Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
எய்ட்ஸ் ஆராய்ச்சி ஃபவுண்டேஷனின் நிதியை உயர்த்தும் விழாவில் பங்கு கொண்ட ஐஸ்வர்யா ராய் பச்சன்!!!
சமீபத்தில் எய்ட்ஸ் ஆராய்ச்சி ஃபவுண்டேஷன், நிறுவனத்தின் நிதியை உயர்த்துவதற்கு மும்பையில் விழா ஒன்றை நடத்தியது. இந்த விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டு, அந்த தொண்டு நிறுவனத்தின் நிதியை உயர்த்தும் பணியில் கலந்து கொண்டார்.
விழாவில் கலந்து கொள்ளும் போது ஐஸ்வர்யா ராய் பச்சன், அவருக்கு பிடித்த ஆடை வடிவமைப்பாளர்களான அபு ஜானி மற்றும் சந்தீப் கோஷ்லா வடிவமைத்த நீளமான அனார்கலி உடையை அணிந்து வந்திருந்தார். அதிலும் அவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டும் வகையில் க்ரீம் நிற, அதிகப்படியான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட அனார்கலி உடையில் வந்திருந்தார். அதுமட்டுமின்றி, ஐஸ்வர்யா அந்த உடைக்கு ஏற்றவாறு மேக் அப் மற்றும் ஸ்டைலை மேற்கொண்டு, தனது கணவரான அபிஷேக் பச்சனுடன் கலந்து கொண்டார்.
இங்கு எய்ட்ஸ் ஆராய்ச்சி ஃபவுண்டேஷன் நடத்திய விழாவில் கலந்து கொள்ளும் போது ஐஸ்வர்யா ராய் பச்சன் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

அபு சந்தீப் உடையில் ஐஸ்
ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்திருக்கும் இந்த உடை தான் அபு ஜானி மற்றும் சந்தீப் கோஷல் வடிவமைத்த அனார்கலி உடை.

ஷீர் உடல்
ஐஸ் அணிந்திருக்கும் க்ரீம் நிற அனார்கலி முழு கை கொண்டிருப்பதோடு, அதன் உடல் முழுவதும் தங்க நிற வேலைப்பாடுகள் அழகாக செய்யப்பட்டு உள்ளது.

சைடு ஸ்வெப்ட் ஹேர் ஸ்டைல்
ஐஸ்வர்யா, க்ரீம் நிற அனார்கலி உடைக்கு பொருத்தமாக சைடு ஸ்வெப்ட் ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுத்திருப்பது, அவரது அழகை அதிகரித்து வெளிப்படுத்துகிறது.

அழகிய கண்கள்
ஐஸ்வர்யாவின் கண்கள் ஏற்கனவே அழகு. அத்தகைய கண்களின் அழகை க்யூட்டாக வெளிப்படுத்த நியூடு மற்றும் கருப்பு நிற ஐ ஷேடோவை பயன்படுத்தியிருந்தார்.

அபிஷேக் பச்சன்
அபிஷேக் பச்சன் மிகவும் அழகான கருப்பு மற்றும் வெள்ளை கலந்த டாக்ஷிடோ சூட்டில், ஐஸ்வர்யாவுடன் ஜோடியாக வந்திருந்தார்.

நர்கிஸ்
நடிகை நர்கிஸ் கூட அபு சந்தீப் வடிவமைத்த ஆடைகளில் ஒன்றான கருப்பு நிற ப்ரில் கொண்ட, உடலில் கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட உடையில் வந்திருந்தார்.

பொருத்தமான மேக் அப்
இந்த ஸ்லீவ்லெஸ் உடைக்கு நர்கிஸ் மேற்கொண்டுள்ள மேக் அப், அந்த உடையின் அழகை இன்னும் அதிகரித்து வெளிப்படுத்துகிறது.



Click it and Unblock the Notifications
