Latest Updates
-
ஹோட்டல் ரவா உப்புமா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 14 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
காதலில் சம்மதம் முக்கியமா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை என்ன தெரியுமா? -
எடை இழப்புக்கு உதவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
'Main Tera' Day ட்ரெண்டில் காதலை சொல்லப் போறீங்களா? இந்த பாதுகாப்பு டிப்ஸ் தெரியாம மெசேஜ் அனுப்பாதீங்க, சிக்கலில் மாட்டிக்காதீங்க! -
ஒருடைம் வாழைப்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் மாஸ்க் போடுங்க.. முகம் பளிச்சென்று பிரகாசமா இருக்கும்.. -
Sonia Gandhi: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி - உண்மையில் அவருக்கு என்ன பிரச்சனை? -
வெயில் கொளுத்துதா? வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி கூட தேவையில்லை! -
ராகு-கேதுவிற்கு இடையில் வரும் சூரியன்: மே 15 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
நம்ம ஊர் சேலையில் 'நச்'சுன்னு ஜொலிக்கும் ஹாலிவுட் 'ஜாலி ஸ்டார்ஸ்'...!
பெண்களுக்கு அழகே புடவை தான். அத்தகைய புடவையை யார் அணிந்தாலும், அது அவர்களுக்கு மங்களகரமான தோற்றத்தைக் கொடுப்பதோடு, அவர்களது அழகையே அதிகரித்துக் காட்டும். ஆனால் பெரும்பாலான இந்திய பெண்கள் வெளிநாட்டு உடையை ஸ்டைல் என்று எண்ணி, புடவையை அதிகம் அணிய விரும்புவதில்லை. ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? வெளிநாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்திய உடையான புடவையைத் தான் அணிய விரும்புகின்றனர். குறிப்பாக ஹாலிவுட் பிரபலங்கள் பலர் புடவை அணிந்து பல்வேறு விழாக்களில் கலந்து கொண்டு, விழாக்களுக்கு வந்த அனைவரது கண்களும் தங்கள் மீது படுமாறு வந்திருந்தனர்.
ஹாலிவுட் அழகியான எலிசபெத் ஹர்லி, 2007 ஆம் ஆண்டு இந்திய தொழிலதிபர் அருண் நாயரை திருமணம் செய்யும் போது, இந்திய பாரம்பரிய உடையான புடவையைத் தான் அணிந்தார்.
அதுமட்டுமின்றி, இந்தியாவிற்கு வருகைத் தந்த போது சில ஹாலிவுட் அழகிகள், இந்திய பாரம்பரிய உடையை அணிந்தனர். இப்போது அப்படி புடவையில் கலக்கிய சில ஹாலிவுட் பிரபலங்களை உங்கள் பார்வைக்காக கொடுத்துள்ளோம்.

அன்னா கோர்னிகோவா
இது டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையான அன்னா கோர்னிகோவா, துபாயில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கு கொள்ளும் போது நீல நிற புடவையை அணிந்த போது எடுத்தது.

விக்டோரியா பெக்காம்
புடவையிலும் மிகவும் செக்ஸியாக இருக்கும் இவர் மிகவும் பிரபலமான ஹாலிவுட் அழகி. இது இது வோக் இந்தியா பாத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக புடவையை அணிந்த போது எடுத்தது.

நவோமி கேம்பல்
ஹாலிவுட் மாடலான நவோமி கேம்பல் லாக்மீ ஃபேஷன் வீக்கில் சப்யசாச்சி வடிவமைத்த கருப்பு நிற நெட் புடவையை அணிந்து ராம்ப் வாக் நடந்த போது எடுத்தது.

கேமரூன் டயஸ்
கேமரூன் டயஸ் இந்த கருப்பு நிற உடையில் மிகவும் அட்டகாசமாக உள்ளார்.

எலிசபெத் ஹர்லி
இவர் தான் இந்திய தொழிலதிபரை மணந்த எலிசபெத் ஹர்லி. இவர் பெரும்பாலும் விழாக்களுக்கு புடவையில் தான் வருவார்.

ஆஷ்லே ஜட்
மெஜந்தா நிற புடவையில் இருக்கும் ஆஷ்லே ஜட்டை பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், அது 'வாவ்' என்பது தான். அந்த அளவில் இவர் மிகவும் அழகாக மங்களகரமாக உள்ளார்.

நிகோல் ஷெர்ஸிங்கர்
இது நிகோல் ஷெர்ஸிங்கர் கருப்பு நிற புடவையை அணிந்த போது எடுத்தது. இதில் இவர் உண்மையிலேயே மிகவும் ஹாட்டாக உள்ளார்.

பமீலா ஆண்டர்சன்
பமீலா ஆண்டர்சன் வெள்ளை நிற நெட்டட் புடவையில் மிகவும் செக்ஸியாக உள்ளார். இது பிக் பாஸ் சீசன் 6 இல் சிறப்பு விருந்தினராக வந்த போது எடுத்தது.

பாரிஸ் ஹில்டன்
இது மும்பையில் நடைபெற்ற விழா ஒன்றில் பாரிஸ் ஹில்டன் பிங்க் நிற புடவையில் வந்த போது எடுத்தது.

மேரி க்ளேர் பத்திரிக்கையில் பாரிஸ் ஹில்டன்
இது மேரி க்ளேர் பத்திரிக்கைக்காக, கடல் பச்சை நிற நெட்டட் புடவையை பாரிஸ் ஹில்டன் எடுத்த போது எடுத்தது.

அன்னா ஹாத்வே
இது அன்னா ஹாத்வே புடவையை அணிந்ததுடன், காதுகளுக்கு அழகான கம்மல் மற்றும் இந்திய பாரம்பரிய ஸ்டைலான கொண்டையை போட்டு முழு இந்திய பெண் போன்று மாறி காட்சியளித்த போது எடுத்தது.

ஓப்ரா வின்ஃப்ரே
இது ஓப்ரா வின்ஃப்ரே, இந்தியாவிற்கு வருகை தந்த போது சப்யசாச்சி டிசைன் செய்த புடவைகளை அணிந்த போது எடுத்தது.

ஜெசிகா ஆல்பா
ஹாலிவுட் பிரபலமான ஜெசிகா ஆல்பா, ஆரஞ்சு மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த புடவையை அணிந்த போது எடுத்தது.

லேடி காகா
ஹாலிவுட் கவர்ச்சி பாடகி லேடி காகா எத்தனையோ விசித்திரமான ஆடைகளை எல்லாம் அணிந்துள்ளார். இதில் புடவையை மட்டும் விட்டு வைத்திருப்பாரா என்ன? ஆம், இந்த படத்தில் புடவையில் இருப்பது லேடி காகா தான்.

ஹாலே பெர்ரி
மிகவும் பிரபலமான ஹாலிவுட் பிரபலம் தான் ஹாலே பெர்ரி. இந்த ஹாலிவுட் அழகியான ஹாலே பெர்ரி சிவப்பு மற்றும் கோல்டன் கலந்த புடவையை அணிந்த போது எடுத்தது. இவர் இந்த உடையை அவரது படத்தின் விளம்பரப்படுத்தும் விழாவின் போது அணிந்தார்.



Click it and Unblock the Notifications