Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
மனம் கவர்ந்த பாலிவுட் பிரபலங்களுக்கு பிடித்த உணவுகள்!!!
ஒருவருடைய நண்பர்களை வைத்தே அவரின் குணநலன்களை பற்றி நாம் அறிந்துக் கொள்ளலாம். அதே போல் தான் உணவும். ஒருவர் உண்ணும் உணவை பொறுத்து, அவர்களைப் பற்றி கூற முடியும். சரி, இதனை வைத்து உற்றார் உறவினர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஆனால் இதுவே உங்களுக்கு பிடித்த கதாநாயகர்களும், கனவுக்கன்னிகளும் எந்த உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை இல்லையா?
அப்படியெனில் தெரிந்து கொள்ளுங்கள்! அதிலும் உங்கள் மனம் கவர்ந்த பாலிவுட் நட்சத்திரங்கள் எந்த உணவுகளை விரும்புகிறார்கள் என்று தெரிய ஆவலாக உள்ளதா? நம்முடைய பாலிவுட் நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் பிற நாட்டுக்குரிய உணவிலிருந்து, நாம் அன்றாடம் உண்ணும் உணவு வரை விரும்பி சாப்பிடுகிறார்கள். அப்படி அவர்கள் விரும்பி உண்ணும் உணவுகளை பற்றி கொஞ்சம் பார்க்கலாமா...!

சல்மான் கான்- பிரியாணி
தேவையான மசாலா பொருட்களுடன் தயாரிக்கப்பட்ட வாசனையான வட இந்திய உணவு என்றால் இந்தியாவில் யாருக்கு தான் பிடிக்காமல் போகும்? நம்முடைய சல்லு பாய் குறிப்பாக பிரியாணி மீது அளவுக்கதிகமான காதல் கொண்டுள்ளார். அதுவும் ஏதோ பிரியாணி என்றில்லாமல் தன் அம்மா சல்மா கையால் செய்த பிரியாணியை தான் அதிகமாக விரும்புகிறார். இதனுடன் சேர்ந்து கபாப் மற்றும் கொழுக்கட்டை மீதும் பிரியம் கொண்டுள்ளார்.

சோனம் கபூர் - பாவ் பஜ்ஜி
சோனம் கபூருக்கு சாக்லெட்கள் மீது இருக்கும் தீராத காதலை பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் தனக்கு பாவ் பஜ்ஜி தான் மிகவும் பிடித்த உணவு என்று அவரே ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு பஞ்சாபி பெண்ணாக இருந்தாலும், பெங்காலி உணவான ஷோர்ஷே லிஷ் மற்றும் சோலார் தால் மீதும் காதல் கொண்டுள்ளார்.

பிபாஷா பாசு- பெங்காலி உணவு வகைகள்
தன் பாரம்பரிய உணவையே விரும்பும் பாலிவுட் நடிகை என்றால் அது பிபாஷா பாசு தான். இந்தியாவில் அதிகமாக அரிசி விளையும் வங்காளத்தை சேர்ந்த அவர், வீட்டில் தயாரித்த பெங்காலி உணவை உண்டு வளர்ந்தவர். அதனால் அதையே விரும்பி சாப்பிடுகிறார். மேலும் அவருடைய சந்தோஷம் அரிசி சாதம் சாப்பிடுவதில் தான் உள்ளது.

கத்ரீனா கைப்- ஐஸ் க்ரீம்
எப்போதுமே தன்னை அழகாக காட்ட வேண்டும் என்பதற்காக சினிமா நடிகர்கள் தங்களுக்கு பிடித்த பல கொழுப்புச் சத்துள்ள உணவை தியாகம் செய்கிறார்கள். ஆனால் இதற்கு விதிவிலக்காக கத்ரீனா கைப் தனக்கு டெசர்ட்டுகளின் மீது தீராத காதல் உண்டு என்பதை வெளிப்படையாகவே கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக ஐஸ் க்ரீம் மற்றும் லவங்கப் பட்டை ரோல் மீது அதிக பிரியம் வைத்துள்ளார்.

ரித்திக் ரோஷன்- சமோசா
சூடான சமோசா என்பது நம்மில் பல பேருக்கு மிகவும் பிடித்தமான இந்திய உணவாகும். ஆனால் எதேட்சையாக க்ரிஷ் படத்தின் நாயகனான ரித்திக் ரோஷனுக்கும் அதுவே பிடித்த உணவாக உள்ளது. இவர் ஒரே நேரத்தில் ஒரு டஜன் சமோசாக்களை வெளுத்து வாங்கி விடுவாராம்.

பிரியங்கா சோப்ரா- மக்கி டி ரொட்டி மற்றும் சர்சோன் டா சாக்
பிரியங்காவின் உடலில் எந்த ஒரு கொழுப்புச் சதையும் தென்படுவதில்லை. இப்படி ஒரு உடல் அமைப்பை பெறுவதற்கு ஒரு பறவை உண்ணும் அளவு தான் உண்ணுகிறாரா என்று தான் நாம் பலரும் நினைப்போம். ஆனால், அவர் தான் ஒரு சாப்பாட்டு பிரியை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். முக்கியமாக பஞ்சாபி உணவுகளான மக்கி டி ரொட்டி மற்றும் சர்சோன் டா சாக் மீது அலாதி பிரியம் வைத்துள்ளார். இதை தவிர வெளிநாட்டு உணவு மீது ஆசை வந்தால், ஓல் லசாங்காவை ஆசைப்பட்டு சாப்பிடுவார்.

ஷாஹித் கபூர்- சைனீஸ் உணவுகள்
உணவுகளின் மீது தீராத காதல் கொண்டுள்ளார் ஷாஹித் கபூர். மேலும் அவரே நன்றாக சமைக்கவும் செய்வார். அவர் சைவ உணவை மட்டுமே உண்டாலும், சைனீஸ் மற்றும் இத்தாலிய உணவு வகைகளை விரும்பி உண்ணுவார். மழைக்காலம் வரும் போது சமோசா அல்லது பஜ்ஜியுடன் இனிப்பான தேநீரை விரும்பி சுவைப்பார்.

தீபிகா படுகோன்- இட்லி
தென்னிந்தியாவில் வளர்ந்த பெண் என்பதால், இந்த 'காக்டெய்ல்' நாயகி இட்லி மற்றும் கடல் உணவுகளின் மீது அதிக நாட்டம் வைத்துள்ளார். உணவில் இவருடைய விருப்பங்கள் படு வித்தியாசமாக இருக்கும். நம் நாட்டின் சேவ் பூரி முதல் வெளிநாட்டு மெடிடெரேனிய உணவுகள் வரை விரும்பி உண்ணுகிறார்.

அனுஷ்கா ஷர்மா- சிக்கன் பட்டர் மசாலா
ஒரு குச்சியை போல பொடியான தேகம் உடைய அனுஷ்கா ஷர்மாவை பார்த்தால், யாராவது அவர் சிக்கன் பட்டர் மசாலாவை வெளுத்து வாங்குவார் என்று நம்புவார்களா? ஆனால் அது தான் உண்மை. முக்கியமாக இந்த உணவை அவர் தாயாரே சமைத்து தந்தால், இன்னும் விரும்பி சாப்பிடுவாராம்.

கரீனா கபூர்- இத்தாலிய உணவுகள்
'தஷான்' என்ற படத்துக்காக தன் உடல் எடையை பெருமளவில் குறைத்து, பலரின் கவனத்தை ஈர்த்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தவர் தான் கரீனா கபூர். ஆனால் இந்த தோற்றத்துக்கும், இத்தாலிய உணவின் மீது அவர் கொண்டிருக்கும் தீராத காதலுக்கும் சம்பந்தமே இருக்காது. அதிலும் குறிப்பாக பாஸ்தா மற்றும் பீட்சா மீது உயிரையே வைத்துள்ளார். பொதுவாக சாலட் மற்றும் பானங்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும் அவர், வீட்டில் கோர்கோன்சோலா சீஸை வைத்து செய்யப்படும் பாஸ்தாவையும் எப்போதாவது சாப்பிடுகிறார்.

ஷாருக்கான்- க்ரில் சிக்கன்
கிங் கான் இந்த உலகத்தையே தன் காலடியில் வைத்திருந்தாலும், எந்த ஒரு வெளிநாட்டு உணவை விரும்புவதற்கு பதில், நம் நாட்டில் புகழ் பெற்ற க்ரில் சிக்கனை விரும்புகிறார். மொறுமொறுவென தயார் செய்யப்பட்ட இந்த சிக்கன், இவருடைய மதிய உணவில் தினமும் பரிமாறப்படுகிறது.

அக்ஷய் குமார்- தாய் க்ரீன் குழம்பு
தாய்லாந்தில் நாட்டில் தலைமைச் சமையற்காரராக வேலை பார்த்த ஒரு நடிகருக்கு எந்த உணவு வகை பிடிக்கும் என்று கண்டுப்பிடிப்பது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான விஷயம் கிடையாது. கார சார விஷயத்தில் நம் நாட்டு உணவோடு எந்த வகையிலும் குறைந்து போகாத வெளிநாட்டு உணவான தாய் க்ரீன் குழம்பின் மீது, இந்த 'கில்லாடி' அக்ஷய் குமாருக்கு தீராத காதல் உள்ளது.

அமீர்கான்- மொகலாய் உணவுகள்
சில நூற்றாண்டுகளுக்கு முன் முகலாய சாம்ராஜ்யத்தை சேர்ந்த அரசவை சமையல்காரர்களால் ருசியாக செய்யப்பட்ட மொகலாய் உணவுகள் இன்று வரை பலரது மனதையும் கொள்ளை கொண்டுள்ள உணவாக உள்ளது. அதில் ஒருவராக நமது அமீர்கானும் உள்ளார்.

அமிதாப் பச்சன்- வெண்டைக்காய் சப்ஜி
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், மற்ற உணவுகளை விட வெண்டைக்காய் சப்ஜி மற்றும் மூங் தால் என்றால் அவருக்கு கொள்ளை பிரியம். படப்பிடிப்புகளில் கூட அவர் இந்த உணவுகளை சாப்பிடவே விரும்புகிறார்.

ரன்பீர் கபூர்- ஜங்லி மட்டன் குழம்பு
அக்காலத்தில் அரசர்கள் வேட்டைக்கு செல்லும் போது, அங்கே வேட்டையாடிய மிருகங்களை அங்கேயே சமைத்து உண்டு மகிழ்வார்கள். அந்த உணவே ஜங்லி மட்டன் குழம்பாகும். இந்த உணவை தான் ரன்பீர் கபூர் விரும்பி உண்ணுகிறார். அதுவும் தன் பாட்டியின் கையால் தயார் செய்யப்பட்டதைத் தான் விரும்பி சாப்பிடுவார்.

அர்பாஸ் கான்- மட்டன் பாயா
சற்று பருமனாக இருக்கும் அர்பாஸ் கானுக்கு மட்டன் கொண்டு தயாரிக்கப்படும், தென்னிந்தியாவின் புகழ் பெற்று விளங்கும் மட்டன் பாயா என்றால் கொள்ளை பிரியமாம். தினமும் தனது உணவில் அது கண்டிப்பாக இருக்க வேண்டுமாம். சாப்பாட்டு பிரியர் என்றால் இது தானோ!

மாதுரி தீட்சித்- க்ரீமி மீன்
மராத்தி நடிகையான மாதுரி தீட்சித்திற்கு, மீன் மீது காதல் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சொல்லப்போனால் தானே தயாரிக்கும் ஒரு வகை க்ரீமி மீன் உணவை தான் அவர் விரும்பி உண்ணுகிறார். மேலும் இந்த வகை உணவை எப்படி தயாரிப்பது என்று இணையதளத்தில் பார்த்து சுலபமாகவும் ருசியாகவும் தயாரிக்கலாம்.

அபிஷேக் பச்சன்- ராஜ்மா சவல்
எங்கும் கிடைக்கிற ராஜ்மா சவல் தான் அபிஷேக் பச்சனின் விருப்பமான உணவாகும். காரசாரமாக செய்யப்பட்ட ராஜ்மா குழம்பை சுட சுட உள்ள சாதத்தில் பிசைந்து சாப்பிடுவது ஒரு புகழ் பெற்ற வடஇந்திய உணவாகும்.

சன்னி தியோல்- வெந்தயக் கீரை பரோட்டா
நல்ல கட்டுமஸ்தான உடலை கொண்ட பஞ்சாபியான சன்னி தியோல், சிக்கன் மற்றும் பால் சம்பந்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடுவார் என்று தான் பலரும் நினைப்போம். ஆனால் இவரோ வாழ்க்கையில் எளிய உணவுகளின் மீதே நாட்டம் கொண்டுள்ளார். அவருக்கு பிடித்த உணவு என்று பார்த்தால், அது வெந்தயக் கீரை பரோட்டாவும், சுரைக்காய் சப்ஜியும் தான்.

சஞ்சய் தத்- சிக்கன் டிக்கா
ஒரு தட்டு சிக்கன் டிக்காவை கொடுத்தால், ஒரு பிடி பிடிக்காமல் விட மாட்டார் சஞ்சய் தத். ஆனால் இவருக்கு பிடித்த இந்த உணவு சிறைச்சாலையில் கிடைக்குமா என்பது சந்தேகமே. அவர் வீட்டு சாப்பாடு உண்ணுவதற்கு விடுத்த வேண்டுகோளே நிராகரிக்கப்பட்டு விட்டதல்லவா.



Click it and Unblock the Notifications











