For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களுக்கு பிடிக்காத பெண்களுக்கு பிடித்த விஷயங்கள்!!!

By Maha
|

ஆண்களும் பெண்களும் முற்றிலும் வித்தியாசமானவர்கள். அதேப்போல் தான் அவர்களது விருப்பங்களும் வித்தியாசம். அதிலும் ஒரு பெரும் ஆச்சரியம் என்னவென்றால், ஆண்களுக்குப் பிடிக்காதது பெண்களுக்குப் பிடிக்கும் என்பது தான். அதிலும் வேண்டுமென்றால் பாருங்கள், ஆண்களும் பெண்களும் பேசும் போது, ஏதாவது அரிதாக ஒருசில விஷயங்களில் மட்டுமே ஒரே மாதிரி இருக்கும். மற்ற படி இருவரும் எதிர் துருவங்கள் தான். பெண்களுக்கு பிடிக்காதை ஆண்கள் மிகவும் விரும்புவார்கள். இப்போது அத்தகையவற்றில் ஆண்களுக்கு பிடிக்காத எவற்றை பெண்கள் விரும்புகிறார்கள் என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
* சீரியல் பார்ப்பது: ஆண்களுக்கு எப்போதும் அதிகம் தொலைக்காட்சி பார்க்கவே பிடிக்காது. அவ்வாறு அவர்கள் பார்த்தால், கிரிக்கெட், செய்திகள் அல்லது ஏதாவது விளையாட்டைத் தான் பார்ப்பார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் பெண்களும் சரி, வேலைக்கு செல்லும் பெண்களும் சரி சீரியல் தான். எந்த நேரமும் சீரியலையே பார்ப்பார்கள். சமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதை மறப்பார்களே தவிர, சீரியல் நேரத்தை மறக்காமல் நினைவில் வைத்து அதைப் பார்ப்பார்கள். இதைப் பார்க்கும் போது ஆண்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இருக்காது.

* ரொமான்டிக் நாவல் படிப்பது: பெண்கள் பொதுவாக அதிகமான அளவு ரொமான்ஸ் குணம் உள்ளவர்கள். அதனால் தான் அவர்கள், ஏதேனும் ரொமான்டிக் நாவல் படிப்பது, அவற்றை தன் காதல் வாழ்க்கையோடு ஒப்பிட்டு, வருத்தப்படுவது என்பதை பெண்கள் விரும்புவார்கள். ஆனால் ஆண்களுக்கு இந்த மாதிரியான புத்தங்கள் அனைத்தும் போர் தான். இதனால் கூட திருமணமானவர்களுக்கும் சரி, காதலர்களுக்கும் சரி அதிக மோதல்கள் ஏற்படும். ஏனெனில் பெண்கள் மிகவும் உணர்ச்சிவயப்பட்டவர்கள். அதனால் தான் அவர்கள் அத்தகைய புத்தகத்தை படிக்கின்றனர்.

* சரியான நேரத்தில் எழுந்திருப்பது: பெரும்பாலான பெண்களுக்கு சரியான நேரத்தை கடைபிடிப்பது என்பது மிகவும் பிடிக்கும். அதனால் தான், படுக்கும் போது கூட அலாரம் வைத்துவிட்டு, காலையில் எழுந்து வேலை செய்வார்கள். ஆனால் ஆண்களுக்கு அலாரம் என்றால் பிடிக்கவே பிடிக்காது. மேலும் ஆண்கள் எப்போதும் எதிலும் லேட் தான். ஆனால் பெண்கள் அனைத்திலும் சரியாக இருக்க வேண்டும் என்று இருப்பார்கள்.

* ஊர் கதை மற்றும் கிசுகிசு பேசுவது: பெண்களிடம் இருக்கும் பழக்கங்களில் மாற்ற முடியாத விஷயம் என்றால் அது ஊர் கதை பேசுவது தான். ஆண்களுக்கும் பிடிக்கும். ஆனால் அவர்களுக்கு ஒரு பெண்ணை பிடித்துவிட்டால், மட்டும் தான் பேசுவார்கள். சொல்லப்போனால் விஷயம் இல்லாமல் ஆண்கள் பேச மாட்டார்கள். ஆனால் பெண்கள் விஷயம் இல்லையென்றால் கூட, என்ன தான் பேசுவார்களோ தெரியாது, ஆனால் பேசிக் கொண்டே இருப்பார்கள். இதை பார்த்தால், ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

* நண்பர்களுடன் இரவில் வெளியே செல்லுதல்: ஆண்களுக்கு தன் காதலியோடு மட்டுமே எப்போதும் வெளியே செல்ல வேண்டும் என்று தோன்றும். அதுவே பிடிக்கும். ஆனால் பெண்களுக்கு தன் தோழிகளுடன் இரவில் வெளியே செல்வது என்பது பிடிக்கும். இந்த ஒரு விஷயத்தால் தான் நிறைய உறவுகள் முறிகின்றன. மேலும் ஆண்களுக்கு தன் காதலியுடன் தான் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் பெண்களுக்கு தன் நண்பர்களுடனேயே அதிக நேரத்தை செலவழிக்க விரும்புவர். இதனால் காதலிப்பவர்களுக்கிடையே தேவையில்லாத சந்தேகம், துரோகம் என்று அனைத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன. இதுவும் பெண்களுக்கு பிடித்த ஆண்களுக்கு பிடிக்காத விஷயங்களுள் ஒன்று.

* குழந்தைகள் பிடிக்கும்: பெண்கள் எப்போதும் ஒரு நாள் தாய் ஆவார்கள் தான். அதன் ஒரு செயல் தான், எங்கு குழந்தைகளைப் பார்த்தாலும், உடனே அந்த குழந்தையின் அருகில் சென்று, ஒரு முத்தம் கொடுத்துவிட்டு வருவார்கள். அதற்காக ஆண்களுக்கு குழந்தைகளை பிடிக்காது என்பதில்லை. அவர்களுக்கும் பிடிக்கும், ஆனால் அவ்வாறு வெளிப்படுத்துவதை விரும்பமாட்டார்கள்.

மேற்கூறியவையே, ஆண்களுக்கு பிடிக்காததும், பெண்களுக்கு பிடித்ததும் ஆகும். என்ன நண்பர்களே! சரியா?

English summary

Things Men Hate But Women Love | ஆண்களுக்கு பிடிக்காத பெண்களுக்கு பிடித்த விஷயங்கள்!!!

Men and women are different. Thus, their likes and dislikes will also vary from each other. Hardly you will find a man and woman sharing similar things and thoughts. That is why, both are from different poles. What men like is hated by women and vice versa. The tiff between these two genders is never ending. For example, lets check out few things that men hate but women love.
 
Story first published: Thursday, September 27, 2012, 17:20 [IST]
Desktop Bottom Promotion