Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
மனம் போன போக்கில் நடந்து கொள்பவர்களை கட்டுப்படுத்த சிறந்த வழிகள்!!!
நம் வாழ்வில் ஒரு சில நேரங்களில் பிறரின் அறிவுரைகளை நாட வேண்டி வரும். குறிப்பாக முக்கியமான முடிவுகளை எடுக்கும் போதும். பணி சார்ந்த தீர்மானங்கள் எடுக்கும் போதும் மற்றவர்களின் உதவி தேவைப்படும். ஆனால், ஒரு சிலர் நமக்கு தேவையில்லாத போதும். நம்மை கட்டுக்குள் வைக்க தானாகவே அறிவுரைகளை வழங்குவார்கள். இவர்கள் நமக்கு அறிவுரைகள் அளிப்பது மட்டுமல்லாது, நமது வாழ்வை தீர்மானிக்க முற்படுவார்கள்.
ஒரு சிலர் தன்னைச் சுற்றி இருப்பவர்களையும், தன்னைச் சுற்றி இருப்பவைகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க விரும்புவார்கள் அல்லது தான் நினைக்கும் வழியில் செல்வதற்கான எல்லாவற்றையும் செய்வார்கள். கண்டிப்பாக உங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது இப்படிப்பட்ட சிலரை நீங்கள் சந்திக்க நேர்ந்திருக்கும். இவர்கள் தானே எப்பொழுதும் முதலாளியாக இருக்க வேண்டுமென்று நினைத்து நம்மை ஆட்டிப் படைப்பார்கள்.
இப்படிப்பட்டவர்களை நம்ப வைப்பது மற்றும் அவரோடு சேர்ந்து இருப்பது சிறிது கடினம் தான். இவர்கள் யாருடைய அறிவுரைகளையும் கேட்க மாட்டார்கள். மேலும் அவர்களின் வழியை கட்டுப்படுத்த விரும்பமாட்டார்கள். இப்படிப்பட்டவர்களை சிறிது காலம் தான் பொறுக்க முடியும். பின்னர் இந்த கட்டுப்பாடுகள் பெரும் தொல்லையாகிவிடும். இப்படி மனம் போன போக்கில் நம்மை கட்டுப்படுத்துபவர்களின் நடவடிக்கைகளும், கட்டளைகளும் எல்லோரையும் சினம் கொள்ளச் செய்யும்.
இப்படிப்பட்டவர்களை கட்டுபடுத்த திறமையான நடவடிக்கைகளும் எண்ணங்களும் கொண்ட சிலரால் மட்டுமே முடியும். அவர்களின் ஆணவத்தையும், தேவைகளையும் புரிந்து கொண்டு, அவர்களின் போக்கில் செல்வது தான் அவர்களை கட்டுப்படுத்தும் ஒரே வழி. அதனால் இப்பொழுது இப்படிப்பட்டவர்களை சமாளிக்க சிறந்த வழிகள் சிலவற்றை பார்க்கலாம்.

1. வாக்குவாதம் செய்வதை தவிர்த்தல்:
இப்படிப்பட்டவர்களோடு எப்பொழுதுமே வாக்குவாதம் செய்யாதீர்கள். அவர்களால் தனது தோல்வியை சந்திக்க முடியாது. அதனால், உங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ள அவர்கள் சொல்வது சரிஎன்று கூறிவிட்டு உங்கள் தேவையை நயந்து கேளுங்கள். இதனால் அவர்களுக்கு தன்னை முக்கியமாக கருதுவதற்கும் அவர்களின் வேலையை தானே செய்வதற்கும் வழிவகுக்கும்.
2. எதிர்மறையாக நினைக்காதீர்கள்:
இவர்கள் நம் வாழ்வில் நல்லதை செய்யாவிட்டாலும் தீர்வு எடுப்பதிலும் ஏற்பாடு செய்வதிலும் சிறந்தவர்கள். அதனால் அவர்களின் கெட்ட நடவடிக்கைகளை தவிர்த்து நல்லதையே எடுத்துக்கொள்ளுவோம்.
3. ஜோக் அடியுங்கள்:
எல்லோரிடமும் அவர்களது மனநிலையை மாற்றகூடிய வழி ஒன்று இருக்கும். எல்லோரும் கண்டிப்பாக நல்ல நகைச்சுவைக்கு சிரிப்பார்கள்.இதுவே இப்படிப்பட்டவர்களை கையாளுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று.
4. எதுமே ரியாக்ட் செய்யாத நிலையில் இருப்பது:
சிலர் நாம் எதை பயன்படுத்தவேண்டும் எதை செய்யவேண்டும் என்பதில் அறிவுரை கூறுவார்கள். அது ஷாம்பூவில் இருந்து உங்கள் கேர்ள் ப்ரெண்ட் மற்றும் உணவு உட்கொள்ளுவது வரை இருக்கும். எந்த சிறு விஷயமாக இருந்தாலும் அறிவுரை அளிப்பார்கள். இவர்களை மாற்றுவதற்கும் கையாளுவதற்கும் ஒரே வழி அவர்களை தவிர்த்து எந்த ரியக்ட்ஷனும் காட்டாமல் இருப்பது தான். நீங்கள் அவர்களின் அறிவுரைகளை எதிர்த்து செயல்படாமல் இருந்தால் அதனை பெரிதுபடுத்த மாட்டார்கள். அதனால் பொருட்படுத்தாமை பேரின்பம் அளிக்கும் என்பது இவ்வகை மனிதர்களை கையாள உதவும்.
5. விட்டு விலகுதல்:
இவர்கள் உங்கள் வாழ்வை பாழக்குவதாக இருந்தால் இன்னும் ஏன் அவர்களோடு இருந்து வருந்தவேண்டும். அவர்களை விட்டு விலகி அவர்களை தவிர்ப்பதே சிறந்த வழியாகும். இதன் முடிவாக உங்களுக்கு அவர்களின் குறுக்கீடு பிடிக்கவில்லை என்பதை அறிவார்கள்.
இவையே இப்படிப்பட்டவர்களை கையாள்வதற்கான ஒருசில டிப்ஸ்கள். இவை கடினமாக இல்லாவிட்டாலும் தொடக்கத்தில் இப்படிப்பட்டவர்களை கையாள்வது மிகவும் கடினம் தான். அதுமட்டுமின்றி, இந்த டிப்ஸ்களுடன் அவர்கள் கட்டுப்படுத்துவதை கேட்காமல் இருப்பதும் சிறந்த வழி தான்.



Click it and Unblock the Notifications