Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
வாஸ்துப்படி, வீட்டு பால்கனியில் இந்த செடிகளை வெக்காதீங்க.. இல்ல வீட்டுல கஷ்டம் தான் அதிகரிக்கும்...
Vastu Tips In Tamil: ஒவ்வொருவருமே தங்கள் வீடுகளை அழகாக வைத்துக் கொள்ள பலவிதமான பொருட்களை வாங்கி வைப்போம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான சுவை இருக்கும். சிலருக்கு பெயிண்ட்டிங் பிடிக்கும். இதனால் பல அழகான ஓவியங்களை வாங்கி வீட்டை அலங்கரிப்பார்கள்.
சிலருக்கு செடிகள் மிகவும் பிடிக்கும். அத்தகையவர்கள் செடிகளால் தங்கள் வீடுகளை அலங்கரிப்பார்கள். செடிகளை வீட்டிற்கு வெளியே மட்டும் தான் வளர்க்க வேண்டும் என்பதில்லை, வீட்டிற்குள்ளேயும் வளர்க்கலாம். செடிகளை வீட்டில் வளர்க்கும் போது வீட்டினுள் சுற்றும் காற்றின் தரம் மேம்படுவதோடு, மனநிலையும் சிறப்பாக இருக்கும்.

செடிகளை வளர்ப்பதெல்லாம் ஒருவரது வீட்டின் இடத்தைப் பொறுத்தது. நகரங்களில் வசிப்பவர்கள் நெருக்கமான பகுதிகளில் வாழ்கிறார்கள். இத்தகையவர்கள் செடிகளை வெளியே வளர்க்க முடியாது.
ஒருவேளை வீட்டில் பால்கனி இருந்தால், அங்கு வளர்க்கலாம். ஆனால் வீட்டின் பால்கனியில் செடிகளை வளர்ப்பதாக இருந்தால் ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது செடிகளை வாஸ்துப்படி சரியான இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.
அப்படி வைத்தால் தான் வீட்டினுள் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகமாக இருக்கும். தவறான இடத்தில் வைத்தால், அதுவே வீட்டில் பலவிதமான பிரச்சனைகளை வரத் தூண்டிவிடும். இப்போது பால்கனியில் செடிகளை வைப்பதாக இருந்தால் எதையெல்லாம் நினைவில் கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.
கிழக்கு திசையில் பால்கனி இருந்தால்...
உங்கள் வீட்டின் கிழக்கு திசையில் பால்கனி இருந்தால், துளசி செடியை வைக்கலாம். இது தவிர சாமந்தி போன்ற பூ செடிகளையும் வைக்கலாம். அதுவும் நீங்கள் சாமந்தி செடியை வளர்க்க நினைத்தால், அந்த செடியை வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். இப்படி வைக்கும் போது, வீட்டில் படிக்கும் குழந்தைகள் இருந்தால், அவர்கள் நன்கு படிப்பார்கள்.
வடக்கு திசையில் பால்கனி இருந்தால்...
வீட்டின் வடக்கு திசையில் பால்கனி இருந்தால், இங்கு பெரிய செடிகள் எதையும் வைக்க வேண்டாம். ஏனெனில் வாஸ்துப்படி இந்த திசையில் சிறு செடிகளைத் தான் வைக்க வேண்டும். அதுவும் மணி பிளாண்ட் அல்லது க்ராசுலா செடிகளை வைத்து வளர்ப்பதே சிறந்தது.
மேற்கு திசையில் பால்கனி இருந்தால்...
உங்கள் வீட்டின் மேற்கு திசையில் பால்கனி இருந்தால், மிதமான அளவிலான செடிகளைத் தான் வளர்க்க வேண்டும். அதுவும் இந்த திசையில் வைத்து வளர்க்கும் செடிகள் 2-4 அடி உயரத்தில் இருக்க வேண்டும். இந்த அளவிற்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவே இருக்கக்கூடாது. மிகவும் சிறிய அளவிலான செடிகளை வைத்து வளர்த்தால், அது வீட்டிற்கு நற்பலனை அளிப்பதற்கு பதிலாக கெடுபலனையே அளிக்கும். எனவே மிதமான உயரத்தில் வளரக்கூடிய செடிகளை வைத்து வளர்த்து வாருங்கள்.
தெற்கு திசையில் பால்கனி இருந்தால்...
வீட்டின் தெற்கு திசையில் பால்கனி உள்ளதா? அப்படியானால் இந்த திசையில் பெரிய செடிகளை வைத்து வளர்க்க அறிவுறுத்தப்படுகிறது. அதுவும் கருப்பு ஃபிகஸ், பனை செடிகள் அல்லது மதுமால்டி அல்லது பூகேன்வில்லா போன்ற சில கொடிகளில் ஒன்றை தேர்வு செய்து வளர்க்கலாம். இப்படி வளர்க்கும் போது அது பால்கனியை அழகாக வெளிக்காட்டுவதோடு, சமூகத்தில் உங்கள் மரியாதையை அதிகரிக்கும்.
பால்கனியில் வைத்து வளர்க்கக்கூடாத செடிகள்
என்ன தான் பால்கனியில் நீங்கள் செடிகளை வளர்க்க விரும்பினாலும், அனைத்துவிதமான செடிகளையும் வைத்து வளர்க்கக்கூடாது. முக்கியமாக காக்டஸ் அல்லது ரப்பர் செடிகளை வீட்டின் பால்கனியில் வைத்து வளர்க்கவே கூடாது. அதுவும் எந்த திசையில் பால்கனி இருந்தாலும், இந்த மாதிரியான செடிகளை பால்கனியில் வளர்க்கக்கூடாது.
அதோடு, பால்கனியில் செடிகளை வளர்க்கும் போது செடிகளின் இலைகள் காய்ந்து போனால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு தான் பால்கனியில் செடிகளை வளர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் நிறைய கஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications