Latest Updates
-
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (19 July 2026-25 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது..! -
பரோட்டா கடை சிக்கன் சால்னா டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க! -
ராகு-கேதுவின் பிடியில் இருந்து விடுபடும் 6 கிரகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
தினமும் சிறிது முருங்கை இலையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
பட்டாணி சாதமும், கத்திரிக்காய் கிரேவியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்று ஒரே நாளில் உருவாகும் ஹன்ஸ், கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
சர்க்கரை நோயாளிகளுக்கான அவல் இட்லியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க!
Aadi Amavasai 2024: ஆடி அமாவாசையில் கண்டிப்பாக இதை செய்யாதீர்கள்..!
ஒவ்வொரு மாசமும் அமாவாசை திதி வருகிறது என்றாலும் மூன்று அமாவாசை திதிகள் மிக முக்கியமானவை. ஆன்மிக, ஜோதிட ரீதியாக மட்டுமல்லாமல் விஞ்ஞான ரீதியாகவும் இந்த அமாவாசை திதிகள் மிக முக்கியமானவை. ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வருகிற அமாவாசை திதிகள் முக்கியமானவை.
இந்த தினங்களில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிகவும் ஏற்ற விஷேச தினமாகும்.
ஆடி மாதம் தட்சிணாயன புண்ய காலத்தின் தொடக்கம் என்று கூறுவர்கள். நவகிரகங்களின் நாயகரான சூரிய பகவான், மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குச் செல்வதும் இந்த ஆடி மாதத்தில்தான்..

அதாவது பித்ரு காரகனான சூரிய பகவான், மாத்ரு காரகனான சந்திரனின் வீட்டில் அமர்கிற காலம். ஆக, இந்த மாதத்தில் வரும் ஆடி அமாவாசை முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் உகந்ததாகும். மேலும் இந்த ஆடி அமாவாசை தினத்தில் பித்ருக்கள் பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கிளம்பி வருவதாக ஐதீகம். அவர்கள் மகாளாய அமாவாசையில் பூலோகம் வந்தடைவர். மகாளய பட்ச காலத்தில் பூமியில் தங்கி அருள் புரிவர். அதனால் அமாவாசை தினத்தில் என்ன செய்ய வேண்டும்? என்னெவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
அமாவாசை என்றால் என்ன?
சூரியனும், சந்திரனும் இணையக்கூடிய நாள் தான் அமாவாசை. அன்றைய தினம் இருவரும் ஒரே ராசியில் சஞ்சரிப்பார்கள். அந்த நாளில் இரு கிரகங்களின் ஆதர்சன சக்தி மிக அதிகமாக இருக்கும். இதன் காரணமாக மனித மூளையில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நம் மனம் சில சஞ்சலத்துடனேயே இருக்கும்..
ஆடி அமாவாசை 2024 எப்போது?
இந்த வருடம் ஆடி அமாவாசை ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 4ஆம் தேதி, 2024 அன்று வருகிறது.. இந்து நாட்காட்டியில் குறிப்பிடத்தக்க அமாவாசை தினமான ஆடி அமாவாசை அனுசரிக்கப்படும். இந்த புனித நாளின் தொடக்கத்தை குறிக்கும் அமாவாசை திதி, ஆகஸ்ட் 3, 2024 அன்று மாலை 3:50 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 4ஆம் தேதி, 2024 மாலை 04:42 மணிக்கு முடிவடைகிறது.
படையல் போடும் நேரம் எது?
ஆகஸ்ட் 04ம் தேதி பகல் 12 மணி முதல் 01.30 வரை எமகண்டம் நேரமாகும். அதனால் முன்னோர்களுக்கு இலை போட்டு, படையல் போடும் வழக்கம் உள்ளவர்கள் பகல் 01.30 மணிக்கு பிறகு படையல் போட்டு வழிபடுவது சிறப்பானதாகும். காகத்திற்கு சாதம் வைப்பதும் பகல் 01.30 மணிக்கு பிறகு வைப்பது சிறப்பானதாகும்.
ஆடி அமாவாசை 2024-ல் என்னென்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது..
1. அமாவாசை தினத்தில் செய்ய வேண்டிய மிக சிறப்பான விஷயம் முன்னோர்களையும், பெரியோர்களையும் வழிபட வேண்டியது.
2. இந்த நாளில் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் செய்யும்போது, கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது.
3. நம் முன்னோர்களுக்கு படையல் வைப்பதோடு, காக்கைக்கும் உணவு வைத்துவிட்டுத்தான் குடும்பத்தில் உள்ளோர் சாப்பிட வேண்டும். காரணம் காகம் முன்னோர்களின் அம்சமாக க்ருதப்படுகிறது..
4. சாதம், காய்கறி, குழம்பு ஆகியவற்றில் நெய் சேர்த்து காகத்துக்கு படைப்பது சிறப்பு. காகங்கள் அமாவாசை அன்று வைத்த உணவை சாப்பிட்டால், முன்னோர்கள் சாப்பிட வந்திருப்பதாக ஐதீகம்.
5. முடிந்த அளவு ஏழை, எளியோருக்கு தான, தர்மங்கள் செய்ய வேண்டும். அத்துடன் அன்று கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்க வேண்டும்.
6. மேலும் அன்றைய தினத்தில் நம் குலதெய்வத்தை வழிபடுவதும், அம்மன் வழிபாடு நடத்துவதும் மிகவும் சிறப்பானதாகும்.
7. வீட்டு வாசல், பூஜை அறையில் கோலம் போடக்கூடாது. தண்ணீர் தெளித்து விட்டால் போதுமானது. அசைவ உணவுகளை சமைக்க கூடாது.
8 முன்னோர்கள் வீட்டுக்கு வரும் தினம்.. அவர்களை வரவேற்கும் வகையில் வீடு வாசல் சுத்தம் செய்ய வேண்டும். தலைமுடி, நகம் வெட்டக் கூடாது.
9. அன்றைய தினம் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும். கோபம், பதற்றம் வேண்டாம். முடிந்தால் பேசாமல் மெளன விரதம் இருப்பது நல்லது. எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது..
10. நீரிலிருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதே போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. நீரில் இருப்பவர்கள் நீரிலும், கரையில் இருப்பவர்கள் கரையிலும்தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications