Latest Updates
-
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...!
உங்க 'அனார்கலி'யை அசத்தனுமா.. அப்ப இந்த அனார்கலியை வாங்கிக் கொடுங்க!
உடுத்தும் ஆடைகளில் பல வெரைட்டிகள் உள்ளன. அதிலும் பெண்களுக்கான ஆடை என்று வரும் போது, அதில் எண்ணற்ற டிசைன்கள் இருக்கும். அவற்றில் பெரும்பாலானோர் அணிவது புடவை, சுடிதார், ஜீன்ஸ் போன்றவை தான். இருப்பினும் தற்போதைய ட்ரெண்ட் என்று பார்த்தால், அது அனார்கலி கவுன்கள் தான். இந்த அனார்கலி கவுன்கள் பார்ப்பதற்கு அழகாகவும், பாரம்பரிய தோற்றத்தையும் கொடுக்கக்கூடியது.
அதுமட்டுமின்றி, அனைத்து பெண்களும் அணியலாமா வேண்டாமா என்று யோசிக்காத வண்ணம், பார்த்ததும் அதனை நிச்சயம் வாங்கி அணிய வேண்டுமென்று தோன்றக்கூடிய வகையில் இருக்கும். மேலும் தற்போது பிரபலங்கள் கூட பெரும்பாலும் அனார்கலி கவுனை தேர்ந்தெடுத்து, விழாக்களுக்கு அணிந்து வருகின்றனர். இதனால் அது மிகுந்த ஆடம்பர லுக்கை கொடுக்காமல், செல்லும் விழாக்களுக்கு தகுந்தவாறான லுக்கைக் கொடுக்கிறது. இந்த அனார்கலி கவுனில் பல்வேறு டிசைன்கள் உள்ளன.
எனவே தமிழ் போல்ட் ஸ்கை, அனார்கலி கவுனில் உள்ள பல்வேறு டிசைன்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளது. அதில் பிடித்ததை வாங்கி மகிழுங்கள். குறிப்பாக காதலியை மடக்க நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள புதிய டிசைன் அனார்கலி கவுனை வாங்கி கொடுங்கள். இதனால் நிச்சயம் உங்கள் காதலி சீக்கிரம் கூலாகிவிடுவாள். ஏனெனில் பெண்களுக்கு ஆடைகளுக்கு ஆடைகள் என்றால் கொள்ளை பிரியம்.

பீச் நிற அனார்கலி
இது பந்த்கலா அனார்கலி. இதற்கு துப்பட்டா கிடையாது. அதற்கு பதிலாக இது அதிகப்படியான நூல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கோட் கொண்டிருக்கும்.

பச்சை நிற பட்டு அனார்கலி
இந்த பட்டு அனார்கலி பாரம்பரிய தோற்றத்தைக் கொடுக்கும். அதிலும் நல்ல அடர்ந்த நிறங்களான பச்சை நிறத்தில் அணிந்தால், இன்னும் அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.

ஷீர் வெள்ளை நிற அனார்கலி
இது தான் வெள்ளை நிற மெட்டாலிக் கற்கள் பதிக்கப்பட்ட ஷீர் அனார்கலி. இதனை துப்பட்டா இல்லாமலும் அணியலாம்.

பவள நிற அனார்கலி
நல்ல பளிச்சென்ற நிறமான பவள நிறம் தான் தற்போதைய ஃபேஷன். அதிலும் பவள நிறத்துடன் கோல்டன் சேரும் போது, அது நல்ல ஹை லுக்கை கொடுக்கும். இது தான் பவள நிற அனார்கலி கவுன்.

மெரூன் நிற அனார்கலி
இந்த அனார்கலியின் கையில் வெல்வெட்டும், இதன் உடல் வித்தியாசமான ஃபேப்ரிக்கான சுருங்கத்துடன் இருக்கும் துணியைக் கொண்டிருக்கும்.

சிவப்பு மற்றும் கருப்பு நிற அனார்கலி
இந்த அனார்கலி ப்ரில் கொண்டு அழகாக இருக்கும். அதிலும் இது மெருன் சிவப்பு கலந்த கருப்பு நிற நெட் கொண்ட அனார்கலியை உடுத்தினால், அது இன்னும் சூப்பரான தோற்றத்தைக் கொடுக்கும்.

பச்சை நிற அனார்கலி
இதுவும் அனார்கலி தான். இந்த அனார்கலியானது சில்வர் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதோடு, இதன் துப்பட்டா மிகவும் அழகாக இருக்கும்.

சாக்லெட் நிற அனார்கலி
இது ஒரு ஷிப்பான் அனார்கலி. இதன் துப்பட்டாவின் பார்டரில் நியான் பிரிண்ட் போடப்பட்டிருப்பது, இந்த உடைக்கு வித்தியாசமான லுக்கை கொடுக்கும்.

பிங்க் நிற அனார்கலி
தற்போது டிசைன் இல்லாமல் ஒரே நிறத்தில் உள்ள ஆடைகள் பிரபலமாக உள்ளது. அதிலும் இந்த பிங்க் நிற அனார்கலி பந்த்கலா கழுத்து மற்றும் கழுத்தைச் சுற்றி கோல்டன் பட்டன்களைக் கொண்டிருக்கும்.

ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிற அனார்கலி
இந்த ஆரஞ்சு நிற ஷீர் அனார்கலி கூட பந்த்கலா எம்பிராய்டரி கழுத்தைக் கொண்டது. இந்த மாதிரியான டிசைனில் வாங்கி அணிந்தால், அது ஹை லுக்கை கொடுக்கும்.

ஜொலிக்கும் அனார்கலி
இந்த வெள்ளை நிற அனார்கலியின் கையில் ஆங்காங்கு ஜொலிக்கும் வண்ணம் கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அதே சமயம் இந்த உடையை அணிந்தால், இது ஒரு ஸ்டைலான லுக்கை கொடுக்கும்.

பூ பிரிண்ட் போட்ட அனார்கலி
பெண்களுக்கு பொதுவாக பூ பிரிண்ட் போட்டிருக்கும் ஆடை மிகவும் பிடிக்கும். அதிலும் இந்த ஆடையில் பூ பிரிண்ட் மட்டுமின்றி, ப்ரில் கொண்டிருப்பதால், இதுவும் அனைவருக்கும் பிடித்தவாறு இருக்கும்.

அனார்கலி லெஹெங்கா
நல்ல ஆடம்பரமான தோற்றத்தைக் கொடுக்குமாறான அனார்கலி வேண்டுமானால், இந்த ப்ரில் கொண்ட கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட அனார்கலியை தேர்ந்தெடுத்தால் சரியாக இருக்கும். குறிப்பாகு இது விழாக்களுக்கு அணிந்து செல்வதற்கு ஏற்ற உடையாகும்.

நீல நிற அனார்கலி கவுன்
இந்த நீல நிற அனார்கலி கவுனின் ஸ்பெஷல் என்னவென்றால், இதன் துப்பட்டா ஆடையில் பொருத்தப்பட்டிருப்பதோடு, தரையை தொட்டுக் கொண்டு இருக்கும்.

வெள்ளை மற்றும் கருப்பு நிற லேஸ் அனார்கலி
இந்த அனார்கலி லெஹெங்கா போன்று இருக்கும். இதுவும் ஆரம்பர லுக்கைக் கொடுக்கும் உடையில் ஒன்று. மேலும் நல்ல நிறம் உள்ளவர்கள், இந்த ஆடையை அணிந்தால் சரியாக இருக்கும்.

பிங்க் நிற ஷீர் அனார்கலி
இந்த பிங்க் நிற அனார்கலியானது செக்ஸி லுக்கைக் கொடுக்கும். அதிலும் ஒல்லியாகவும், உயரமாகவும் இருக்கும் பெண்களுக்கு கச்சிதமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











