உலகின் சிறந்த 100 உணவு நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள 6 இந்திய நகரங்கள்... எந்தெந்த நகரங்கள் தெரியுமா?

இந்தியா உணவுகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் தலைமுறைகளாக கொண்டாடப்படும் பல்வேறு சமையல் மரபுகளை பின்பற்றுகிறது. இந்திய உணவுகள் உலகம் முழுக்க பிரபலமானவை. இதை அங்கீகரிக்கும் வகையில், சமீபத்திய டேஸ்ட் அட்லஸ் பட்டியல் இந்திய உணவு வகைகளுக்கு முக்கியமான அங்கீகாரத்தை அளித்துள்ளது.

உலகின் 100 சிறந்த உணவு நகரங்களின் பட்டியலில் ஆறு இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள நகரங்கள், அவற்றில் கட்டாயம் முயற்சிக்க வேண்டிய உள்ளூர் உணவுகள் மற்றும் பாரம்பரிய உணவகங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

6 Indian Cities Ranked Among 100 Best Food Cities in the World

மும்பை

இந்தியாவின் பொருளாதார நகரமாக அறியப்படும் மும்பை உலகின் சிறந்த உணவு நகரங்களின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. டேஸ்ட்அட்லஸ் வலைத்தளத்தின்படி, இங்கே கட்டாயம் முயற்சிக்க வேண்டிய உணவுகள் பெல்பூரி, வட பாவ், மோடக் மற்றும் ரக்தா பட்டிஸ். மும்பையில் சாப்பிட சிறந்த இடங்களில் தந்தூரி, கீமா மற்றும் டிக்காவிற்கு பிரபலமான Leopold Cafe முக்கியமான இடத்தில் உள்ளது. அடுத்ததாக மெது வடை, உப்புமா மற்றும் சட்னிக்கு பிரபலமான ராம் ஆச்சார்யா அடுத்த இடத்தில் உள்ளது. கிச்சடி, ஸ்ரீகண்ட் மற்றும் ஆம்ராஸுக்கு பிரபலமான ஸ்ரீ தாக்கர் போஜனாலயும் பட்டியலில் உள்ளது.

அமிர்தசரஸ்

அமிர்தசரஸ் 43 வது இடத்தில் உள்ளது மற்றும் அமிர்தசாரி குல்ச்சா, பாலக் பனீர், பின்னி, சர்சன் டா சாக் மற்றும் தால் மக்கானி ஆகியவை இங்கு கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய உணவுகளாகும். அமிர்தசரஸில் உள்ள சிறந்த பாரம்பரிய இடங்கள் கேசர் டா தாபா உணவகமாகும். ஷாஹி பனீர், பைகன் பர்தா மற்றும் குல்சா ஆகியவற்றிற்காக பரவன் தா தாபா பிரபலமான உணவகமாக உள்ளது.

6 Indian Cities Ranked Among 100 Best Food Cities in the World

டெல்லி

இந்தியாவின் தலைநகரமான 45-வது இடத்தில் உள்ளது, இங்கு கட்டாயம் ருசிக்க வேண்டிய உணவுகள் தால் மக்கானி, முர்க் மக்கானி, சோலே பதுரே, பகோரா மற்றும் குலாப் ஜாமுன். டெல்லியில் சாப்பிட சிறந்த உணவகமாக கீர் மற்றும் பிரியாணிக்கு பெயர் பெற்ற டம் புக்த் உள்ளது. அடுத்தது தென்னிந்திய உணவகமான இட்லி, ஊத்தபம் மற்றும் மெது வடைக்கு பெயர் பெற்ற சரவண பவன்.

ஹைதராபாத்

பிரியாணிக்கு புகழ் பெற்ற ஹைதராபாத் 50-வது இடத்தில் உள்ளது, மேலும் இங்கு கட்டாயம் முயற்சிக்க வேண்டிய உணவுகளின் பட்டியலில் ஹைதராபாத் பிரியாணி, பெசரட்டு தோசை, சிக்கன் 65, கராச்சி பிஸ்கட் மற்றும் இட்லி ஆகியவை அடங்கும். ஹைதராபாத்தில் உள்ள சிறந்த பாரம்பரிய இடங்களில் ITC Kohenir அதன் ஹைதராபாத் பிரியாணிக்கும், கராச்சி பேக்கரி அதன் சுவையான பிஸ்கட்களுக்கும் மற்றும் Jewel of Nizam இனிப்புகளுக்கும் புகழ் பெற்றது.

கொல்கத்தா

இந்தியாவின் பாரம்பரிய நகரமான கொல்கத்தா 71-வது இடத்தில் உள்ளது, இங்கே கட்டாயம் ருசிக்க வேண்டிய உணவுகள் ரசகுல்லா, ஆலு சாப், ரசமலாய், கத்தி ரோல் மற்றும் சந்தேஷ். உணவருந்த, பனீர் டிக்கா, சிக்கன் 65 மற்றும் செட்டிநாடு கோழிக்கு பெயர் பெற்ற Tamarind உணவகத்திற்கு செல்ல TasteAtlasபரிந்துரைக்கிறது. அசைவ பிரியர்களுக்கு ஆலன்ஸ் கிச்சன் சிறந்த உணவகமாக இருக்கிறது.

சென்னை

நமது சென்னை 75-வது இடத்தில் உள்ளது, மேலும் தோசை, இட்லி, சிக்கன் 65, ருமாலி ரொட்டி மற்றும் சாம்பார் ஆகியவை இங்கு கட்டாயம் ருசிக்க வேண்டிய உணவுகளின் பட்டியலில் உள்ளது. சென்னையில் பல சைவ உணவகங்களும், அசைவ உணவகங்களும் மக்களுக்கு பல சுவையான உணவுகளை வழங்குகிறது. குறிப்பாக சென்னையின் சாலையோரக் கடைகள் மிகவும் பிரபலமானவை.

Story first published: Tuesday, July 8, 2025, 11:49 [IST]
Desktop Bottom Promotion