Latest Updates
-
உடல் எடையை வேகமா குறைக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! கோடைக்காலத்திற்கு ஏற்ற வாஸ்து ரகசியங்கள் இதோ! -
வாழ்க்கையில் ஒரேயொரு முறை குளிக்கும் பழக்கும் உள்ள பெண்கள் - ஆனாலும் இவங்க ரொம்ப அழகா இருப்பார்களாம் -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் ஜூன் 08 வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹோட்டல் ரவா உப்புமா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 14 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
காதலில் சம்மதம் முக்கியமா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை என்ன தெரியுமா? -
எடை இழப்புக்கு உதவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
'Main Tera' Day ட்ரெண்டில் காதலை சொல்லப் போறீங்களா? இந்த பாதுகாப்பு டிப்ஸ் தெரியாம மெசேஜ் அனுப்பாதீங்க, சிக்கலில் மாட்டிக்காதீங்க!
பிறந்தநாள் ஸ்பெஷல்: ஸ்ரீதேவியின் சமீபத்திய போட்டோக்கள்!!!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் பல மொழிகளில் கலக்கிய நடிகை ஸ்ரீதேவி, தனது 50 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். தமிழில் தவிர, பாலிவுட்டிலும் இன்றும் கலக்கி வரும் நடிகையான ஸ்ரீதேவி, ஆகஸ்ட் மாதம் 13 ஆம் நாள் பிறந்தார். மிகவும் பழமையான நடிகையாக இருந்தாலும், இன்னும் இளமை குறையாத அழகில், முதன் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் வெளிவரும் வோக் பத்திரிக்கையின் அட்டைக்காக அருமையான ஸ்டைலில் பல ஸ்டில்களைக் கொடுத்துள்ளார்.
எவ்வளவு தான் வயதானாலும், கவர்ச்சியாகவும், அனைவரையும் ஈர்க்கும் அழகு கொண்ட நடிகை ஸ்ரீதேவி, தற்போது பல விழாக்களில் மிகவும் ஃபேஷனான பல ஆடைகளை அணிந்து, கலந்து கொண்டார். மேலும் என்ன தான் ஃபேஷனான ஆடைகளை அணிந்தாலும், புடவையில் அவரது அழகே தனி தான். தமிழில் '16 வயதினிலே' படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரீதேவியை, தற்போது பார்த்தால், அவர் தனக்கு 50 வயது என்று சொன்னால் கூட நம்பமாட்டார்கள். அந்த அளவில் மிகவும் கவர்ச்சியாகவும், க்யூட்டாகவும், அழகாகவும் இருக்கிறார்.
சொல்லப்போனால், நாளுக்கு நாள் அவரது அழகு கூடிக் கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இப்போது இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை ஸ்ரீதேவி, சமீபத்தில் நடந்த விழாக்களில் பங்கேற்கும் போது எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்காக...

ஸ்ட்ராப்லெஸ் கவுன்
ஐ.ஐ.எஃப்.ஏ 2013 ஆம் ஆண்டின் விருது விழாவின் பச்சை நிற கம்பளத்தில், ஸ்ரீதேவி ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து நடந்த போது எடுத்த படம் தான் இது.

வோக் பத்திரிக்கை
இது ஆகஸ்ட் மாத வோக் பத்திரிக்கையின் அட்டைக்காக பச்சை நிற கவுன் அணிந்து போஸ் கொடுத்த போடு எடுத்தது.

பிலிம்பேர்
ஸ்ரீதேவி பிலிம்பேர் 2013 இல், ஆரஞ்சு நிற அல்பெர்டா ஃபெர்ரிட்டி கவுன் அணிந்து சும்மா நச்சுன்னு வந்தார்.

சபயசாச்சி முகர்ஜி
ஸ்ரீதேவி ஸ்டார் விருது விழாவில் பங்கு கொள்ளும் போது, சிவப்பு கம்பளத்தில் சபயசாச்சி வடிவமைத்த இந்த ஆடையை அணிந்து இளமை துள்ளலுடன் வந்தார்.

காஞ்சிபுர புடவை
ஸ்ரீதேவி பிங்க் மற்றும் தங்க நிறம் கலந்த காஞ்சிபுர பட்டுப் புடவையை அணிந்த போது எடுத்தது.

பூப்போட்ட புடவை
சமீபத்தில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலந்த பூப்போட்ட புடவையில் விழாவினை பங்கேற்ற போது எடுத்த படம் தான் இது.

நியான் சட்டை
இது நீல நிற ஜீன்ஸ் மற்றும் எலுமிச்சை பச்சை நிற சட்டையில், ஸ்ரீதேவி போஸ் கொடுக்கும் போது எடுத்தது.

ஆரஞ்சு நிற லேஸ் ஆடை
சமீபத்தில் ஸ்ரீதேவி அனைவரும் திகைக்கும் வகையில், வெள்ளை நிற பேண்ட் மற்றும் அடர் ஆரஞ்சு நிற லேஸ் டாப்ஸ் அணிந்து, சூப்பராக வந்த போது எடுத்த படம் தான் இது.

சிவப்பு நிற பேண்ட்
சிவப்பு நிற பேண்ட் மற்றும் வெள்ளை நிற சட்டையில், ஸ்ரீதேவி 50 வயதானவரா என்று வாயில் கை வைத்து கேட்கும் படி இருக்கிறார்.

எலீ சாப்
எலீ சாப் வடிவமைத்த ஆடைகளிலேயே மிகவும் சிறந்த ஆடை தான் இது. இந்த ஆடையை ஸ்ரீதேவி உடுத்தியப் பின், இந்த ஆடையின் அழகு மட்டுமின்றி, ஸ்ரீதேவியின் அழகே இன்னும் அதிகரித்து காணப்படுகிறது தானே!

மனீஷ் மல்ஹோத்ரா
ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கில் வெளிவந்த 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தை விளம்பரப்படுத்த, பிங்க் மற்றும் மஞ்சள் நிற புடவையில் வந்த போது எடுத்தது.

நீல நிற கவுன்
இது ஸ்ரீதேவி ஐஐஎஃப்ஏ விருது விழாவின், பச்சை நிற கம்பளத்தில் நீல நிற ஸ்ட்ராப்லெஸ் சில்க் கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.

வெள்ளை தேவதை
ஸ்ரீதேவி, இந்த வெள்ளை நிற லேஸ் புடவையில் மிகவும் அழகாக தேவதைப் போன்ற இருக்கிறார்.

மீண்டும் சபயசாச்சி உடையில்...
ஸ்ரீதேவி, சமீப காலமாக சபயசாச்சி மற்றும் மனீஸ் மல்ஹொத்ரா கலெக்ஷன்களை அதிகம் உடுத்துகிறார். அதில் ஒன்று தான் இந்த அடர் நீலம் மற்றும் வெள்ளை நிற லேஸ் புடவை.



Click it and Unblock the Notifications