Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
மும்பையில் நடந்த ஹலோ! ஹால் ஆஃப் ஃபேம் விருது விழாவிற்கு கலக்கலாக வந்த பிரபலங்கள்!!!
சமீபத்தில் மும்பையில் பல்லாடியம் ஹோட்டலில் நடைபெற்ற ஹலோ! ஹால் ஆஃப் ஃபேம் விருது விழாவில் பல்வேறு பிரபலங்கள் மிகவும் கலக்கலாக வந்திருந்தனர். அதிலும் இந்த சிவப்பு கம்பளத்தில் பலர் சிவப்பு நிற ஆடைகளைத் தான் அணிந்து வந்திருந்தனர். இதில் நடிகைகள் மட்டுமின்றி, பல்வேறு நடிகர்களும் மிகவும் அருமையாக சிவப்பைப் போன்றே ஹை லுக்கை கொடுக்கும் கருப்பு நிற உடைகளில் வந்திருந்தனர்.
அதில் நடிகர்களில் ஷாருக்கான், ரன்வீர் சிங் மற்றும் இம்ரான் கான் மிகவும் அழகான டாக்ஷிடோ சூட்டில் வந்திருந்தனர். நடிகைகள் சிவப்பு நிற உடைகளில் செக்ஸியாக வந்திருந்தனர். அதில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, இலியானா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். அதுமட்டுமின்றி நடிகை ரேகா எப்போதும் போல, அழகான பட்டுப் புடவையில் வந்திருந்தார்.
இங்கு அந்த ஹலோ! ஹால் ஆஃப் ஃபேம் விருது விழாவிற்கு வந்த பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா சோப்ரா
பாலிவுட்டில் இன்றும் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, சிவப்பு நிற டீப் கட் கொண்ட உடையில் மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் வந்திருந்தார்.

தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே, ஒற்றை தோள்பட்டை கொண்ட சிவப்பு நிற கவுனில் மிகவும் அழகாக வந்திருந்தார்.

இலியானா
இடுப்பழகியான நடிகை இலியானா, தீபிகா படுகோனுக்கு போட்டியாக ஒற்றை தோள்பட்டை கொண்ட சிவப்பு நிற உடையில் வந்திருந்தார்.

ரேகா
ரேகாவிற்கு புடவை தான் சூப்பராக இருக்கும். மேலும் பெரும்பாலான விழாக்களில் கோல்டன் புடவையில் தான் வந்து கலக்குவார். அப்படி தான் இந்த ஹால் ஆஃப் ஃபேம் விருது விழாவிற்கும் கோல்டன் நிற புடவையில் வந்து கலக்கினார்.

மதூ
இந்த விழாவில் தமிழில் 'ஜென்டில் மேன்' படத்தில் நடித்த நடிகை மதூவைக் கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் உடையில் பார்க்கலாம். ஏனெனில் இவரை இதுவரை எந்த ஒரு விழாக்களிலும் பார்த்ததில்லை. மேலும் இவ்வளவு வயதானப் பின்னரும் இன்னும் கச்சிதமான உடலுடன் உள்ளார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத் வெளிர் நிற பீச் நிறத்தில் எந்த ஒரு அணிகலன்களையும் அணியாமல், வித்தியாசமான தோற்றத்தில் வந்திருந்தார்.

சாரதா கபூர்
சாரதா கபூர், ஒற்றை தோள்பட்டை கொண்ட கருப்பு மற்றும் வெள்ளை கலந்த டியோர் கவுனில் மிகவும் ஸ்டைலாக வந்திருந்தார்.

ஈவ்லின் சர்மா
நடிகை ஈவ்லின் சர்மா வெளிர் நிற பச்சை நிற உடையில் வந்து கலக்கினார்.

ஷாருக்கான்
பாலிவுட் முன்னணி நடிகரான ஷாருக்கான் மிகவும் அழகான கருப்பு நிற டாக்ஷிடோ சூட்டில் டான் லுக்கில் வந்திருந்தார்.

ரன்வீர் சிங்
நடிகர் ரன்வீர் சிங் சற்று வித்தியாசமாக பூப்போட்ட சட்டைக்கு, கோடு போட்ட சூட் போட்டு வந்து விசித்திரமான தோற்றத்தில் வந்திருந்தார்.

இம்ரான் கான்
தற்போது சாக்லெட் பாய் என்று அழைக்கப்படும் பாலிவுட் நடிகர் இம்ரான் கான், டாக்ஷிடோ சூட் அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
