Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
இந்த 4 இந்திய உணவுகள் உலகின் சிறந்த 100 உணவுகளில் இடம்பிடிச்சிருக்காம்... இதுல நம்ம ஊரு உணவு ஒன்றும் இருக்கு!
உலகின் மிகச்சிறந்த மற்றும் சுவையான உணவுகளில் இந்திய உணவுகளுக்கு எப்போதும் முக்கிய இடம் உள்ளது. இந்திய உணவுகள் அதன் கவர்ச்சிகரமான வண்ணங்கள் மற்றும் தனித்துவமான சுவைகளுக்கு பெயர் பெற்றது. தால் மக்கானியின் ஆடம்பர சுவை முதல் உலகப்புகழ் பெற்ற பிரியாணி வரை, இந்திய உணவு உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பல்வேறு சுவையான உணவுகளை வழங்குகிறது.
சமீபத்தில் கூட தமிழ்நாட்டை சேர்ந்த செஃப் விஜய குமார் சமையற்கலையின் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் James Beard விருதை வாங்கி இந்திய உணவுகளுக்கு புகழ் சேர்த்தார். இந்திய உணவுகளை அங்கீகரிக்கும் வகையில், டேஸ்ட் அட்லஸ் சமீபத்தில் "உலகின் 100 சிறந்த உணவுகள்" பட்டியலை வெளியிட்டது மற்றும் அதில் 4 சிறந்த இந்திய இடம்பிடித்துள்ளது. அவை என்னென்ன உணவுகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முர்க் மக்கானி
இந்த சிக்கன் டிஷ் உலகின் உணவுகளில் 29-வது இடத்தில் உள்ளது. பட்டர் சிக்கன் என்றும் அழைக்கப்படும் இந்த டிஷ் 1950களில் டெல்லியில் குந்தன் லால் குஜ்ரால் என்ற நபர் தனது மோதி மஹால் என்ற உணவகத்தைத் திறந்தபோது உருவானது என்று டேஸ்ட் அட்லஸ் வலைத்தளம் கூறுகிறது. சர்வதேச புகழ்பெற்ற இந்த உணவை கண்டுபிடித்ததே ஒரு சுவாரஸ்யமான கதையாகும்.
உணவகத்தின் சமையல்காரர்கள் மீதமுள்ள மாரினேட் சாறுகளை தக்காளி மற்றும் வெண்ணெயுடன் சேர்த்து, பின்னர் தந்தூரில் சமைத்த சிக்கனை அதில் ஊற்றி சுண்டவைத்தனர். அவர்களுக்கேத் தெரியாமல் தற்செயலாக உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படும் மற்றும் சர்வதேச தரம் கொண்ட ஒரு உணவை கண்டுபிடித்தார்கள்.
ஹைதராபாத் பிரியாணி
இந்திய மக்களுக்கு மிகவும் பிடித்த உணவென்றால் கண்ணை மூடிக்கொண்டு அது பிரியாணி என்றுதான் கூறுவார்கள். இந்த புகழ்பெற்ற அரிசி உணவு 31வது இடத்தில் உள்ளது மற்றும் இது பாஸ்மதி அரிசி, ஆட்டிறைச்சி அல்லது கோழி இறைச்சி, எலுமிச்சை, தயிர், வெங்காயம் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு ஒரு தென்னிந்திய உணவாகும்.
ஹைதராபாத் பிரியாணியின் சுவையின் செழுமை, பச்சை அரிசி மற்றும் இறைச்சியை சரியான மசாலாப் பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் தனித்துவமான செயல்முறையின் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது, இந்த செயல்முறையில் அரிசியும், இறைச்சியும் தனித்தனியாக சமைக்கப்படுவதில்லை. டம் என்று அழைக்கப்படும் சிறப்பு சமையல் பாணி, இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சியின் போது பெர்சியாவிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது.
சிக்கன் 65
அனைவருக்கும் பிடித்த சிக்கன் 65 இந்த பட்டியலில் 97வது இடத்தில் உள்ளது, இது நமது சென்னையை பூர்வீகமாகக் கொண்ட ஒரு உணவாகும். இது இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைச்சாறு, மிளகாய் தூள் மற்றும் பல்வேறு மசாலாப் பொருட்களில் ஊறவைக்கப்பட்ட ஆழமான வறுத்த சிக்கனாகும். TasteAtlas தளத்தின்படி, சிக்கன் 65 இன் தோற்றம் குறித்து சில கோட்பாடுகள் உள்ளன.
அதில் மிகவும் பிரபலமான கோட்பாடு 1965 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஏ.எம். புகாரியால் உருவாக்கப்பட்டது என்று கூறுகிறது. மற்றொரு கோட்பாடு இது 65 காரமான மிளகாய்களுடன் தயாரிக்கப்பட்டது என்று கூறுகிறது. அதுமட்டுமின்றி சிக்கன் 65 துண்டுகளாக வெட்டப்பட்டது அல்லது உணவு தயாரிக்கப்பட்டபோது கோழி 65 நாட்கள் பழமையானது போன்ற பல நம்ப முடியாத கோட்பாடுகளும் உள்ளன.
கீமா
இந்த பிரபலமான இந்திய உணவு 100-வது இடத்தில் உள்ளது மற்றும் இது சின்ன சின்ன துண்டுகளாக வெட்டப்பட்ட மட்டன் அல்லது சிக்கன், பச்சை பட்டாணி, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய், வெங்காயம், நெய் மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைப் பயன்படுத்தி கறியாக சமைக்கப்படும் ஒரு குழம்பு ஆகும். இந்த உணவின் பெயர் உருது மொழியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சி என்று பொருள். கீமா பெரும்பாலும் பாவ் பன்கள், நான் அல்லது பிற சப்பாத்தியுடன் பரிமாறப்படுகிறது. இது சமோசாக்கள் மற்றும் பரோட்டாக்களில் நிரப்பவும் பயன்படுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications
