Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
அக்ஷய திருதியை 2023: அக்ஷய திருதியை அன்று தங்கம் மட்டுமல்ல இந்த சாதாரண பொருட்களை வாங்குவதும் அதிர்ஷ்டம்தான்...
Akshaya Tritiya 2023: அக்ஷய திருதியை இந்தியாவின் மிகவும் முக்கியமான ஒரு விழாவாகும். சமஸ்கிருதத்தில் அக்ஷயா என்றால் 'எப்போதும் குறையாது' மற்றும் திருதியை என்றால் 'மூன்றாவது' என்று அர்த்தம். எனவே இந்த நாளில் வாங்கும் எந்தவொரு பொருளும் செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருவதாக நம்பப்படுகிறது.
இந்த வருடம் அக்ஷய திருதியை 22 ஏப்ரல் 2023 அன்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை அன்று எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும் என்றும், இந்த புனித நாளில் சில பொருட்களை தானம் செய்தால் நீண்ட ஆயுள், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை அடையலாம் என்பது நம்பிக்கை.

அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்குவது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் அனைவராலும் தங்கள் வாங்க முடியாது என்பதுதான் எதார்த்தம். இந்த சூழ்நிலையில் இந்த நன்னாளில் தங்கம் தவிர வேறு சில பொருட்களை வாங்குவதும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்பது பலரும் அறியாத தகவலாகும். இந்த பதிவில் அக்ஷய திருதியை அன்று வாங்க வேண்டிய அதிர்ஷ்ட பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
பருப்பு
அக்ஷய திருதியை அன்று பருப்பு வகைகளை வாங்குவது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது, ஏனெனில் இது செல்வம் மற்றும் வளத்தின் அடையாளமாக இருக்கிறது. பருப்பு பணத்தின் அடையாளமான சிறிய நாணயங்களை ஒத்திருக்கிறது. இந்த நாணயங்களை தண்ணீரில் ஊறவைத்து சமைக்கும் போது பெரிதாகும், இது செல்வத்தை அதிகரிப்பதைக் குறிக்கும்.
கீரைகள்
ஆரோக்கியம் மட்டுமின்றி இந்த அடர் பச்சை நிற காய்கறிகள் அதிர்ஷ்டத்தையும் அளிக்கும், அவை பணத்தை அடையாளப்படுத்துகின்றன. எனவே, நீங்கள் எவ்வளவு அதிகமாக சாப்பிடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் சம்பாதிப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே அக்ஷய திருதியை நாளன்று கீரைகளை வாங்குங்கள்.
தானியங்கள்
தானியங்கள் செல்வத்தின் சின்னங்களாக இருக்கிறது. அரிசி, பார்லி போன்ற சில தானியங்களை இந்த நாளில் வாங்க வேண்டும், ஏனெனில் அவை அதிர்ஷ்டத்தைத் தரும். இந்திய புராணங்களின் படி, அரிசி அனைத்து எதிர்மறை ஆற்றல்களையும் தவிர்த்து, உங்கள் வாழ்க்கையை அதிர்ஷ்டத்தால் நிரப்புகிறது. எனவே இது இந்தியாவில் பல மத விழாக்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
நெய்
இந்து மதத்தில் நெய் புனிதமான பொருளாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது தீமையைத் தடுப்பது மட்டுமல்லாமல், நோய்கள், உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் எதிர்மறையைத் தடுக்க உதவுகிறது. இந்த நாளில் நெய்யை எரிப்பது எதிர்மறை ஆற்றல்களை விலக்கி, நேர்மறை ஆற்றலையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருவதாகக் கூறப்படுகிறது.
சந்தனம்
அக்ஷய திருதியை நாளில் வாங்குவது மட்டுமல்ல கொடுப்பதும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். இந்த நாளில் ஏழைகளுக்கு சந்தனத்தை தானம் செய்வதால் விபத்து அபாயங்கள் தவிர்க்கப்படும்.
மோர்
அக்ஷய திருதியை நாளில் மற்றவர்களுக்கு மோர் தானம் செய்வது உங்களுக்கு கல்வியில் வெற்றியைக் கொடுக்கும்.
தேங்காய்
இந்த நன்னாளில் மற்றவர்களுக்கு தேங்காய் தானம் செய்தால், உங்கள் முன்னோர்களின் பூர்வ பாவங்களில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.



Click it and Unblock the Notifications


