Latest Updates
-
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (19 July 2026-25 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது..! -
பரோட்டா கடை சிக்கன் சால்னா டேஸ்ட்டா இருப்பதன் ரகசியம் இதாங்க! -
ராகு-கேதுவின் பிடியில் இருந்து விடுபடும் 6 கிரகங்கள்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்! -
தினமும் சிறிது முருங்கை இலையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
பட்டாணி சாதமும், கத்திரிக்காய் கிரேவியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்று ஒரே நாளில் உருவாகும் ஹன்ஸ், கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
சர்க்கரை நோயாளிகளுக்கான அவல் இட்லியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 18 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்
வாஸ்துப்படி, முன்னோர்களின் போட்டோவை வீட்டின் எந்த இடத்தில், எந்த திசையில் வெக்கணும் தெரியுமா?
Vastu Tips: எப்படி நாம் குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருந்தால் தான் சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியுமோ, அதேப் போல் வீட்டில் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருட்களையும் வாஸ்துப்படி வைத்திருக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரித்து, வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மேலும் நமது வாழ்க்கையில் முன்னோர்கள் முக்கிய பங்கை வகிக்கின்றனர். அத்தகைய முன்னோர்களின் போட்டோக்களை வீட்டில் வைத்து பலர் கடவுளாக நினைத்து வணங்கி வருவார்கள். ஆனால் அப்படி முன்னோர்களின் போட்டோக்களை வீட்டில் வைத்திருந்தால், அதை வீட்டின் சரியான இடத்தில், சரியான திசையில் வைக்க வேண்டும்.

அவ்வாறு வைக்காமல் கண்ட இடத்தில் வைத்தால், பின் முன்னோர்களின் கோபத்திற்கு ஆளாவதோடு, வீட்டில் பலவிதமான பிரச்சனைகளையும், முன்னேற்றத்தில் தடைகளையும் சந்திக்க நேரிடும். நீங்கள் உங்கள் முன்னோர்களின் ஆசியை பெற விரும்பினால், அவர்களின் போட்டோக்களை வாஸ்துப்படி வீட்டின் எந்த இடத்தில் வைக்க வேண்டும், எந்த விஷங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, அதைப் பின்பற்றுங்கள்.
*. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இறந்த முன்னோர்களின் போட்டோக்களை எப்போதும் தொங்கவிடக்கூடாது. இல்லாவிட்டால் பித்ரு தோஷத்திற்கு ஆளாகக்கூடும். எப்போதும் முன்னோர்களின் போட்டோக்களை செல்ப் அல்லது கப்போர்டில் தான் வைத்திருக்க வேண்டும்.
* முன்னோர்களின் போட்டோ இருக்கும் ப்ரேம் எப்போதும் தங்க நிறத்தில் இருக்க வேண்டும்.
* இறந்தவர்களின் ஒரு போட்டோவை தான் வீட்டில் வைத்திருக்க வேண்டும். வெவ்வேறு போட்டோக்களை வீட்டின் அனைத்து அறைகளிலும் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களின் கோபத்திற்கு ஆளாகி, வீட்டில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
* வாஸ்துப்படி முன்னோர்களின் போட்டோக்களை மூன்றாம் நபரின் கண்களில் படுமாறு வைக்கக்கூடாது. வெளியாட்கள் முன்னோர்களின் படங்களை பார்த்தால், அது எதிர்மறை சக்தியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால்தான் முன்னோர்களின் படத்தை வீட்டின் ஹாலில் வைக்க வேண்டாம். அதோடு படுக்கை அறையிலும் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
* முன்னோர்களின் போட்டோக்களுக்கு அருகில் அவர்களை அவமதிக்கும் வகையில் சிகரெட் பாக்கெட், சாம்பல் தட்டு போன்றவற்றை வைப்பதையும் தவிர்க்க வேண்டும்.
* எப்போதும் இறந்தவர்களின் போட்டோக்களை கடவுள் இருக்கும் பூஜை அறையில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது அந்த குடும்பத்தில் அமைதியின்மை சூழ்நிலையை உருவாக்கலாம். அதோடு அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரித்து, வீட்டில் பிரச்சனைகளும், சண்டைகளும் அதிகரிக்கலாம்.
* உங்கள் வீட்டின் வடகிழக்கு திசையில் இறந்த முன்னோர்களின் படங்களை வைக்கலாம். இருப்பினும், வீட்டின் அந்த இடத்தில் பூஜை அறை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* எப்போதும் வீட்டில் தென்மேற்கு திசையில் முன்னோர்களின் படத்தை வைக்காதீர்கள். அவ்வாறு வைத்தால், அது நிறைய வாக்குவாதங்களுக்கும் சண்டைகளுக்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் தம்பதிகளிடையே பிரச்சனைகள் அதிகரித்து விவாகரத்து வரை சென்று விடும்.
* வாஸ்துப் படி, முன்னோர்களின் படத்தை எப்போதும் வடக்கு திசையிலேயே வைக்க வேண்டும். வடக்கு என்பது முன்னோர்களின் திசையாகக் கருதப்படுவதால், படத்தை வடக்கு திசையில் வைப்பதன் மூலம், படம் தெற்கு நோக்கி இருக்கும். எனவே, முன்னோர்களின் படங்களை தெற்கு நோக்கி இருக்கும்படி வைக்க வேண்டும். அதே வேளையில் வடக்கு அல்லது மேற்கு திசைகளில் உள்ள சுவர்களில் போட்டோக்களை வைக்கக்கூடாது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications