For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகா சிவராத்திரியின் முக்கியத்துவம்...!

By Ashok CR
|

மகா சிவராத்திரி அல்லது சிவபெருமானின் இரவு என்பது புகழ்பெற்ற ஒரு இந்து பண்டிகையாகும். இதனை ஒவ்வொரு வருடமும், இந்து ஆண்டுக் குறிப்பேட்டின் படி, மாசி மாதத்தின் 13 ஆம் தேதி இரவு அல்லது 14 ஆம் தேதி இது கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகையின் போது, இரவு முழுவதும் பக்தர்கள் விழித்திருந்து, சிவபெருமனை புகழ்ந்து மந்திரங்களும் ஸ்லோகங்களும் படிப்பார்கள். பகல் மற்றும் இரவு முழுவதும் பலர் விரதம் இருக்கவும் செய்வார்கள். சிவலிங்கத்திற்கு தண்ணீர் மற்றும் வில்வ இலைகளை படைத்த பின்னரே காலை உணவை உட்கொள்வார்கள்.

மகா சிவராத்திரி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள்!!!

சிவராத்திரி பண்டிகை பெண்களுக்காக விசேஷ முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. திருமணமாகாத பெண்கள், சிவபெருமானை போலவே நல்ல கணவன் அமைய அவரை வணங்குவார்கள். திருமணமான பெண்கள், தங்கள் கணவரும் குடும்பமும் நல்ல படியாக சீரும் சிறப்புமாக இருக்க வணங்குவார்கள்.

சிவராத்திரியுடன் பல புராண கதைகள் தொடர்பில் உள்ளது. சிவராத்திரி உருவானதற்கும் முக்கியத்துவம் பெற்றதற்கும் பல புராண கதைகள் கூறப்பட்டு வருகிறது. சிவராத்திரியின் முக்கியத்துவத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழ்கூறிய சில புராணங்களை பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமுத்ர மந்தன் புராணம்

சமுத்ர மந்தன் புராணம்

நீலகண்டா கதை தான் அனைத்தையும் விட புகழ் பெற்ற புராணமாக விளங்குகிறது. பாற்கடலை கடைந்ததன் விளைவாக உருவான நஞ்சை, இந்நாளில் சிவபெருமான் உட்கொண்டதால் தான் மகாசிவராத்திரி முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவதாக நம்பப்படுகிறது. அந்த கொடிய நஞ்சு அவரின் தொண்டை குழியில் தேங்கியதால், அவரை நீலகண்டர் அல்லது ஊதா நிறத் தொண்டையை கொண்ட தெய்வம் என்று அழைக்கிறார்கள்.

சிவபெருமானுக்கு விருப்பமான தினம்

சிவபெருமானுக்கு விருப்பமான தினம்

பங்குனி மாதம் 14-ஆம் நாள் என்பது சிவபெருமானின் விருப்பமான தினம் என்று நம்பப்படுகிறது. அதனாலேயே இத்திருவிழா இந்நாளில் கொண்டாடப்படுகிறது.

சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணம்

சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணம்

புராணத்தின் படி, மகாசிவராத்திரியின் போது தான் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்று அவர் ஒரு குடும்பஸ்தராக மாறினார்.

பெண்களுக்கு முக்கியத்துவம்

பெண்களுக்கு முக்கியத்துவம்

சிவபெருமானை வழிபட்டால், அதுவும் பெண்கள் வழிபட்டால், அவர் எளிதில் அருள்கூர்வார் என்று நம்பப்படுகிறது. அவரை வழிபடுவதற்கு விசேஷ பொருட்கள் என எதுவும் தேவையில்லை. கொஞ்சம் நீரும் வில்வ இலையும் இருந்தால் போது, ஒரு பக்தன் தன் கடவுளின் மனம் குளிரச் செய்யலாம். அதனால் தான் மகாசிவராத்திரி என்பது பெண்களுக்கு முக்கியத்துவத்தை அளிக்கிறது. திருமணமாகாத பெண்கள் சிவராத்திரியின் போது விரதம் மேற்கொண்டால், சிவபெருமானை போன்று நல்ல கணவர் அமைவார் என்று நம்பப்படுகிறது.

சிவராத்திரியின் முக்கியத்துவம்

சிவராத்திரியின் முக்கியத்துவம்

மகா சிவராத்திரியின் போது, சிவபெருமான் மனித இனத்திற்கு மிகவும் அருகாமையில் வருவார் என்று நம்பப்படுகிறது. நடுநிசியில், இறைத்தன்மையும், நேர்மறையான அதிர்வும் மனித இதயத்திற்கு அருகில் கிட்டும். அதனால் தான் சிவராத்திரியின் போது அனைவரும் விழித்திருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Significance Of Maha Shivaratri

Shivaratri is of great significance to the Hindu community. To know more about Maha Shivaratri's significance, read on.
Desktop Bottom Promotion