Latest Updates
-
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
என்ன செஞ்சாலும் பண கஷ்டம் குறையமாட்டீங்குதா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. உடனடி மாற்றம் தெரியும்..
Vastu Tips In Tamil: உங்கள் வீட்டில் பணம் அதிகம் சேர்வதில்லையா? நாளுக்கு நாள் பணப் பிரச்சனை அதிகமாகிறதா? எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது நீர் போன்று கரைகிறதா? அப்படியானால் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் மற்றும் நீங்கள் குடியிருக்கும் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் வாஸ்து சாஸ்திரம் கூறும் சில எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் பண பிரச்சனை நீங்குவதோடு, வீட்டில் பணமும் அதிகம் சேரும்.
தற்போதைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவருக்குமே பணத் தேவை அதிகமாகி வருகிறது. இந்த பணத்தை சம்பாதிக்க கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி சம்பாதிக்கும் பணம் கையில் நிற்காமல் செலவாகிறது என்றால் அதற்கு நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் காரணமாக இருக்கலாம். இப்போது வீட்டில் பணம் அதிகம் சேரவும், பணப் பிரச்சனை குறையவும் வாஸ்துப்படி பின்பற்ற வேண்டிய சில விஷயங்களைக் காண்போம்.

* நிறைய பேர் பணம் வைத்திருக்கும் தங்கள் பர்ஸ் அல்லது ஹேண்ட் பேக்கில் அவசர காலத்திற்கு உதவும் என ஒருசில மருந்து மாத்திரைகளை வைத்திருப்போம். ஆனால் வாஸ்துப்படி, பணம் வைக்கும் பணப்பையில் மருந்துகளை வைத்திருப்பது வாழ்வில் எதிர்மறையை கொண்டு வரும் மற்றும் பணத்தை சேரவிடாமல் தடுக்கும். எனவே இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்.
* வீட்டில் பணம் சேர வேண்டுமானால், அந்த வீட்டில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி குடியிருக்க வேண்டும். லட்சுமி தேவி ஒருவரது வீட்டில் நுழைய வேண்டுமானால், வீட்டின் பிரதான வாசல் அழகாக மற்றும் சுத்தமாக இருக்க வேண்டும். வாஸ்துப்படி வீட்டு வாசலில் ஸ்வஸ்திக் சின்னம், லட்சுமி தேவியின் பாதங்கள் போன்ற ஒருசில அடையாளங்களை வைத்தால், அது அந்த வீட்டில் செல்வத்தை மற்றும் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும்.
* முக்கியமாக வீட்டில் செல்வம் பெருக வேண்டுமானால், அந்த வீடு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தமான வீட்டில் தான் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரிக்கும். நேர்மறை ஆற்றல் நிரம்பியுள்ள வீடு செல்வ செழிப்போடு இருக்கும் மற்றும் வீட்டு சூழலும் இனிமையாக இருக்கும்.
* வாஸ்துப்படி, வீட்டில் சிரிக்கும் புத்தர் சிலை, யானை சிலை, செல்வம் நிறைந்த கப்பல் போன்றவற்றை வைத்திருந்தால், அது அந்த வீட்டில் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் ஈர்ப்பதோடு, அந்த வீட்டில் அமைதியைக் கொண்டு வரும்.
* உங்களுக்கு செடிகள் பிடிக்கும் என்றால், வீட்டினுள் உள் அலங்கார செடிகளை வாங்கி வைத்து வளர்த்து வாருங்கள். வீட்டினுள் செடிகளை வளர்க்கும் போது, அது நேர்மறை ஆற்றலை அதிகரித்த, வீட்டில் செல்வம் அதிகரிக்க வழிவகை செய்யும். எனவே மணி பிளாண்ட், மூங்கில் செடி, பாம்பு செடி, துளசி செடி, மல்லிகை செடி, லாவெண்டர் செடி போன்றவற்றை வாங்கி வளர்க்கலாம்.
* வீட்டில் உள்ள குழாயில் இருந்து நீர் ஒழுகியவாறு இருந்தால், அந்த குழாயை முதலில் சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அந்த நீர் கசிவது போன்றே, வீட்டில் இருக்கும் பணமும் கையில் இருந்து செலவாகும். எனவே பணம் வீட்டில் சேர வேண்டுமானால், இவற்றை உடனடியாக சரிசெய்யுங்கள்.
* முக்கியமாக காலை எழுந்ததும் வீட்டின் ஜன்னலைத் திறந்துவிட வேண்டும். சூரிய ஒளி வீட்டிற்குள் வர வேண்டும். வீட்டில் சூரிய ஒளியே நுழையாமல், வீடு எப்போதும் இருண்ட நிலையில் இருந்தால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரித்து, பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே வீட்டை எப்போதும் பிரகாசமாக பளிச்சென்று வைத்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் ஹேண்ட் பேக் அல்லது பர்ஸில் எப்போதும் சாக்லேட் போன்ற ஏதாவது ஒரு உணவுப் பொருளை வைத்திருப்பீர்களா? வாஸ்துப்படி, உணவுப் பொருட்களை பணம் வைக்கும் பையில் வைத்தால், அது நிதி இழப்பை உண்டாக்கும். எனவே இந்த தவறை தவிர்த்திடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications