சில வகை தேள்கள் இருட்டில் கூட ஒளிரும் உடலமைப்பை கொண்டிருக்கின்றன. இவை பனியில் முழுமையாக உறைந்து போனாலும் மீண்டும் உயிர் பெற கூடியவை.
பழ ஈக்கள்
கோடை காலத்தில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்களின் மீது அமர்ந்து நம்மை மிகவும் எரிச்சலூட்டும் இந்த உரினங்கள் அளவில் சிறியதாகவும், அதிக கதிர்வீச்சை தாங்க கூடியவையாகும் இருக்கின்றன. இவற்றின் சிறிய உடல் கதிர்வீச்சு வெளிப்பாட்டின் போது அவற்றிற்கு மிகவும் நன்மை பயக்குமாம். இவை கதிர்வீச்சின் 64,000 ரேட்ஸ் வரை உயிர்வாழ கூடியவை. மேலும் இவற்றின் அளவு பெரிய உயிரினங்களைப் போல கதிர்வீச்சை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கிறது. இவற்றின் வாழ்க்கை சுழற்சி 30 நாட்கள் மட்டுமே இருந்தாலும், அணுகுண்டின் கதிர்வீச்சால், இவை இன்னும் 30 நாட்களுக்கு உயிரோடு இருக்குமாம்.
பிராகனைடே குளவி
ஒட்டுண்ணி குளவிகளின் இனத்தை சேர்ந்த இவை, உயிருடன் இருக்கும் மிகவும் கடினமான சில உயிரினங்களில் ஒன்றாகும். குளவிகள் பெரும்பாலும் வெறுக்கத்தக்க உயிரினங்களில் இடம்பெறும். ஆனால் இவை அனைத்தும் மனிதர்களை விட 300 மடங்கு அதிக கதிர்வீச்சைத் தாங்க கூடியவை.
இவை அதிர்ச்சியூட்டும் வகையில் 180,000 ரேட்ஸ் தாங்கும் ஆற்றலை கொண்டிருக்கின்றன. ஆனால் ஹிரோஷிமா அணுகுண்டு வெறும் 10,000 ரேட்ஸ் மட்டுமே. மேலும் பூச்சியியல் வல்லுநர்கள் சமீபத்திய ஆய்வில் இந்த குளவிகளை "மோப்பம் பிடிக்க" மற்றும் வெடிக்கும் தன்மை மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை அடையாளம் காண பயிற்சி அளிக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர். இவை வருங்காலத்தில் போலீஸ் மற்றும் ராணுவத்தில் கூட இடம் பெறலாம்.
மம்மிச்சோ
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஒரே மீன் வகையான இது அற்புதமான, மிகவும் சாதாரண தோற்றம் கொண்ட சிறிய மீன் வகை தான் இவை. கடலின் மிகவும் அழுக்கான பகுதிகள் அல்லது வேதியியல் ரீதியாக மாசுபட்ட பகுதிகளில் இவற்றால் வாழ முடிவதோடு முற்றிலும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். இவற்றால் நீர் மற்றும் உப்பு மூலம் அதிக அளவு கதிர்வீச்சைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். அவற்றின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப அவற்றின் உடல் மற்றும் மரபணுக்களின் உள் அமைப்பையும் கூட மாற்றியமைக்க முடியும்.
டார்டிகிரேட்
மிகவும் பிரபலமான இந்த அழகான சிறிய நுண்ணிய உயிரினம் நன்கு ஆய்வு செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீமோஃபைல்களில் ஒன்றாக இருப்பதோடு நீர் கரடி அல்லது பாசி கரடி என அழைக்கப்படுகிறது. எக்ஸ்ட்ரீமோஃபைல்கள் என்பது pH, நீர், வெப்பநிலை மற்றும் காற்று இல்லாத மிகவும் தீவிரமான சூழ்நிலைகளில் கூட உயிர்வாழக் கூடிய உயிரினங்கள்.
டார்டிகிரேடுகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு எந்த மாற்றமும் இல்லாமல் நலமாக திரும்பி வந்தன. அவற்றை நசுக்கியோ, அல்லது வேகவைத்தோ கொன்றாலோ அல்லது இறந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி இருந்தாலும் கூட, இவை மீண்டும் உயிர் பெறலாம். அவை அதிக அளவு கதிர்வீச்சைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றலை பெற்றிருக்கின்றன.
டீனோகாக்கஸ் ரேடிடியூரன்ஸ்
இதுவரை இருந்ததிலேயே இந்த நுண்ணிய பாக்டீரியா தான் அதிக அளவு கதிர்வீச்சு எதிர்ப்பு உயிரினமாக இருக்கிறது. இதை பாதிக்கும் கதிர்வீச்சின் அளவின் வரம்பை நிர்ணயிப்பது கடினம். பல ஆண்டுகளுக்கு முன், இந்த பாக்டீரியா கதிர்வீச்சினால் ஏற்படும் எந்த டி.என்.ஏ சேதத்தையும் உடனடியாக தானே சரி செய்து கொள்ளும் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
இந்த டி.என்.ஏவைப் பயன்படுத்தி மனிதர்களில் கதிர்வீச்சு பாதிப்பால் ஏற்படும் நோய் மற்றும் பிற தொடர்புடைய நோய்களுக்கு சிகிச்சையளிக்க பல்வேறு ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த சிறிய பாக்டீரியா மிகவும் கதிர்வீச்சு எதிர்ப்பு தன்மை கொண்ட உயிரினமாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது.



Click it and Unblock the Notifications
