வாஸ்துப்படி, மறந்தும் வீட்டில் இந்த போட்டோக்களை தொங்கவிடாதீங்க... இல்ல பிரச்சனை தான் அதிகரிக்கும்...

Vastu Tips In Tamil: நாம் ஒவ்வொருவருமே வீட்டை அழகாக வைத்துக் கொள்ள விரும்புவோம். அதற்காக வீட்டில் பல அழகான பொருட்களை வாங்கி வைத்து அலங்கரிப்போம். பலரும் வீட்டின் சுவர்கள் அலங்கரிக்க போட்டோக்களைக் கொண்டு அலங்கரிப்பார்கள்.

ஆனால் வீட்டில் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருட்களுமே அந்த வீட்டில் உள்ள நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே வீட்டின் சுவற்றில் போட்டோக்களை தொங்கவிடும் போது, எந்த மாதிரியான போட்டோக்களை வைக்கலாம், வைக்கக்கூடாது என்பதை அறிந்து, பின்னரே தொங்கவிட வேண்டும்.

Vastu Tips: Never Hang These Photos On the Wall At Home In Tamil

ஏனெனில் சில வகையான போட்டோக்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரித்து, பலவிதமான பிரச்சனைகள் வர வழிவகுக்கும். உங்களுக்கு வீட்டில் எந்த மாதிரியான போட்டோக்களை வைக்கலாம், வைக்கக்கூடாது என்பது குறித்து தெரியதெனில், இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனென்றால் கீழே வாஸ்துப்படி வீட்டின் சுவற்றில் எந்த மாதிரியான போட்டோக்களை தொங்கவிடக்கூடாது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

மூன்று பேர் இருக்கும் போட்டோக்கள்

வீட்டின் சுவற்றில் குடும்ப உறுப்பினர்களின் போட்டோக்களை தொங்க விட நிறைய பேர் விரும்புவோம். ஆனால் வாஸ்துப்படி இப்படி குடும்ப உறுப்பினர்களின் போட்டோக்களை தொங்கவிடும் போது ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் இருக்கும் போட்டோக்களை வீட்டில் வைக்கக்கூடாது அப்படி வைப்பது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. அதேப் போல் மூன்று நண்பர்கள் இருக்கும் போட்டோக்களையும் வைக்கக்கூடாது. அது நட்பில் விரிசலை ஏற்படுத்தும்.

நீர்வீழ்ச்சி போட்டோ

மலையில் இருந்து நீர் விழுவது போன்ற போட்டோக்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம். ஆனால் அந்த போட்டோக்களை வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல. வாஸ்துப்படி, இம்மாதிரியான போட்டோக்களை வீட்டின் சுவற்றில் தொங்கவிட்டால், வீட்டில் பணச் செலவு அதிகமாக இருக்கும். எனவே இம்மாதிரியான போட்டோக்களை வைக்கக்கூடாது.

அனைத்து அறையிலும் கடவுள் போட்டோ கூடாது

வீட்டில் கடவுள் படங்களை வைத்திருப்பது நல்லது. ஆனால் அந்த தெய்வங்களின் போட்டோக்களை வீட்டின் அனைத்து சுவர்களிலும் தொங்கவிடக்கூடாது. வாஸ்துப்படி, அவ்வாறு தொங்க விடுவது, வீட்டில் லாபத்திற்கு பதிலாக நஷ்டத்தையே ஏற்படுத்தும். மேலும் எப்போதும் தெய்வங்களின் போட்டோக்களை படுக்கை அறையில் தொங்கவிடக்கூடாது. பூஜை அறை மற்றும் ஹாலில் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.

சூரியன் அஸ்தமனமாகும் போட்டோ

சூரியன் அஸ்தமனமாகும் காட்சி பார்க்க அழகாக இருக்கும். இந்த அழகான காட்சியை சிலர் வீட்டின் சுவற்றில் அழகிற்காக தொங்கவிடலாம். ஆனால் இம்மாதிரியான போட்டோக்களை வீட்டில் ஒருபோதும் வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது வீட்டில் உள்ளோருக்கு விரக்தியையும், முன்னேற்றத்தில் தடையையும் ஏற்படுத்தும்.

ஆந்தையுடன் லட்சுமி தேவி போட்டோ

ஆந்தை லட்சுமி தேவியின் வாகனமாக இருக்கலாம். ஆனால் ஆந்தையுடன் லட்சுமி தேவி இருக்குமாறான போட்டோவை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. இல்லாவிட்டால், அது வீட்டில் பிரச்சனைகளை அதிகரிக்கும். எனவே இந்த தவறை செய்யாதீர்கள்.

போர் புரிவது போன்ற போட்டோ

வாஸ்துப்படி, வீட்டில் விலங்குகள் சண்டை போடுவது அல்லது போர் புரிவது போன்ற போட்டோக்களை வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்தால், அது வீட்டில் பதற்றத்தை அதிகரித்து, எப்போதும் பிரச்சனைகள் இருந்தவாறே இருக்கும். எனவே வீட்டின் அமைதியை கெடுக்கும் இந்த மாதிரியான போட்டோக்களை வீட்டில் வைத்திருக்காதீர்கள்.

காட்டு விலங்குகளின் போட்டோ

காட்டு விலங்குகள் வேட்டையாடுபவை. வன்முறையில் ஈடுபடும் விலங்குகளின் போட்டோக்களை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டில் உள்ளோருக்கு இடையே சண்டைகளை அதிகரித்து, பரஸ்பர உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, May 29, 2023, 17:55 [IST]
Desktop Bottom Promotion