Latest Updates
-
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க..
பண பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வெக்கணுமா? அப்ப ஒரு பௌலில் உப்பையும், கிராம்பையும் போட்டு இந்த இடத்துல வையுங்க!
Vastu Tips For Money In Tamil: உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள் தான் உப்பு. உப்பில்லாமல் எந்த ஒரு உணவும் முழுமையடையாது. ஆனால் இந்த உப்பு வாஸ்து சாஸ்திரத்திலும் முக்கிய பங்கை வகிக்கிறது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உப்பு வீட்டினுள் சுற்றிக் கொண்டிருக்கும் எதிர்மறை ஆற்றலை வெளியேற்றி நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் இது வீட்டில் உள்ள வாஸ்து தோஷத்தை நீக்க உதவுகிறது.

உப்பிற்கு அடுத்தப்படியாக வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய பங்கை வகிக்கும் மற்றொரு பொருள் தான் கிராம்பு. இந்த கிராம்பு நல்ல மணத்தைக் கொண்டது. நல்ல மணம் கொண்ட பொருட்களில் லட்சுமி தேவி வாசம் செய்வதாக கூறப்படுகிறது.
இவ்விரு பொருட்களும் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, வீட்டில் உள்ள பணப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். அதற்கு அதை சரியாக பயன்படுத்த வேண்டும்.
உப்பு-கிராம்பு பரிகாரம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு கண்ணாடி பௌலில் கல் உப்பை நிரப்பி, அதில் 4-5 கிராம்புகளை சொருகி, அதை வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் வைக்க வேண்டும். இப்படி வைக்கும் போது வீட்டில் பணம் அதிகம் சேர ஆரம்பிப்பதோடு, வீடும் செழிப்பாக இருக்கும். வீட்டில் பணப் பற்றாக்குறை இருந்தால், அதுவும் நீங்கும். மேலும் இது வீட்டை நல்ல மணத்துடன் வைத்துக் கொள்வதோடு, வீடும் அமைதியாக மற்றும் மகிழ்ச்சியாக இருக்கும்.
இது தவிர நீரில் சிறிது உப்பு மற்றும் கிராம்பு சேர்த்து, அந்த நீரை வீடு முழுவது தெளிக்க வேண்டும். இப்படி தெளிக்கும் போது, வீடு நல்ல மணத்துடன் இருக்கும். மேலும் வீட்டு கழிவறையில் ஏதேனும் வாஸ்து குறைபாடு இருந்தால், ஒரு கண்ணாடி பௌலில் கல் உப்பை நிரப்பி, அதை யாரும் தொட முடியாத இடத்தில் வைத்து, சில நாட்களுக்கு ஒருமுறை அந்த உப்பை மாற்ற வேண்டும்.
வீட்டில் பண பிரச்சனை தீவிரமாக இருந்தால், அப்போது 2 ஸ்பூன் கல் உப்பை ஒரு கண்ணாடி பௌலில் போட்டு 4 கிராம்பை வைத்து, வீட்டின் மூலையில் யாருடைய கண்ணிற்கும் படாத இடத்தில் வைக்க வேண்டும். இப்படி செய்தால், வீட்டில் பணப் பிரச்சனை முடிவுக்கு வருவதோடு, வீட்டில் செல்வமும் பெருகும்.
கல் உப்பை கொண்டு வீட்டை சுத்தம் செய்யலாம்
வீட்டை துடைக்கும் போது, நீரில் 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பை சேர்த்து கலந்து, அந்நீரால் வீட்டைத் துடைப்பது மிகவும் நல்லது. இப்படி செய்யும் போது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கும். இப்படி வாரம் ஒருமுறை உப்பு கலந்த நீரால் வீட்டை துடைக்கும் போது, வீட்டில் சந்திக்கும் பலவிதமான பிரச்சனைகள் தடுக்கப்படும்.
உப்பு நீர் குளியல்
நீங்கள் உங்களைச் சுற்றி எதிர்மறை ஆற்றல் நிரம்பியிருப்பதை உணர்ந்தால், தினமும் குளிக்கும் நீரில் 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பை சேர்த்து குளிக்க வேண்டும். அதுவும் இப்படி தொடர்ந்து குறைந்தது 21 நாட்கள் குளிக்க வேண்டும். இப்படி செய்தால், அனைத்து எதிர்மறை ஆற்றல்களும் வெளியேறி, நீங்கள் புத்துணர்ச்சியுடனும், சுத்தமாகவும் இருப்பதை உணரலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications