Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
விமான விபத்து குறித்து துல்லியமாக கணித்த ஜோதிடர்.. வேறு என்னவெல்லாம் கணித்துள்ளார் பாருங்க..
Ahmedabad Plane Crash: அகமதாபாத் விமான நிலையில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் 787-8 ட்டீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகரில் உள்ள மருத்துவ கல்லூரியின் விடுதி கட்டிடத்தில் மோதி விபத்துள்ளானது. இந்த விமானத்தில் சுமார் 242 பேர் பயணம் மேற்கொண்டனர். இதில் பயணித்த யாருமே உயிர் பிழைக்கவில்லை என்ற தகவல் வெளிவந்தது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அதுவும் இந்த பயணி இந்த விமானத்தில் 11A என்ற இருக்கையில் இருந்துள்ளார். இவரது பெயர் விஷ்வாஷ் குமார் ரமேஷ் ஆகும். இவர் இந்திய வசம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் நபர் ஆவார். இன்னும் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன் ஜோதிடர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் விமான விபத்து நடக்கும் என்று பதிவிட்டிருந்தார். தற்போது அவரது அந்த பதிவு வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஜோதிடரின் பெயர் ஷர்மிஸ்தா.
இவர் கடந்த ஜூன் 05 ஆம் தேதி 2025-ல் விமான விபத்து நிச்சயம் ஏற்படும் என்று கணித்து கூறியிருந்தார். அதற்கேற்ப ஜூன் 12 ஆம் தேதி, அதாவது இன்று அகமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. அதுவும் இந்த விமான விபத்து கடந்த 25 ஆண்டுகளில் நடந்த விமான விபத்துகளில் மிகவும் மோசமான விமான விபத்தாக கருதப்படுகிறது. ஜோதிடர் ஷர்மிஸ்தாவின் இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ஜோதிடர் ஷர்மிஸ்தா இந்த விமான விபத்து பற்றி மட்டுமின்றி, பங்குச் சந்தை, நாட்டில் நடக்கக்கூடிய சில முக்கியமான மாற்றங்கள், பொருளாதார ரீதியான வீழ்ச்சி வளர்ச்சி, தங்கம் வெள்ளி நிலவரம் குறித்த பல விஷயங்களைப் பற்றியும் தனது எக்ஸ் தளத்தில் கணிப்புக்களை பதிவிட்டு வருகிறார். இவரது கணிப்புப்படி, 2025-ல் விமானத்துறை மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்றும், அதே வேளையில் பெரிய விபத்துக்களும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கணித்திருந்தார். அதுவும் இவையெல்லாம் குரு பகவான் மிதுன ராசியில் உள்ள திருவாதிரை நட்சத்திரத்திற்கு செல்லும் போது நடக்கும் என்றும் கூறியிருந்தார்.
மேலும் இவர் டாடா குழுமம் ஹைதராபாத்தில் ரஃபேல் ஜெட் விமானத்தின் கட்டமைப்பை உருவாக்கும் என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகளால் வின்வெளி சுற்றுலா மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இஸ்ரோ உலகையே ஆச்சரியப்படுத்தும் என்றும் கணித்து குறிப்பிட்டிருந்தார். முக்கியமாக விமான விபத்து பற்றிய தனது கணிப்பில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வளவு துல்லியமாக யாராவது கணிக்க முடியுமா என்று பலரும் இவரது கணிப்பை கண்டு வியந்துள்ளனர். மேலும் இவர் வேறு என்ன விஷயங்களை எல்லாம் கணித்துள்ளார் என்று இவரது பக்கத்தை பலரும் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

