Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள ஆதித்ய மங்கள யோகம்: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Aditya Mangal Yoga Formed After 100 Years: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றத்தின் போது அவ்வப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் துலாம் ராசிக்குள் நுழைந்தார்.
அதைத் தொடர்ந்து அக்டோபர் 18 ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்குள் நுழைந்தார். இதனால் துலாம் ராசியில் சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. அதோடு 100 ஆண்டுகளுக்கு பின் ஆதித்ய மங்கள யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் ஒரு மங்களகரமான யோகம்.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் திடீர் பண வரவையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் காணக்கூடும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் ஆதித்ய மங்கள யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். நீண்ட காலமாக சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
மேலும் அக்டோபர் 30 ஆம் தேதி ராகு, கேது பெயர்ச்சி நிகழ்ந்த பின், தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற முயற்சித்தால், நல்ல வெற்றி கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் திடீரென்று பணம் அதிகம் சேரும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டில் ஆதித்ய மங்கள யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். உடன் பிறந்தோருடன் பிரச்சனைகள் இருந்தால், அப்பிரச்சனை நீங்கி உறவு மேம்படும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
வெளிநாடு தொடர்பான தொழிலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். இக்காலத்தில் போடப்படும் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பல துணிச்சலான முடிவுகளை எடுத்து, அதனால் நல்ல ஆதாயத்தைப் பெறுவீர்கள். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் ஆதித்ய மங்கள யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். முன்னேற்றப் பாதைகள் திறக்ப்படும். அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் சில புதிய திட்டங்களின் மூலம் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications