Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
Aavani Amavasai 2024: நாளை ஆவணி அமாவாசை.. மறக்காமல் இதை மட்டும் செய்யுங்கள்..!
இந்து மதத்தில் அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில், அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கான மிகவும் முக்கியமான நாள். அதிலும் ஆவணி மாதம் வரும் அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இந்நாளில் தர்ப்பணம் தானங்கள் செய்தால் அவை முன்னோர்களுக்கு நேரடியாக செல்லும் என்பது ஐதீகம்.
ஆவணி மாதம் அமாவாசை, சிம்ம ராசியில் சூரியன் மற்றும் சந்திரன் ஒன்றாக சஞ்சரிக்கும் போது ஏற்படுகிறது. ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சூரியனுடன் சந்திரன் இணையும் நாள்தான் ஆவணி அமாவாசை. ஆவணி மாதத்தில் தான் ஆவணி திருவோணம், ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி போன்ற தெய்வீக சிறப்புமிக்க தினங்கள் வருகின்றன. இம்மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

வழிபடும் முறை:
அதிகாலையில் எழுந்து குளிக்க வேண்டும். இந்த நாளில் கங்கை நதியில் நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. சூரிய பகவானுக்கு நீர் சமர்பித்து, உங்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்நாளில் முன்னோர்களின் அமைதிக்காக பித்ரு பூஜை மற்றும் பித்ரு தர்ப்பணம் செய்யும் வழக்கம் உள்ளது. அதனால் தானம் மற்றும் தர்மங்கள் செய்வது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. எனவே உங்கள் திறனுக்கு ஏற்ப தானம் செய்யுங்கள்.
ஆவணி அம்மாவாசை திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம் 2024:
ஆவணி அமாவாசை திதியானது ஆவணி மாதத்தில் தான் ஆவணி திருவோணம், ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி போன்ற தெய்வீக சிறப்புமிக்க தினங்கள் வருகின்றன. இம்மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. அதனால் சரியான நேரத்தில் தர்ப்பணம் கொடுத்து, முன்னோர்களின் ஆசியைப் பெறுங்கள்.
ஆவணி சோமாவதி அமாவாசை 2024
2024 ஆவணி மாதம் வரும் அமாவாசை, இந்த ஆண்டு திங்கட்கிழமை அன்று வருவதால், இதனை சோமாவதி அமாவாசை என்றும் அழைப்பர். இந்த சோமாவதி அமாவாசை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.. சிவனுக்கு உரியது.. அதனால் இன்றைய தினத்தில் சிவாலயம் செல்வது சிறப்பு.. .
பொதுவாக, அமாவாசை நாளன்று சிவ வழிபாடும், பௌர்ணமி நாளன்று அம்மன் வழிபாடும் செய்வது வழக்கம். அதே போல, அமாவாசைக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது, பித்ரு தோஷம் போக்கும். இந்த ஆண்டு 2024 ஆவணி மாத அமாவாசை, சிவனுக்கு உகந்த நாள், சிவனுக்கு உகந்த திங்கட்கிழமையில் வருவது மிகச் சிறப்பாக கருதப்படுகிறது..
அதுமட்டுமல்லாமல் ஆவணி அமாவாசை 2024, அதிகாலை 5 மணிக்கே தொடங்கி விடுவதால், நண்பகல் நேரத்துக்குள் அமாவாசை திதி கொடுப்பதோ தர்ப்பணம் செய்வதோ செய்து விடலாம். ஆவணி மாதம் சோமாவதி அமாவாசை முடிந்த பிறகு, அவரவர் வசதிக்கு ஏற்ப, தானம் செய்யலாம். அமாவாசை தானம் பல மடங்கு புண்ணியம் தரும் என்பது ஐதீகம்.
பலன்கள்
இந்த ஆவணி மாதம் 2024 சோமாவதி அமாவாசை விரதம் இருந்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும். உங்கள் வம்சத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வீணாக ஏற்படும் பண செலவுகள் நீங்கும். முயற்சிகள் வெற்றி பெறும். காரிய தடைகள் நீங்கும்.



Click it and Unblock the Notifications
