Latest Updates
-
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க
பெண்களைக் கவரும் காஞ்சி பட்டுப் புடவைகள்!!!
காஞ்சிபுரம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பட்டுச் சேலைகள் தான். தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் நெசவுத்தொழில் செய்யும் நெசவாளர்கள் அதிகம். பெரும்பாலான மக்கள் ஏதேனும் வீட்டில் விஷேசம் என்றால், பட்டுப் புடவைகளைத் தான் வாங்கி அணிய விரும்புவர். குறிப்பாக திருமணத்திற்கு சேலைகள் வாங்க வேண்டுமென்றால், அனைவரும் காஞ்சிபுரத்திற்கு தான் சேலைகளை வாங்க படை எடுத்து செல்வார்கள். இத்தகைய மிகவும் பிரபலமான சேலைகள் தமிழ்நாட்டில் உள்ள பெண்களை மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள பெண்களையும் கவர்ந்துள்ளது.
மேலும் இந்த சேலையின் சிறப்பு என்னவென்றால், உயர்தரப் பட்டு நூல் மட்டுமின்றி, மற்ற பட்டுப் புடவைகளை விட, இதன் பார்டரும் அதன் நிறங்களும் மிகவும் அருமையாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். மேலும் பட்டு சேலைகளிலேயே காஞ்சிபுரம் சேலை மிகவும் நைஸாக, மென்மையாக இருக்கும். அதுமட்டுமின்றி அத்தகைய காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை, பல நடிகைகள் எப்போதும் விரும்பி உடுத்துவார்கள். அவர்களுள் வித்யா பாலன், ரேகா போன்றோர் மிகவும் முக்கியமானவர்கள். இவர்கள் பெரும்பாலும், எந்த விழாவிற்கு சென்றாலும், காஞ்சி பட்டுப் புடவைகளைத் தான் அணிந்து செல்வார்கள்.
சரி, இப்போது அவர்கள் உடுத்திய காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளையும், வேறு எந்த நடிகைகள் எல்லாம் காஞ்சிபுர சேலைகளை அணிந்துள்ளனர் என்று சிலவற்றை கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து, உங்கள் மனைவிக்கு, மகளிர் தினத்தன்று காஞ்சிபுரம் பட்டுப் புடவையை வாங்கிக் கொடுத்து அசத்தலாமே!!!

ஊதா நிற பட்டுப் புடவை
வித்யா பாலன் ஊதா மற்றும் தங்க நிறம் கலந்த காஞ்சிபுரம் பட்டுப் புடவை அணிந்து, அதற்கேற்றவாறு கூந்தலை சீவி, காதில் அழகான கம்மலை தொங்கவிட்டு, அழகாக காட்சியளிக்கிறார்.

பச்சை நிற பட்டுப் புடவை
ரேகா பச்சை நிறத்துடன், பிங்க நிற முந்தானை கொண்ட காஞ்சிபுரம் பட்டுப் புடவை அணிந்துள்ளார். மேலும் அதற்கேற்றாற் போல் காதுகளில் தங்க கம்மலையும், கையில் பச்சை நிற வளையலையும் அணிந்து சூப்பராக காணப்படுகிறார்.

கட்டம் போட்ட பட்டு சேலை
வித்யா பாலன் தனது திருமணத்திற்கு காஞ்சிபுரம் பட்டுப் புடவையைத் தான் வாங்கி அணிந்துள்ளார். எனவே இந்த மாதிரியான கட்டம் போட்ட பட்டுப் புடவை பிடித்தால், இது போன்ற புடவையை வாங்கி, அதற்கு மேட்சாக அணிகலன்களை அணிந்து மகிழுங்கள்.

வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பட்டுப் புடவை
இது காட்டன் மற்றும் சில்க் கலந்த ஒரு காஞ்சிபுரம் சேலை. இதனை கொங்கனா சென் ஷர்மா உடுத்தியுள்ளார். இந்த புடவையின் உடல் வெள்ளை நிறத்திலும், பார்டர் மஞ்சள் நிற சில்க்கிலும் தயாரிக்கப்பட்டது. இந்த சேலைக்கு அழகே, இவர் சேலைக்கு ஏற்ற சரியான ஜாக்கெட்டை அணிந்தது தான்.

பாசி நிற பட்டுப் புடவை
ஹேமா மாலினி அணிந்துள்ள பாசி நிற காஞ்சி பட்டுப் புடவையானது அணிவதற்கு மிகவும் சூப்பராக இருக்கும். இந்த புடவையில் பாசி நிறத்துடன், லேசான பிங்க் நிறமும் கலந்து, டபுள் நிறத்தில் ஜொலிப்பதே, இந்த புடவையின் ஹை லைட்.

கருப்பு மற்றும் தங்க நிற பட்டுப் புடவை
கருப்பு மற்றும் தங்க நிறம் கலந்த கலவை எப்போதுமே அருமையாக இருக்கும். அதிலும் வித்யா பாலன் காஞ்சிபுரத்தில் நெய்யப்பட்ட கருப்பு மற்றும் தங்க நிறம் கலந்த பட்டுப் புடவையை அணிந்து, பெரிய பொட்டு வைத்து, பாரம்பரிய நகைகளை அணிந்திருப்பது, அருமையாக உள்ளது.

மெரூன் மற்றும் தங்க நிற பட்டு
ரேகா அணிந்துள்ள மெரூன் மற்றும் தங்க நிற காஞ்சிபுரப் பட்டுப் புடவை பார்ப்பதற்கே சூப்பராக உள்ளது. எனவே இந்த மாதிரியான சேலை அணிந்தால், அதற்கு நல்ல பாரம்பரிய நகைகளை அணிய வேண்டும். இதனால் சூப்பரான லுக் கிடைக்கும்.

காஞ்சிபுர முகூர்த்தப்பட்டு
தென்னிந்திய நட்சத்திரமான பானுஸ்ரீ, இந்த ஆரஞ்சு மற்றும் சிவப்பு கலந்த காஞ்சிபுர சேலை அணிந்து, ஒரு அழகான மணப்பெண் தோற்றத்தில் காணப்படுகிறது. சொல்லப்போனால், இது தான் ஒரு மங்களகரமான மணப்பெண் தோற்றத்தை தருகிறது.

பலவண்ண பட்டுப்புடவை
மற்றொரு மிகவும் பிரபலமான தென்னிந்திய நடிகையான தமன்னா, வட இந்திய பெண்ணாக இருந்தாலும், காஞ்சிபுரப் பட்டுப் புடவையில் பலவண்ணங்கள் தெரியும் படியான புடவையை அணிந்து, சிம்பிளாக அழகாகவும் காணப்படுகிறார்.

தங்க நிற காஞ்சிப் பட்டு
சில பெண்களுக்கு தங்க நிற பட்டுப் புடவை மிகவும் பிடிக்கும். அதேப் போல தான், ரேகாவும் தங்க நிற பட்டுப் புடவையை அணிந்து, நன்கு ஜொலிக்கிறார். எனவே அழகாக ஜொலிக்க வேண்டுமெனில், இந்த மாதிரியான பட்டுப் புடவையை வாங்கி அணியலாம். மேலும் இந்த ஆடை அணிந்தால், ஒரு ஹை லுக் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
