Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
நிலையில்லாத வாழ்க்கை
ஒரு மிகப் பெரிய ஜென் துறவி அரண்மனையின் வாசலில் வந்து காத்திருந்தார். அவரை வாயில் காப்பாளர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அரசரை அவசியம் பார்க்க வேண்டும் என்று அந்த துறவி கூறினார்.
துறவிக்கு மதிப்பளித்த அரசர் " தங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.
அதற்கு அந்த துறவி " வழிப்போக்கர்கள் தங்கும் இந்த இடத்தில் நான் உறங்குவதற்கு எனக்கு சிறிது இடம் வேண்டும்" என்று பதிலளித்தார்.
இதைக் கேட்ட அரசரோ, " இது வழிப்போக்கர்கள் தங்கும் இடமல்ல என்னுடைய அரண்மனை" என்றார்.
உடனே துறவியானவர் அரசரைப் பார்த்து, "உங்களுக்கு முன் இந்த அரண்மனையில் யார் இருந்தார்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டார்.
"என் தந்தை இருந்தார் அவர் இறந்துவிட்டார்" என்றார் அரசர்
"அவருக்கு முன் யார் இருந்தார்" என்று கேட்டார் துறவி.
"எனது பாட்டனார் இருந்தார்" அவரும் கூட இறந்துவிட்டார். இதைக்கேட்ட துறவியோ, இங்கே யாருமே நீண்ட நாட்களுக்கு நிரந்தரமாக தங்கியதில்லையே? பின்னர் இதை வழிப்போக்கர்கள் தங்குமிடம் என்று நான் கூறியதில் என்ன தவறு?" என்று கேட்டார்.
கருத்து: இந்த உலகமே வழிப்போக்கர்கள் தங்கிச் செல்லும் ஒரு மடம்தான்



Click it and Unblock the Notifications