Latest Updates
-
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம்
மறந்தும் இந்த 4 செடிகளை வீட்டின் தெற்கு திசையில் வெக்காதீங்க.. இல்ல வீட்டுல பண பிரச்சனை எப்பவும் இருக்கும்..
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தில் செடிகள் மற்றும் மரங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு செடியும் மரமும் ஒவ்வொரு கிரகங்களுடன் தொடர்புடையவை. ஆகவே பலர் கிரகங்களால் சந்திக்கும் தாக்கத்தைக் குறைக்க ஒருசில செடிகளை வீட்டில் வளர்ப்பார்கள்.
வாஸ்து சாஸ்திரத்தில் திசைகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. அதேப் போல் வீட்டில் வைக்கும் பொருட்களும், அந்த வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு பொருளையும் சரியான திசையில் வைத்தால் தான் சிறப்பான பலன்களைப் பெற முடியும்.

தவறான திசையில் வைத்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைப்பதோடு, வறுமையைக் கொண்டு வரும்.
அந்த வகையில் மரங்கள் மற்றும் செடிகளையும் சரியான திசையில் வைக்க வேண்டும். தவறான திசையில் வைத்தால், அது வீட்டின் நிதி நிலையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
திசைகளில் தெற்கு திசை முன்னோர்களின் திசையாகும். இந்த திசையில் ஒருசில செடிகளை வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். கீழே எந்த செடிகளை வீட்டின் தெற்கு திசையில் வைத்து வளர்க்கக்கூடாது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
வன்னி மரச் செடி
வாஸ்துப்படி, வன்னி மரச்செடியை வீட்டின் தெற்கு திசையில் வைப்பது அபசகுனமாக கருதப்படுகிறது. வன்னி மரமானது சனி பகவானுடன் தொடர்புடையது. வீட்டில் வன்னி மரச் செடியை வளர்த்தால் ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கலாம். அதற்கு வன்னி மரச் செடியை சரியான திசையில் வைக்க வேண்டும். வன்னி மரச்செடியை வைக்க சிறந்த திசை கிழக்கு அல்லது வடகிழக்கு மூலை தான். இதனால் சனி பகவானின் அருள் மட்டுமின்றி, வாஸ்து பகவானின் அருளும் கிட்டும்.
மணி பிளாண்ட்
அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்துடன் தொடர்புடைய செடி தான் மணி பிளாண்ட். நிறைய பேர் தங்களின் வீடுகளில் அதிர்ஷ்டத்திற்காக மணி பிளாண்ட் செடியை வளர்க்கிறார்கள். ஆனால் மணி பிளாண்ட் செடியினால் நற்பலனைப் பெற வேண்டுமானால், அதை சரியான திசையில் வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இந்த செடியை தெற்கு திசையில் வைக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது பண இழப்புக்களைத் தான் ஏற்படுத்தும். மணி பிளாண்ட் செடியை வைக்க சிறந்த திசை கிழக்கு அல்லது வடக்கு தான். இப்படி செய்வதன் மூலம் லட்சுமி தேவியின் அருளால் செல்வம் பெருகும்.
வாழை மரம்
வாஸ்துப்படி, வாழை மரம் விஷ்ணு பகவானுடன் தொடர்புடையது. மேலும் இது குரு பகவானுடனும் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இந்த வாழை மரத்தை வீட்டில் வைத்தால், அதை ஒவ்வொரு வியாழக்கிழமையும் வழிபட வேண்டும். வாழைமரத்தை எப்போதும் வீட்டிற்குள் வைத்து வளர்க்கக்கூடாது. அதேப் போல் தெற்கு திசையிலும் இந்த மரத்தை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாகக்கூடும். வாழைமரத்தை வைக்க சிறந்த திசை என்றால், அது வடக்கு அல்லது கிழக்கு தான்.
ரோஸ்மேரி செடி
ரோஸ்மேரி நல்ல மணத்தைக் கொண்ட செடி. வாஸ்துப்படி இந்த ரோஸ்மேரி செடியை வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது. இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் சுற்றும். இதன் விளைவாக உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆனால் இந்த ரோஸ்மேரி செடியை வீட்டின் தெற்கு திசையில் வைத்து வளர்க்கக்கூடாது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications