Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
ஆடிப் பெருக்கு அன்று வைஷ்ணோ தேவி ஹோமம் செய்வதன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
Aadi Perukku 2023: ஆடிப்பெருக்கு என்பது மழைக்காலத்தின் கொண்டாட்டமாகும். ஏனெனில் ஆடி மாதத்தில் தான் பருவமழை தொடங்க ஆரம்பிக்கிறது. இதனால் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. இதன் மூலம் பயிர்கள் நடவு செய்யப்பட்டு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே காவிரி டெல்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் இந்த ஆடிப் பெருக்கை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள்.
ஆடி என்ற வார்த்தை ஆஷாடா என்ற வார்த்தையில் இருந்து பெறப்பட்டது. ஆடி பெருக்கில் பெருக்கு என்பது பெருகுவதை குறிக்கிறது. இந்த ஆடிப் பெருக்கு ஆடி மாதம் பதினெட்டாம் தேதி வருவதால் இது பதினெட்டாம் பெருக்கு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நன்னாளில் எதை வாங்கினாலும் அது பெருகும் என்பது ஐதீகமாக கூறப்படுகிறது.

இந்த நன்னாளில் பார்வதி தேவியை வழிபட்டு பிரசாதம் படைத்து வணங்குவார்கள். எனவே இந்த ஆடிப் பெருக்கு போன்ற மங்களகரமான நாளில் வைஷ்ணோ தேவி ஹோமம் செய்வது மிகவும் விசேஷமானது. இந்த யாகம் நடத்துவது உங்களை செழிப்பாக வைக்கும். வரங்களை அள்ளித் தரும் அம்மன் துர்கா தேவிக்கு இந்த சடங்கு நடைமுறைகள் செய்யப்படுகிறது.
வைஷ்ணோ தேவி என்பவள் அரக்கன் அந்தகாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக விஷ்ணுவின் ஆற்றலில் இருந்து தோன்றியவள் ஆகும். சரி வாங்க இந்த வைஷ்ணோ தேவி ஹோமத்தை உங்கள் வீட்டில் செய்வதால் எந்த மாதிரியான நன்மைகள் உண்டாகும் என அறிந்து கொள்வோம்.
அனைத்து பணிகளிலும் நேர்மறையான முடிவுகளை நீங்கள் பெற முடியும்
இந்தியாவில் உள்ள ஜம்மு பகுதியில் அமைந்துள்ள திரிகூட மலையில் கலியுகத்தின் மிகவும் மதிக்கப்படும் மற்றும் விரும்பப்படும் தெய்வமான வைஷ்ணோ தேவியின் கோயில் அமைந்துள்ளது. வைஷ்ணோ தேவி என்பவள் மகா காளி, சரஸ்வதி மற்றும் லட்சுமி தெய்வங்களின் ஒருங்கிணைந்த ஆற்றலில் இருந்து வெளிப்பட்டவள் ஆவாள்.
அவள் வைஷ்ணவ சமயத்தை பின்பற்றும் தென்னிந்திய குடும்பத்தில் பிறந்தார் என்றும், அதனால் அவருக்கு வைஷ்ணவி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. பிறந்தது முதல் வைஷ்ணவி ராமரின் சிறந்த பக்தையாக இருந்தார். அவள் ராமரையே திருமணம் செய்து கொள்ள மிகவும் விரும்பினார்.
ஆனால் ராமர் சீதா தேவியை மணந்ததால் கலியுகத்தில் கல்கியாக அவர் அவதரிக்கும் வரை வைஷ்ணவி தேவியை காத்திருக்கும் படி கூறினார். அதனால் தான் இன்று வரை வைஷ்ணவி தேவி திரிகூட மலையில் கடுமையான தவம் புரிந்து கல்கி அவதாரத்தில் வரப் போகும் கிருஷ்ணனுக்காக காத்திருப்பதாக வரலாறு கூறுகிறது.
மேலும் வைஷ்ணோ தேவியை உருவாக்கிய மூன்று பெண் சக்திகளான சாத்வீக, தாமஸ மற்றும் ராஜஸ குணங்களை உடைய பெண் சக்திகள் நீதியை நிலைநிறுத்தும், தீமைகளை தகர்க்கும் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்தன. எனவே வைஷ்ணோ தேவி உங்கள் எல்லா முயற்சிகளிலும் நேர்மறையான விளைவுகளைப் பெற உதவுகிறார். உங்கள் இலக்குகளை அடைய உதவி செய்கிறார்.
ஆடிப்பெருக்கு அன்று வைஷ்ணோ தேவி ஹோமம் செய்வதன் முக்கியத்துவம்
ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உரித்தான மாதம் என்றாலும், இந்த மாதத்தில் அன்னை ஆதி சக்தியை வணங்குவது மிகவும் புண்ணியமாகும். வைஷ்ணோ தேவி அல்லது வைஷ்ணவி தேவி அசுரனைக் கொல்ல அஷ்ட மாத்ரிகங்களுடன் தோன்றிய மிகவும் சக்திவாய்ந்த வடிவமாக திகழ்கிறாள்.
வைஷ்ணவி தேவி உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற கூடிய தெய்வம் ஆவாள். எனவே இந்த ஆடிப்பெருக்கு நன்னாளில் ஹோமம் வளர்த்து செல்வ செழிப்புடன் வாழ வைஷ்ணவி தேவியை வழிபட வேண்டியது அவசியம். இந்த அஷ்ட மாத்ரிகா ஹோமம் உங்களுக்கு பொருள் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் ஏராளமான ஆசீர்வாதங்களைத் தரும்.
வைஷ்ணோ தேவி ஹோமம்
இந்த வைஷ்ணோ தேவி ஹோமம் ஏழைகளுக்கு செல்வத்தையும், நலிவடைந்தவர்களுக்கு பலத்தையும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தையும் வழங்குகிறது. வைஷ்ணோ தேவி பக்தர்களின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் அம்மன் ஆவாள். அவள் தன் பக்தர்களுக்கு ஏராளமான செழிப்பை வழங்குகிறாள்.
இது தவிர, இந்த ஹோமம் செய்வதன் மூலம் அனைத்து அஷ்ட மாத்ரிகங்களின் ஆசீர்வாதத்தையும் நீங்கள் பெற முடியும். இந்த ஹோமத்தில் வேத ஆச்சாரியர்கள் கலந்து கொண்டு ஹோமத்தை சடங்கு சம்பிரதாயங்களுடன் செய்வார்கள்.
வைஷ்ணோ தேவி ஹோமம் நன்மைகள்
* இந்த ஹோமம் செய்வதால் உங்கள் எல்லா பணிகளிலும் நேர்மறையான முடிவுகளைப் பெறுவதற்கான சிறந்த வழிகளை நீங்கள் பெற முடியும்.
*அருளின் வடிவமான வைஷ்ணோ தேவி தன் பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுகிறாள்
* மலைகளின் தெய்வமான அவள் உங்களுக்கு மலையளவு நம்பிக்கையையும் பலத்தையும் கொடுப்பாள்.
* உங்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுத்து அளவு கடந்த செல்வத்தையும் கொடுப்பாள்.
* வைஷ்ணோ தேவி ஹோமம் செய்வதன் மூலம் அனைத்து ஆஷா மாத்ரிகாக்களின் (எட்டு தெய்வீக அன்னையர்களின்) ஆசியையும் நீங்கள் பெற முடியும்.
* குழந்தைப் பேறுக்காக ஏங்கும் திருமணமான தம்பதிகள் குழந்தை வரம் பெற இந்த சடங்கை நீங்கள் செய்யலாம்.



Click it and Unblock the Notifications











