Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வாஸ்துப்படி, இதுல ஒன்னு வீட்டுல இருந்தாலும், செல்வம் அதிகம் சேருமாம்... நீங்களும் வெச்சு பாருங்க...
Vastu Tips In Tamil: நாம் அனைவருமே பணத்திற்காக தான் ஓடியாடி உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் பணம் இருந்தால் தான் இவ்வுலகில் வாழ முடியும் என்ற நிலைமையில் உள்ளோம். ஆனால் அப்படி சம்பாதிக்கும் பணம் வீட்டில் நிலைத்திருக்கிறதா என்றால், பலரும் இல்லை என்று தான் கூறுவார்கள்.
ஒருவரது வீட்டில் பணம் சேராமல் செலவாகிக் கொண்டிருக்கிறது என்றால், அந்த வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருக்க வாய்ப்புள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளானது தொழில் முன்னேற்றத்துடன் தொடர்புடையது. இந்த பகுதிகளில் ஏதேனும் வாஸ்து தோஷம் ஏற்பட்டால், ஒருவர் பணம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அதே வேளையில் இவ்விரு திசைகளிலும் ஏதேனும் சிறு தவறு செய்தாலும், அது பொருளாதார சிக்கல்களை சந்திக்க வைக்கும். மேலும் ஒருவரது வீட்டில் பணம் எப்போதும் நீடித்து நிலைத்திருக்க வேண்டுமானால், நிதி வளர்ச்சிக்காக ஒருசில பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இப்போது அவை என்னவென்பதையும், எங்கு வைக்க வேண்டும் என்பதையும் காண்போம்.
நீல நிற பிரமீடு
வாஸ்து சாஸ்திரத்தில் நீல நிற பிரமீடு மங்களகரமான ஒரு பொருளாக கருதப்படுகிறது. அதுவும் இந்த பிரமீடை வீட்டின் குபேர திசையான வடக்கு திசையில் வைப்பது மிகவும் நல்லது. இப்படி இந்த திசையில் நீல நிற பிரமீடை வைக்கும் போது, வீட்டில் பணம் எப்போதும் நிலைத்திருக்கும் மற்றும் பண பற்றாக்குறையே ஏற்படாது.
கண்ணாடி பௌல் நீர்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது வீட்டில் பணம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் அல்லது பணம் அதிகம் சேர வேண்டும் என்று விரும்பினால், ஒரு கண்ணாடி பௌலில் நீரை நிரப்பி, அதை வீட்டின் வடக்கு திசையில் வைக்க வேண்டும். அதுவும் அந்த நீரில் ஒரு வெள்ளி நாணயத்தை போட்டு வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம், செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் ஆசியும், அருளும் எப்போதும் அந்த வீட்டிற்கு இருக்கும். இதன் விளைவாக வீட்டில் பணம் எப்போதும் நிலைத்திருக்கும்.
துளசி மற்றும் நெல்லி செடி
துளசி செடியானது லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட துளசி செடியை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்டுகிறது. இது தவிர, நெல்லிக்காய் மரத்தை வீட்டில் வடக்கு திசையில் வைத்து வளர்ப்பதும் நல்லது. இது வீட்டில் நிதி முன்னேற்றத்திற்கு உதவி புரிந்து, வீட்டை செல்வ செழிப்போது வைத்திருக்க உதவும்.
விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் சிலை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய தெய்வங்களின் சிலை என்றால் அது விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் சிலையாகும். அதுவும் இந்த சிலைகளை வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். அதோடு இந்த சிலைகளுக்கு முன் தினமும் ஒரு மண் விளக்கை ஏற்ற வேண்டும். இப்படி செய்வதன் மூலம், வீட்டில் பண பற்றாக்குறை எப்போதும் ஏற்படாது.
வடக்கு திசை
வாஸ்துப்படி, வடக்கு திசையானது செல்வத்தின் தெய்வமான குபேரர் குடியிருக்கும் திசை. ஒருவரது வீட்டில் பணம் அதிகம் சேர வேண்டுமானால், இந்த குபேர திசையில் பணப் பெட்டியை வைத்து பயன்படுத்த வேண்டும். இப்படி செய்யும் போது, வீட்டில் எப்போதும் பணம் நிலைத்திருக்கும் மற்றும் பண பிரச்சனையே வராது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications