Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சமையலறை மற்றும் படுக்கையறையில் இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல பண நெருக்கடியை சந்திப்பீங்க..
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தில் திசைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒருவர் குடியிருக்கும் வீடு சரியான வாஸ்து விதிகளுடன் கட்டப்பட்டால், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும்.
நேர்மறை ஆற்றல் நிறைந்துள்ள வீட்டில் உள்ளோர் தங்கள் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதுவே எதிர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் வீட்டில் இருந்தால், அவர் தங்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

எனவே நீங்கள் வரவர அதிக பண பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அதற்கு உங்கள் வீட்டில் நீங்கள் செய்யும் தவறுகள் காரணமாக இருக்கலாம். குறிப்பாக சமையலறை மற்றும் படுக்கையறையில் செய்யும் சில தவறுகள் நிதி நெருக்கடியை உண்டாக்கும். இப்போது வாஸ்துப்படி படுக்கை அறை மற்றும் சமையலறையில் எந்த மாதிரியான தவறுகளை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.
சமையலறையில் செய்யக்கூடாதவைகள்
* வாஸ்துப்படி சமையலறையானது வீட்டின் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். மேலும் சமைக்கும் நபர் கிழக்கு திசையை நோக்கியவாறு இருக்க வேண்டும். மேலும் சமையலறையில் எப்போதும் உணவுகளை உண்ணக்கூடாது.
* சமையலறையில் பயன்படுத்தும் கனமான பொருட்களை எப்போதும் சமையலறையின் தென்மேற்கு சுவற்றில் தான் வைக்க வேண்டும்.
* சமையலறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியில் அழுக்கு பாத்திரங்களை நிரப்பி வைக்கக்கூடாது. இப்படி அழுக்கு பாத்திரங்களை நிரப்பி வைத்தால், அன்னப்பூரணி தேவி கோபம் கொண்டு, வீட்டில் பண பிரச்சனைகளை மட்டுமின்றி, உணவுப் பற்றாக்குறையையும் சந்திக்க வைப்பார். எனவே இந்நிலை வரக்கூடாதெனில் சமையலறை சின்க்கை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
* முக்கியமாக வீட்டில் உள்ள சமையலறையானது பாத்ரூம்மிற்கு எதிரில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அது வீட்டில் வாஸ்து தோஷத்தை உண்டாக்குவதோடு, பண இழப்புக்களையும் உண்டாக்கும்.
* சமையலறையின் நிறமானது மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். அதாவது வெளிரிய நிற பெயிண்ட்டை தான் பயன்படுத்த வேண்டும். இப்படி பயன்படுத்தும் போது வீட்டில் பண பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது.
படுக்கை அறையில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்
* நிறைய பேர் தங்கள் படுக்கை அறையில் சாப்பிட விரும்புவார்கள். ஆனால் இப்படி படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவது நல்லதல்ல. வாஸ்துப்படி, படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவது லட்சுமி தேவியை அதிருப்தி அடையச் செய்யும். இதன் விளைவாக மிகுந்த வறுமையை சந்திக்க நேரிடும்.
* படுக்கையில் உணவுகளை உண்பதைத் தவிர, படுக்கையில் அமர்ந்து காபி, டீ, ஜூஸ் குடித்துவிட்டு, அதன் டம்ளரை அப்படியே வைத்துவிடுவார்கள். இப்படி வைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை பரப்பி, பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
* முக்கியமாக வாஸ்துப்படி தலையணைக்கு அடியில் எதையும் வைத்து தூங்கக்கூடாது. அப்படி தூங்கினால், அது ஒருவரது முன்னேற்றத்தைத் தடுக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications