Latest Updates
-
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்!
முகேஷ் அம்பானி மகனின் திருமண விழாவிற்கு மொத்தம் எவ்வளவு செலவாகிருக்காம் தெரியுமா? தலையே சுத்துது...!
இப்போது இந்தியா முழுவதும் மக்கள் பேசும் ஒரே விஷயம் ஒரு திருமண விழாவை பற்றித்தான். இந்திய மட்டுமின்றி சர்வதேச ஊடகங்கள் முழுவதும் கடந்த 3 நாட்களாக இந்த திருமண விழாவை பற்றிய செய்திகளைத்தான் நொடிக்கு நொடி ஒளிபரப்பினார்கள்.
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் சமீபத்தில் குஜராத்தின் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய விழாவைக் கொண்டாடினர்.

இந்நிகழ்வு இந்தியாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆடம்பர திருமண விழாவாகும். ஆனால் இந்த ஆடம்பரம் ஜூலை மாதம் நடைபெற போகும் திருமணத்திற்கான ட்ரெயிலர் மட்டுமே.
ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழா மார்ச் 1 முதல் 3 வரை 3 நாட்கள் நடைபெற்றன. இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா மேத்தா, ஆனந்த் பிரமல், மற்றும் கோகிலாபென் அம்பானி உள்ளிட்ட அம்பானி குடும்பத்தை சேர்ந்த அனைவரும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க், இவான்கா டிரம்ப் மற்றும் உலகின் பல முன்னணி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள், அரசியல் பிரபலங்கள் என ஒரே இடத்தில் பார்க்க முடியாத உலகின் பல மிகப்பெரிய விஐபி-க்கள் இந்த ஆடம்பர திருமண விழாவில் கலந்து கொண்டனர். இவர்களின் வருகைக்காக 10 நாட்களுக்கு மட்டும் ஜாம்நகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த விழாவிற்காகவே கட்டப்பட்ட ஆடம்பர சொகுசு விடுதியில் தங்கினர், மேலும் பாப் ஐகான் ரிஹானாவின் பாட்டைக் கேட்டு மகிழ்ந்தனர். இரண்டு மணி நேர கான்செர்ட்டுக்கு $6 மில்லியன் (சுமார் ரூ. 52 கோடி) அவருக்கு ஊதியமாக வழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி இந்தியாவின் பல உச்ச நட்சத்திரங்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு நடனமாடியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதன் உச்சக்கட்டமாக பாலிவுட்டின் மூன்று கான்களான ஷாருக்கான், சல்மான்கான் மற்றும் ஆமீர் கான் ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து நடனமாடினார்கள். இந்த கூட்டணியை எந்த திரைப்படத்திலும் கூட பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் மகளுடன் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவ்வளவு பிரம்மாண்டங்கள் நிறைந்த இந்த திருமணம் நிச்சயமாக சிறிய அளவிலான தொகையில் நடந்திருக்காது என்பது சின்ன குழந்தைக்கு கூட நன்றாக தெரியும். ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய 3 நாள் கொண்டாட்டங்களுக்கு 1260 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபோர்ப்ஸ் படி முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 117 பில்லியன் டாலர்கள் (ரூ. 97,66,89,81,30,000).
கேட்டரிங் ஒப்பந்தத்திற்கு மட்டும் 200 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமண விழா இந்தியாவின் மிகவும் ஆடம்பரமான திருமண விழா என்பதில் துளியும் சந்தேககமில்லை. ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் திருமணத்தில் என்னென்ன ஆடம்பர நிகழ்வுகள் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
